பாகிஸ்தானுடனான இரண்டாவது போட்டியில் இலங்கை களத்தடுப்பில்

176

ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடரின் இரண்டாவது போட்டி சற்று முன்னர் அபுதாபி ஷேய்க் செய்யத் சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்றிருக்கும் பாகிஸ்தான் அணியின் தலைவர் சர்பராஸ் அஹ்மட் முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்துள்ளார்.

டெஸ்ட் தொடரில் தாம் இலங்கையிடம் தோல்வியடைந்தமைக்கு துபாயில் நடைபெற்ற முதலாவது ஒரு நாள் போட்டியில் 83 ஓட்டங்களால் வெற்றி பெற்று பதிலடி தந்த பாகிஸ்தான் அணி 1-0 என ஐந்து போட்டிகள் கொண்ட  தொடரில் முன்னிலை வகிக்கின்றது. தாம் விளையாடிய இறுதி 8 ஒரு நாள் போட்டிகளிலும் தோல்வியினை தழுவியிருக்கும் இலங்கை அணியினர் தம்முடைய தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கோடும்  இந்த ஒரு நாள் தொடரினை சமநிலைப்படுத்தும் எதிர்பார்ப்புக்களோடும் இன்றைய ஆட்டத்தில் களம் காணுகின்றனர்.

உப்புல் தரங்க தலைமையிலான இலங்கை அணியும் பாகிஸ்தான் அணியும் எந்தவித மாற்றங்களையும் இன்றைய போட்டியில் மேற்கொள்ளவில்லை முதல் போட்டியில் விளையாடிய அதே அணிகளே இன்றைய போட்டியிலும் தம்மிடையே மோதிக்கொள்கின்றன.

இலங்கை அணிநிரோஷன் திக்வெல்ல(விக்கெட் காப்பாளர்), உப்புல் தரங்க (அணித்தலைவர்), குசல் மெண்டிஸ், லஹிரு திரிமான்ன, தினேஷ் சந்திமால், மிலிந்த சிறிவர்த்தன, திசர பெரேரா, சுரங்க லக்மால், அகில தனன்ஞய, ஜெப்ரி வன்டர்சேய், லஹிரு கமகே

பாகிஸ்தான் அணி அஹ்மட் ஷேசாத், பக்கர் ஷமான்,  பாபர் அசாம், சொஹைப் மலிக், மொஹமட் ஹபீஸ், சர்பராஸ் அஹ்மட் (அணித்தலைவர் & விக்கெட் காப்பாளர்), இமாத் வஸீம், ருமான் ரயீஸ், சதாப் கான், ஹசன் அலி, ஜூனைத் கான்