இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான சுற்றுத்தொடர் விபரம்

1993

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமானது (PCB) இலங்கை கிரிக்கெட் அணியின் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கான சுற்றுப் பயணத்தின் போது நடைபெறவுள்ள போட்டிகளின் அட்டவணையை வெளியிட்டுள்ளது.

இலங்கையின் இந்த சுற்றுத் தொடர் இரண்டு டெஸ்ட் போட்டிகளையும், ஐந்து ஒரு நாள் போட்டிகளையும், மூன்று T-20 போட்டிகளையும் கொண்டதாக அமைந்துள்ளது. இத்தொடரின் இறுதி T-20 போட்டி (பாதுகாப்பு விடயங்கள் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில்) பாகிஸ்தானின் லாஹூர் நகரில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி இடம்பெறும்.

இத்தொடர் செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதி நடைபெறவுள்ள, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருடன் ஆரம்பமாகின்றது. டுபாய் மைதானத்தில் ஒக்டோபர் மாதம் 6 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை நடைபெறும் இத்தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.

இத்தொடரின் ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர், ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி  நடைபெறும் போட்டியுடன் ஆரம்பமாகவுள்ளது. ஒரு நாள் போட்டிகள் யாவும் டுபாய், அபுதாபி மற்றும் சார்ஜாஹ் ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளது. அனைத்து போட்டிகளும் பகலிரவு ஆட்டங்களாக நடைபெறும்.

இதற்கு மேலதிகமாக, தொடரின் முதல் இரண்டு T-20 போட்டிகளும் அபுதாபி நகரில் இடம்பெறவுள்ளது. தொடரின் மூன்றாவது T-20 போட்டி பாகிஸ்தானின் லாஹூரில் நடைபெறவுள்ளதால். இலங்கை அணியுடனான இத்தொடரும், உலக பதினொருவர் அணியின் பாகிஸ்தானுக்கான தொடரும் அந்நாட்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் நடைபெறுவதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலை கிரிக்கெட்டை மீட்டெடுக்க கல்வி அமைச்சு விசேட வேலைத்திட்டம்

இலங்கை கிரிக்கெட் அணி, இத்தொடரில் பங்குபற்றுவதற்காக செப்டம்பர் மாதம் 25 ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பயணமாகின்றது.

தொடரின் முழு அட்டவணை

டெஸ்ட் தொடர்

முதலாவது டெஸ்ட் போட்டி – செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி வரை – அபுதாபி

இரண்டாவது டெஸ்ட் போட்டி – ஒக்டோபர் மாதம் 6 ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி வரை – டுபாய் (பகலிரவு ஆட்டம்)

ஒரு நாள் தொடர்

முதலாவது ஒரு நாள் போட்டி – ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி – டுபாய்

இரண்டாவது ஒரு நாள் போட்டி – ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி – அபுதாபி

மூன்றாவது ஒரு நாள் போட்டி – ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதி – அபுதாபி

நான்காவது ஒரு நாள் போட்டி – ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி – சார்ஜாஹ்

ஐந்தாவது ஒரு நாள் போட்டி – ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி – சார்ஜாஹ்

T-20 தொடர்

முதலாவது T-20 போட்டி – ஒக்டோபர் மாதம்  26 ஆம் திகதி – அபுதாபி

இரண்டாவது T-20 போட்டி – ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி – அபுதாபி

மூன்றாவது T-20 போட்டி – ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி – லாஹூர் (பாதுகாப்பு  விடயங்கள் உறுதிப்படுத்தும் பட்சத்தில்)