நியூசிலாந்து அணியுடன் இலங்கையின் கடந்தகாலப் போட்டிகள் எப்படி இருந்தன?

1491
Getty images

கடந்த ஆண்டில் மிகவும் கசப்பான அனுபவங்களை மட்டுமே பெற்ற இலங்கை கிரிக்கெட் அணிக்கு இந்த ஆண்டு ஓரளவு பரவாயில்லை எனக் கூறும்படியே அமைந்தது. ஆனாலும், சென்ற மாதம் இங்கிலாந்துடன் சொந்த மண்ணில் வைத்து மூவகை தொடர்களையும் பறிகொடுத்த இலங்கை அணி, தமது அண்மைய வடுக்களுக்கு களிம்பு தேடிய வண்ணம் நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கின்றது.

இலங்கைக்கு எதிரான நியுசிலாந்து டெஸ்ட் குழாம் அறிவிப்பு

ஐக்கிய அரபு இராச்சியத்தில் வைத்து பாகிஸ்தானை 2-1 என வீழ்த்தி வரலாற்று …

நியூசிலாந்தில் உள்ள இலங்கை கிரிக்கெட் அணி, அந்நாட்டு கிரிக்கெட் அணியுடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் ஒரு போட்டி கொண்ட T20 தொடர் என்பவற்றில் ஆடவுள்ளது. அந்தவகையில், இந்த சுற்றுப் பயணத்தில் முதற்கட்டமாக இலங்கை  கிரிக்கெட் அணி, நியூசிலாந்து கிரிக்கெட் அணியுடன் இம்மாதம் 15ஆம் திகதி முதல் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

இந்த டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இலங்கைநியூசிலாந்து அணிகள் இடையில் இடம்பெற்ற கடந்த கால கிரிக்கெட் போட்டிகள் எப்படி இருந்தது என்பது பற்றியும், அப்போட்டிகளில் சிறந்த பதிவுகளை வெளிக்காட்டிய வீரர்கள் யார்? யார்? என்பதையும் ஒரு தடவை மீட்டுவோம்.

கடந்த காலம்

டெஸ்ட் போட்டிகள்

நேப்பியர் நகரில் வைத்து 1995ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டி ஒன்றில் இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தை தோற்கடித்து நியூசிலாந்து மண்ணில் முதல் டெஸ்ட் வெற்றியினை பதிவு செய்தது.

அப்போதைய நாட்களில் இலங்கைக்கு கௌரவமாக இருந்த இந்த டெஸ்ட் வெற்றி கிடைத்த போட்டியுடன் இரண்டு அணிகளும் இதுவரையில் 32 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கின்றன.

இலங்கைநியூசிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டிகளின் முடிவுகள்

  • மொத்த டெஸ்ட் போட்டிகள் – 32
  • நியூசிலாந்து வெற்றி – 14 போட்டிகள்
  • இலங்கை வெற்றி – 8 போட்டிகள்
  • சமநிலை அடைந்த போட்டிகள் – 10

நியூசிலாந்து செல்லும் இலங்கை அணியில் முக்கிய மாற்றங்கள்

நியூசிலாந்து அணிக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட …

மேலே உள்ள சாராம்சத்தின் மூலம் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து அணியே ஆதிக்கம் காட்டியிருக்கின்றதை அறியக் கூடியதாக உள்ளது. இதேநேரம், இரு அணிகளுக்கும் இடையே கடைசியாக நடைபெற்று முடிந்த ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் நியூசிலாந்து அணியே வெற்றி பெற்றிருந்ததோடு இலங்கை அணி கடைசியாக நியூசிலாந்து அணியுடன் 2012ஆம் ஆண்டிலேயே டெஸ்ட் வெற்றி ஒன்றினை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த டெஸ்ட் வெற்றி இலங்கையின் சொந்த மண்ணில் வைத்து பெறப்பட்டிருந்த நிலையில், கடந்த 12 ஆண்டுகளாக இலங்கை அணி நியூசிலாந்தில் டெஸ்ட் வெற்றிகள் எதனையும் பெறவில்லை என்பதும் குறிப்பிடப்பட வேண்டிய விடயமாகும். எனவே, ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் தொடரில் இலங்கை அணி வெற்றிகள் எதனையும் பெறுமாயின் அது இலங்கை அணிக்கு பிரபல்யம் வாய்ந்த  டெஸ்ட் வெற்றியாக இருக்கும்.

ஒரு நாள் போட்டிகள்

இரண்டு அணிகளும் 2015ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியிலேயே கடைசியாக ஒரு நாள் தொடர் ஒன்றில் விளையாடியிருந்தன. நியூசிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்டதாக இடம்பெற்ற குறித்த ஒரு நாள் தொடரை நியூசிலாந்து அணி 3-1 எனக் கைப்பற்றியிருந்தது.

இந்த ஒரு நாள் தொடரின் போட்டிகளோடு சேர்த்து இரண்டு அணிகளும் இதுவரையில் 95 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்கின்றன. அந்த ஒரு நாள் போட்டிகளின் சாராம்சம்…..

  • மொத்த ஒரு நாள் போட்டிகள் – 95
  • நியூசிலாந்து வெற்றி – 45 போட்டிகள்
  • இலங்கை வெற்றி – 41 போட்டிகள்
  • சமநிலை அடைந்த போட்டிகள் – 1
  • கைவிடப்பட்ட போட்டிகள் – 8  

T20 போட்டிகள்

இலங்கை அணி 2014ஆம் ஆண்டில் T20 உலகக் கிண்ணத்தை கைப்பற்ற முக்கிய காரணமாக அமைந்தது நியூசிலாந்து அணியுடனான குழுநிலைப் போட்டியாகும். குறித்த குழுநிலைப் போட்டியில் நியூசிலாந்து வீரர்களை இலங்கை அணியினர் தோற்கடிக்காது போயிருந்தால் குறித்த T20 உலகக் கிண்ணத்தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியிருக்க முடியாது. இலங்கை அணியின் சுழல் கதாநாயகனான ரங்கன ஹேரத் அசத்திய அந்த குழுநிலை T20 போட்டியோடு சேர்த்து இரண்டு அணிகளும் இதுவரையில் 15 T20 போட்டிகளில் விளையாடியுள்ளன.

இரு அணிகளுக்கும் இடையே இடம்பெற்ற T20 போட்டிகளின் சாராம்சம்….

  • T20 போட்டிகள் – 15
  • நியூசிலாந்து வெற்றி – 7 போட்டிகள்
  • இலங்கை வெற்றி – 7 போட்டிகள்
  • கைவிடப்பட்ட போட்டிகள் – 1

இரு அணிகளிளுக்குமிடையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஓட்டங்கள், விக்கெட்டுக்கள் கைப்பற்றிய வீரர்கள்

டெஸ்ட்  போட்டிகளில் அதிக ஓட்டங்கள் பெற்ற வீரர்கள்

ஸ்டீபன் பிளமிங்

நியூசிலாந்து அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும் அணித் தலைவருமான ஸ்டீபன் பிளமிங் இலங்கைநியூசிலாந்து அணிகள் இடையில் இதுவரையில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரராக காணப்படுகின்றார். இலங்கை அணியுடன் 13 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள பிளமிங் 2 சதங்கள் மற்றும் 7 அரைச்சதங்கள் அடங்கலாக 1,166 ஓட்டங்களை குவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

afp

Photos : Sri Lanka Vs. England | 3rd Test | Day 1

ThePapare.com | Viraj Kothalawala | 23/11/2018 Editing and re-using images without …

மஹேல ஜயவர்தன  

இலங்கைநியூசிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டிகளில் இலங்கை சார்பாக அதிக ஓட்டங்கள் குவித்த வீரராக இலங்கையின் முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜயவர்தன உள்ளார். பிளமிங் போன்று நியூசிலாந்து அணிக்கு எதிராக 13 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள மஹேல, அந்த போட்டிகளில் 48.95 என்கிற துடுப்பாட்ட சராசரியோடு 1,028 ஓட்டங்களை குவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Getty Images

அகில தனஞ்சயவுக்கு சர்வதேச போட்டிகளில் பந்துவீசத் தடை

இலங்கை அணியின் இளம் சுழல் வீரரான அகில தனஞ்சயவின் பந்துவீச்சுப்பாணி முறையற்ற …

ஒரு நாள்  போட்டிகளில் அதிக ஓட்டங்கள் பெற்ற வீரர்கள்

குமார் சங்கக்கார

இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான குமார் சங்கக்காரவே இலங்கைநியூசிலாந்து அணிகள் இடையே இதுவரையில் நடைபெற்ற ஒரு நாள் போட்டிகளில் தனிநபராக அதிக ஓட்டங்கள் பெற்றிருக்கின்றார்.

நியூசிலாந்து அணிக்கு எதிராக 47 ஒரு நாள் போட்டிகளில் ஆடியுள்ள சங்கக்கார 2 சதங்கள், 12 அரைச்சதங்கள் அடங்கலாக 1,568 ஓட்டங்களை மொத்தமாக பெற்றிருக்கின்றார்.

AFP

நதன் அஸ்ல்

நியூசிலாந்து அணியின் சார்பில் இலங்கைநியூசிலாந்து அணிகள் இடையிலான ஒரு நாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் பெற்ற வீரராக நதன் அஸ்ல் உள்ளார். அஸ்ல்  ஒரு நாள் போட்டிகளில் இலங்கை அணிக்கு எதிராக இதுவரையில் 760 ஓட்டங்களை குவித்துள்ளார்.

Getty Images

T20 போட்டிகளில் அதிக ஓட்டங்கள் பெற்ற வீரர்கள்

திலகரட்ன டில்சான்

இரண்டு அணிகளும் குறைவான T20 போட்டிகளிலேயே இதுவரையில் மோதியிருக்கின்ற போதிலும் அப்போட்டிகளில் அதிக ஓட்டங்களை பெற்ற வீரராக இலங்கை அணியின் முன்னாள் அதிரடி துடுப்பாட்ட வீரரான திலகரட்ன டில்சான் உள்ளார். டில்சான் 14 T20 போட்டிகளில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடி இதுவரையில் 3 அரைச்சதங்களோடு 324 ஓட்டங்களை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Associated Press

இனி நாணய சுழற்சி இல்லை; அறிமுகமாகிறது துடுப்பாட்ட மட்டை சுழற்சி

அவுஸ்திரேலியாவில் இம்மாதம் ஆரம்பமாகவுள்ள பிக்பேஷ் லீக் கிரிக்கெட் …

மார்டின் கப்டில்

இலங்கைக்கு எதிராக T20யில் நியூசிலாந்து அணி சார்பில் அதிக ஓட்டங்கள் பெற்ற வீரராக மார்டின் கப்டில் காணப்படுகின்றார். இலங்கை அணிக்கு எதிராக 9 T20 போட்டிகளில் ஆடியுள்ள கப்டில், 297 ஓட்டங்களை குவித்துள்ளார்.

கப்டில் இப்போதும் சர்வதேச போட்டிகளில் ஆடிவருகின்ற காரணத்தினால் இலங்கை அணியுடன் நடைபெறவுள்ள அடுத்த தொடரில் நியூசிலாந்து அணிக்கு பலம் சேர்க்க கூடியவராகவும் இருக்கின்றார்.

Getty Images

டெஸ்ட்  போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரர்கள்

முத்தையா  முரளிதரன்

இலங்கை அணியின் சுழல் ஜாம்பவனாகிய முரளிதரனே இரண்டு அணிகளும் இதுவரையில் ஆடிய டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய பந்துவீச்சாளராக உள்ளார்.

AFP

நியூசிலாந்து அணிக்கு எதிராக 14 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள முரளி அதில் 21.53 என்கிற சிறந்த சராசரியுடன் 82 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

டேனியல் விட்டோரி

இலங்கைநியூசிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய நியூசிலாந்து பந்துவீச்சாளர்களில் முதல் இடத்தில் முன்னாள் சுழல் வீரரான டேனியல் விட்டோரி காணப்படுகின்றார்.

AFP

இலங்கை அணியுடன் 11 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள விட்டோரி 51 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருக்கின்றார்.

ஒரு நாள்  போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரர்கள்

முத்தையா முரளிதரன்

டெஸ்ட் போட்டிகள் போன்று இரண்டு அணிகளும் மோதிய ஒரு நாள் போட்டிகளிலும் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய பந்துவீச்சாளராக இலங்கை அணியின் முத்தையா முரளிதரனே காணப்படுகின்றார். நியூசிலாந்து அணியுடன் 41 ஒரு நாள் போட்டிகளில் ஆடியுள்ள முரளிதரன் அவற்றில் 74 விக்கெட்டுக்களை சாய்த்திருக்கின்றார்.

Getty Images

கைல் மில்ஸ்

நியூசிலாந்து அணி சார்பாக அதிக விக்கெட்டுக்களை சாய்த்த பந்துவீச்சாளராக கைல் மில்ஸ் காணப்படுகின்றார். வேகப்பந்து வீச்சாளரான கைல் மில்ஸ் இலங்கை அணியுடன் 21 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 32 விக்கெட்டுக்களை சாய்த்துள்ளார்.

Getty images

இலங்கையை வீழ்த்திய அதே இங்கிலாந்து டெஸ்ட் குழாம் மேற்கிந்திய தீவுகள் பயணம்

அடுத்த ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து …

T20 போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரர்கள்

அஜந்த மெண்டிஸ்

இலங்கை அணியின் மற்றுமொரு சுழல் ஜாம்பவனாகிய அஜந்த மெண்டிஸ் இலங்கைநியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான T20 போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய பந்துவீச்சாளராக இருக்கின்றார். நியூசிலாந்து வீரர்களுடன் 8 T20 போட்டிகளில் ஆடியுள்ள மெண்டிஸ் அவற்றில் 12 விக்கெட்டுக்களை சுருட்டியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

AFP

நதன் மெக்கலம்

இலங்கைநியூசிலாந்து அணிகள் இடையிலான T20 போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய நியூசிலாந்து பந்துவீச்சாளராக நதன் மெக்கலம் இருக்கின்றார். இலங்கை அணியுடன் நதன் மெக்கலம் 8 T20 போட்டிகளில் ஆடி 7 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Getty images

இறுதியாக

இலங்கைநியூசிலாந்து அணிகள் இடையிலான கடந்தகாலப் போட்டிகளின் முடிவுகளை நோக்கும் போது நியூசிலாந்து அணியே அதிக போட்டிகளில் வெற்றியினை பதிவு செய்திருக்கின்றது. இது நியூசிலாந்து அணி இலங்கை அணியுடனான கடந்த காலப் போட்டிகளில் ஆதிக்கத்துடன் இருந்தது என்பதை சுட்டிக் காட்டுகின்றது. இதேநேரம்,  நியூசிலாந்து அணியுடன் கடந்த காலங்களில் சிறப்பான பதிவுகளை காட்டிய இலங்கை வீரர்களும் தற்போது ஓய்வினை அறிவித்துவிட்டனர்.  

எனவே இளம் வீரர்களுடனேயே காணப்படும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு நியூசிலாந்து அணியுடன் நடைபெறவுள்ள அனைத்து தொடர்களும் மிகப் பெரிய சவலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.  

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<