ஒரு நாள் தொடரில் இலங்கையை வைட் வொஷ் செய்த பாகிஸ்தான்

397

ஐக்கிய அரபு இராச்சியத்தின் சார்ஜாஹ் நகரில்  நடைபெற்று முடிந்திருக்கும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடரின் ஐந்தாவது போட்டியில் 9 விக்கெட்டுக்களால் இலங்கை அணியினை அபாரமாக வீழ்த்தியிருக்கும் பாகிஸ்தான் தொடரில் 5 – 0 என வைட் வொஷ் வெற்றியையும் பதிவுசெய்துள்ளது.

சரித்திரத்தில் மற்றுமொரு மோசமான நிலையில் இலங்கை

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு…

இரண்டு அணிகளுக்கும் இடையிலான ஒரு நாள் தொடரின் இறுதிப் போட்டியிலும் (நான்காவது தடவையாக)  நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் உபுல் தரங்க முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்திருந்தார்.  

இலங்கை அணியில் இன்றைய போட்டிக்காக மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. விஷ்வ பெர்னாந்து, துஷ்மந்த சமீர, ஜெப்ரி வன்டர்சேய் ஆகிய வீரர்கள் அணியில் உள்வாங்கப்பட அகில தனன்ஜய, லஹிரு கமகே மற்றும் சுரங்க லக்மால் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்தது.

மறுமுனையில் பாகிஸ்தான், ஜூனைத் கானுக்குப் பதிலாக பாஹிம் அஷ்ரப்புக்கு வாய்ப்பு தந்திருந்தது.

தொடர்ந்து துடுப்பாட மைதானம் விரைந்த இலங்கை அணி வழமைக்கு மாற்றமாக உபுல் தரங்க மற்றும்  சதீர சமரவிக்ரம ஆகியோருடன் தமது துடுப்பாட்டத்தினை ஆரம்பம் செய்திருந்தது.

முதல் ஓவரிலேயே ஓட்டமேதுமின்றி சதீர சமரவிக்ரம பாகிஸ்தானின் இளம் வீரர் உஸ்மான் கானினால் போல்ட் செய்யப்பட்டிருந்தார். இதன்மூலம் தனது இரண்டாவது சர்வதேச ஒரு நாள் போட்டியிலும் அவர் ஓட்டமேதுமின்றி ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து மைதானம் விரைந்த தினேஷ் சந்திமாலும் வந்தகதியிலேயே மீண்டும் ஓட்டங்கள் எதனையும் குவிக்காது ஓய்வறை நடந்தார். இதுவும் இத்தொடரில் அவர் காண்பித்த பெரிa ஏமாற்றமாகும்.

பாகிஸ்தான் அணிக்கெதிரான இலங்கை T20 குழாம் அறிவிப்பு

பாகிஸ்தானுக்கு எதிரான T20 தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை குழாமை இலங்கை கிரிக்கெட்…

அதோடு அணித் தலைவர் உபுல் தரங்கவும் 8 ஓட்டங்களுடன் மோசமான இன்னிங்ஸ் ஒன்றினை வெளிப்படுத்தி ஆட்டமிழந்தார். இன்றைய போட்டியில் ஐந்தாம் இலக்க வீரராக களம் நுழைந்த நிரோஷன் திக்வெல்லவும் ஓட்டம் எதனையும் சேர்க்கவில்லை. இதனால் போட்டியில் ஆரம்பத்திலேயே 8 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை பறிகொடுத்து இலங்கை மிகவும் இக்கட்டான நிலைக்கு ஆளானது.

மத்திய வரிசையில் இலங்கை அணிக்கு கைகொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட லஹிரு திரிமான்னவும் மோசமாக செயற்பட்டிருந்தார். தொடர்ந்து பாகிஸ்தானின் அதிரடிப் பந்துவீச்சினால் ஓட்டங்கள் சேர்க்க தடுமாறிய இலங்கை அணி 26.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 103 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பாக திசர பெரேரா அதிகபட்சமாக  25 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார். ஏனைய அனைத்து துடுப்பாட்ட வீரர்களும் இருபதுக்கு குறைவான ஓட்டங்களையே பெற்றிருந்தனர்.

பந்துவீச்சில் இலங்கை அணியினை மிரட்டிய பாகிஸ்தான் அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் உஸ்மான் கான் வெறும் 34 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை கைப்பற்றி ஒரு நாள் போட்டிகளில் தனது சிறந்த பந்துவீச்சினை பதிவு செய்திருந்தார். அதோடு சதாப் கான் மற்றும் ஹசன் அலி ஆகிய வீரர்களும் தங்களது பங்கிற்கு தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.  

தொடர்ந்து இலகு வெற்றியிலக்கான 104 ஓட்டங்களை 50 ஓவர்களில் பெற பதிலுக்கு ஆடிய பாகிஸ்தான் அணி 20.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 105 ஓட்டங்களுடன் போட்டியின் வெற்றியாளர்களாக மாறியதுடன் இலங்கை அணியினை இந்த ஒரு நாள் தொடரில் 5-0 என வைட் வொஷ் செய்திருந்தது.

இலங்கை அணிக்கு எதிரான இந்திய டெஸ்ட் குழாம் அறிவிப்பு

இதனடிப்படையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணியின்…

பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தில் ஆரம்ப வீரர்களான பக்கார் ஷமான் 48 ஓட்டங்களினையும் இமாம் உல் ஹக் ஆட்டமிழக்காது 45 ஓட்டங்களினையும் சேர்த்து அணியினை வெற்றியாளர்களாக மாற்றினர்.

பாகிஸ்தானை டெஸ்ட் தொடரில் வைட் வொஷ் செய்திருந்த போதிலும் ஒரு நாள் தொடர் இலங்கை வீரர்களுக்கு எதிர்பார்த்தது போன்று அமையவில்லை. இப்படுதோல்வி மூலம் ஒரு நாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 12 ஆவது தோல்வியினை சந்தித்த இலங்கை அணி 2017ஆம் ஆண்டில் மூன்றாவது தடவையாக ஒரு நாள் தொடரொன்றில் வைட் செய்யப்பட்டிருக்கின்றது.

அதோடு பாகிஸ்தான் அணிக்கு 2008ஆம் ஆண்டின் பின்னர் 5-0 எனக் கிடைத்த முதலாவது வைட் வொஷ் வெற்றி இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட T-20 தொடர் வியாழக்கிழமை (26) அபுதாபியில் ஆரம்பமாகின்றது.

போட்டியின் சுருக்கம்