திசரவின் போராட்டத்திற்கு பின் இலங்கை அணி ஆறுதல் வெற்றி பெறுமா?

1402
Cover Photo - AFP

திசர பெரேராவின் அதிரடி சதம் வீணாக, நியூசிலாந்து அணியுடனான இரண்டாவது போட்டியிலும் தோல்வியடைந்த இலங்கை கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-0 என பறிகொடுத்துள்ள நிலையில், தம்முடைய நியூசிலாந்து சுற்றுப் பயணத்தில் விளையாடும் மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் போட்டி செவ்வாய்க்கிழமை (8) ஆரம்பமாகின்றது.

போட்டி விபரம்  

இடம்சேக்ஸ்ட்டன் ஓவல், நெல்சன்

திகதிஜனவரி 8 (செவ்வாய்க்கிழமை)

நேரம்காலை 11 மணி (இலங்கை நேரப்படி அதிகாலை 3.30 மணி)

தொடரின் கடந்த போட்டிகளும், எதிர்பார்ப்புக்களும்

பேய் ஓவல் (Bay Oval) மைதானத்தில் நடைபெற்று முடிந்த இலங்கைநியூசிலாந்து அணிகள் இடையிலான ஒரு நாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி, பெரிய வெற்றி இலக்குகளை விரட்டி அடிக்க போராட்டமான துடுப்பாட்டத்தினை வெளிக்காட்டியிருந்ததோடு குறுகிய ஓட்ட வித்தியாசங்களிலேயே இரண்டு போட்டிகளினையும் பறிகொடுத்திருந்தது.

மைதானத்தை சிக்ஸர்களால் அலங்கரித்த திசர பெரேரா ; போராட்டம் வீண்

இலங்கை – நியூசிலாந்து அணிகள்..

குறிப்பாக, இத்தொடரின் இரண்டாவது போட்டியை நோக்கும் போது வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட ஓட்டங்களை (320) அடைய துடுப்பாடிய இலங்கை அணி, ஒரு கட்டத்தில் 127 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து இக்கட்டான நிலை ஒன்றினை அடைந்த போதிலும், 7ஆம் இலக்கத்தில் துடுப்பாடிய திசர பெரேரா தனியொருவராக நின்று இலங்கை அணிக்காக அபார சதம் (140) ஒன்றுடன் போராடியிருந்தார்.

முன்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் எவரும் பெரேராவுக்கு கைகொடுத்திருந்தால் இலங்கை அணி கடந்த போட்டியில் நிச்சயமான வெற்றி ஒன்றினை பெற்றிருக்கும். ஆனால், அதனை செய்யத் தவறியிருந்த இலங்கை வீரர்கள் குறித்த போட்டி மூலம் ஒருங்கிணைந்த ஒரு அணியாக செயற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தினை பூரணமாக உணர்ந்திருப்பார்கள்.

இது ஒருபுறமிக்க, இலங்கை அணி கடந்த ஒரு நாள் போட்டியில் துடுப்பாட்டம், களத்தடுப்பு என இரண்டு துறைகளிலும் சிறந்த முன்னேற்றத்தினை காட்டியிருந்தது. கிரிக்கெட் உலகக் கிண்ணம் இந்த ஆண்டு ஆரம்பமாகவிருக்கும் நிலையில் இலங்கை அணியின் இப்படியான முன்னேற்றம் நல்ல விடயமாகவே கருதப்படுகின்றது.

இதேநேரம், இலங்கை அணி கடந்த போட்டியிலும் சரி, தொடரின் முதல் ஒரு நாள் போட்டியிலும் சரி மோசமான பந்துவீச்சினையே வெளிப்படுத்தியிருந்தது. இந்தப் பந்துவீச்சுப் பிரச்சினையை சரி செய்தால் மாத்திரமே இலங்கை வீரர்களுக்கு அடுத்த போட்டியில் ஆறுதல் வெற்றி ஒன்றினை எதிர்பார்க்க முடியும்.

திசர பெரேராவை பாராட்டும் இலங்கை அணியின் முன்னாள் வீரர்கள்

நியூசிலாந்து அணியுடனான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் …..

மறுமுனையில் ஒரு நாள் தொடரினைக் கைப்பற்றியிருக்கும் நியூசிலாந்து அணியினை பார்க்கும் போது, அவர்கள் தொடரின் முன்னைய இரண்டு போட்டிகளிலும் துடுப்பாட்டம், பந்துவீச்சு என ஜொலித்திருந்த போதிலும் இரண்டாவது ஒரு நாள் போட்டியில் களத்தடுப்பில் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக செயற்பட தவறியிருந்தனர்.

உலகின் மிகச்சிறந்த களத்தடுப்பு வீரர்களை கொண்டிருக்கும் நியூசிலாந்து அணியினர் இலங்கை வீரர்களுடனான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இதனை சரி செய்து பெரிய சவால் தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை அணி

நியூசிலாந்து அணியுடனான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் விளையாடியிருந்த இலங்கை அணியில் மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் முதல் போட்டியில் ஆடிய அதே அணியே இரண்டாம் போட்டியிலும் ஆடியிருந்தது.

மலர்ந்திருக்கும் புத்தாண்டில் புதிய ஒரு நாள் அணித்தலைவரைப் பெற்றிருக்கும் இலங்கை அணி, ஒரே அணியினை வைத்துக்கொண்டு உலகக் கிண்ணத்திற்கு தயாராகும் நோக்கம் எதனையும் கொண்டிருப்பதால் அணிக்குழாமில் மாற்றங்கள் இடம்பெறவில்லை எனக்குறிப்பிடலாம்.

ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி சாதனை படைத்த மலிந்த

இலங்கை டெஸ்ட் அணியின் இடதுகை சுழற்பந்துவீச்சாளர்…

ஆனால், இப்பொழுதிருக்கும் ஒரு நாள் அணியினை நோக்கும் போது அதில் ஆடி வரும் வீரர்களான தினேஷ் சந்திமால், சீக்குகே பிரசன்ன, அசேல குணரத்ன மற்றும் லக்ஷான் சந்தகன் ஆகியோர் மூலம் நியூசிலாந்து அணியுடனான முன்னைய போட்டிகளில் பலன் எதுவும் பெறப்பட்டிருக்கவில்லை.

இந்த வீரர்களுக்கு பதிலாக இலங்கை அணி, தமது மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை குழாத்தில் உள்ளடக்கப்பட்டு  காணப்படும் தசுன் சானக்க, தனன்ஞய டி சில்வா மற்றும் கசுன் ராஜித ஆகியோருக்கு வாய்ப்பு தந்து ஒரு முயற்சியினை மேற்கொள்ள முடியும்.

எதிர்பார்க்கப்படும் இலங்கை அணி

நிரோஷன் திக்வெல்ல, தனுஷ்க குணத்திலக்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ், தனன்ஞய டி சில்வா, அசேல குணரத்ன, திசர பெரேரா, சீக்குகே பிரசன்ன, லசித் மாலிங்க (அணித்தலைவர்), லக்ஷான் சந்தகன், நுவான் பிரதீப்

நியூசிலாந்து அணி

இலங்கை அணியுடனான ஒரு நாள் தொடரினை நியூசிலாந்து கைப்பற்றிய காரணத்தினால், சுழற்சிமுறை அடிப்படையில் நியூசிலாந்து குழாத்தில் காணப்படும் வேகப்பந்து வீச்சாளரான டக் ப்ரெஸ்வெல்லிற்கு இலங்கை அணியுடனான இறுதி ஒரு நாள் போட்டியில் வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Embed – https://www.youtube.com/watch?v=MAJky36uW24

இதுதவிர இலங்கை அணியுடனான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணியில் வேறு மாற்றங்கள் இடம்பெற வாய்ப்புக்கள் இல்லை.

எதிர்பார்க்கப்படும் நியூசிலாந்து அணி

மார்டின் குப்டில், கொலின் முன்ரோ, கேன் வில்லியம்சன் (அணித்தலைவர்), ரொஸ் டெய்லர், ஹென்ரி நிக்கோல்ஸ், டிம் செய்பெர்ட், ஜேம்ஸ் நீஷம், டிம் செளத்தி/டவ்க் ப்ரெஸ்வெல், மேட் ஹென்ரி, இஷ் சோதி, ட்ரென்ட் போல்ட்

எதிர்பார்க்கப்படும் வீரர்கள்

குசல் மெண்டிஸ் (இலங்கை) – “சிறிய ரொக்கெட்என்கிற செல்லப்பெயரோடு அழைக்கப்படும் இலங்கை அணியின் இளம் துடுப்பாட்ட வீரரான குசல் மெண்டிஸ், இத்தொடரின் முன்னைய போட்டிகளில் ஜொலிக்காது போயிருந்த போதிலும் இலங்கை அணிக்கு எத்தருணத்திலும் நம்பிக்கை தரக்கூடிய ஒரு வீரராகவே இருக்கின்றார். எனவே, ஆறுதல் வெற்றியினை எதிர்பார்த்த நியூசிலாந்து அணியுடனான இறுதி ஒரு நாள் போட்டியில் இலங்கை அணியின் எதிர்பார்ப்பு வீரராக குசல் மெண்டிஸ் காணப்படுகின்றார்.

Courtesy – AFP

கடந்த ஆண்டு கிரிக்கெட்டின் நீண்ட வடிவமான டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணிக்காக அதிக ஓட்டங்கள் குவித்திருந்த, குசல் மெண்டிஸ் இந்த ஆண்டு மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளிலும் இலங்கை அணிக்கு வலுச்சேர்ப்பார்  என எதிர்பார்க்கப்படுகின்றது.

மொஹமட் சமாஸின் போராட்டம் வீண்; ஆஸி. இளையோரிடம் மீண்டும் வீழ்ந்த இலங்கை

அவுஸ்திரேலிய ….

ரொஸ் டெய்லர் (நியூசிலாந்து) – நியூசிலாந்து அணி இலங்கை வீரர்களுடனான ஒரு நாள் தொடரினை கைப்பற்ற இரண்டு போட்டிகளிலும் அரைச்சதங்கள் (54,90) விளாசி மறைமுக கதாநாயகனாக இருக்கும் அனுபவ துடுப்பாட்ட வீரர் ரொஸ் டெய்லர் இரு அணிகளுக்கும் இடையிலான இறுதிப் போட்டியில் ஜொலிக்க எதிர்பார்க்கப்படும் மற்றைய வீரராக உள்ளார்.

Courtesy – AFP

இலங்கை அணிக்கு எதிராக 30 இற்கு மேற்பட்ட ஒரு நாள் போட்டிகளில் ஆடியுள்ள ரொஸ் டெய்லர், அவற்றில் 750 ஓட்டங்களுக்கு கிட்டவான ஓட்டங்களை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

போட்டி நடைபெறும் மைதானத்தில் இரு அணிகளதும் கடந்த காலம்

வேகப்பந்து வீச்சாளர்களின் சொர்க்கமாக கருதப்படும் சேக்ஸ்ட்டன் ஓவல் மைதானத்தில் இலங்கைநியூசிலாந்து ஆகிய இரண்டு அணிகளும் இதுவரையில் மூன்று ஒரு நாள் போட்டிகளில் ஆடியிருப்பதோடு அவற்றில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றி வீதம் பதிவு செய்திருக்கின்றன. இதேநேரம் ஒரு போட்டி முடிவுகள் ஏதுமின்றிய நிலையில் நிறைவுக்கு வந்திருக்கின்றது.

மைதான நிலைமைகள்

இரு அணிகளும் இறுதி ஒரு நாள் போட்டி விளையாடும் மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஒரு இடமாக இருக்கும் என்பதோடு போட்டி நடைபெறும் நாளில் மழைக்கான வாய்ப்பு மிகக் குறைவு என்பதால் தொடரின் முன்னைய போட்டிகள் போன்று நியூசிலாந்துஇலங்கை அணிகள் இடையில் விறுவிறுப்பான மோதல் ஒன்று எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (8) இரசிகர்களுக்காக மீண்டும் காத்திருக்கின்றது.

அதேபோன்று, குறித்த மைதானத்தின் பௌண்டரி எல்லைகள் கடந்த போட்டியை விட தூரம் குறைந்ததாக இருப்பாதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. vனவே, துடுப்பாட்ட வீரர்களின் வான வேடிக்கைகளையும் நாளைய போட்டியில் எதிர்பார்க்கலாம்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<