உலகக் கிண்ணத்திற்கு முன் ஸ்கொட்லாந்தை எதிர்கொள்ளும் இலங்கை அணி

1712

இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் கிரிக்கெட் உலகக் கிண்ணத்திற்கு முன்னதாக, இலங்கை கிரிக்கெட் அணி ஸ்கொட்லாந்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஸ்கொட்லாந்து கிரிக்கெட் அணியுடன் இரண்டு ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

55 வருட வரலாற்று சாதனையுடன் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிராக கொழும்பு எஸ்…..

இலங்கைஸ்கொட்லாந்து அணிகள் இடையிலான இந்த ஒரு நாள் தொடர் அடுத்த ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி தொடக்கம் 21ஆம் திகதி வரையில் நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியுடன் நடைபெறவுள்ள ஒரு நாள் தொடரை எதிர்பார்த்து மகிழ்ச்சியுடன் இருப்பதாக கருத்து வெளியிட்ட ஸ்கொட்லாந்து கிரிக்கெட் அணியின் தலைவரான கைல் கொயெட்சர் இவ்வாறு பேசியிருந்தார்.

“ (.சி.சி.) இன் முழு அங்கத்துவம் பெற்ற மற்றுமொரு அணியுடன் ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதை மிகவும் உற்சாகத்தோடு எதிர்பார்த்திருக்கின்றோம். 2018ஆம் ஆண்டு எங்களுக்கு வெற்றிகரமாக அமைந்ததனை அடுத்து நாங்கள் (இலங்கையுடனான) சவால்களை எதிர்கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும். இதேநேரம், ஸ்கொட்லாந்து இரசிகர்களும், உலகில் பரந்து காணப்படும் கிரிக்கெட் சமூகமும் (இந்த ஒரு நாள் தொடரை) மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். “

இலங்கைக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்கொட்லாந்துக்கு வரலாற்று வெற்றி

இலங்கை அணியுடனான உத்தியோகபூர்வமற்ற ….

இரண்டு அணிகளும் முன்னதாக இரண்டு ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளதோடு, அப்போட்டிகள் இரண்டிலும் இலங்கை அணி வெற்றி பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

எனினும், கடந்த ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக பர்மிங்கமில் நடைபெற்ற உத்தியோகபூர்வமற்ற 50 ஓவர்கள் கொண்ட போட்டியொன்றில் ஸ்கொட்லாந்து அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றியினை பதிவு செய்திருந்தது. அதோடு, ஒரு நாள் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணியினையும் ஸ்கொட்லாந்து அணி இந்த ஆண்டு தோற்கடித்திருந்தது. இதனால், நடைபெறவுள்ள ஒரு நாள் தொடர் விறுவிறுப்புக்கு சற்றும் பஞ்சம் இல்லாத ஒன்றாக காணப்படும் என கூறப்படுகின்றது.

இதேவேளை, இலங்கைஸ்கொட்லாந்து அணிகள் இடையிலான ஒரு நாள் போட்டிகள் நடைபெறவுள்ள மைதானங்களின் விபரம் ஸ்கொட்லாந்து அணியின் கிரிக்கெட் சபையினால் எதிர்வரும் டிசம்பர் மாதம் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<