இலங்கை – நேபாலின் இறுதிப் பலப்பரீட்சைக்கு தடையாய் அமைந்த மழை

430
Sri Lanka vs Nepal under 16

தெற்காசிய மற்றும் ஜப்பான் நாடுகளின் 16 வயதின் கீழ்ப்பட்டவர்களுக்கான கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியான இலங்கை மற்றும் நேபால் அணிகளுக்கு இடையிலான போட்டி அடை மழையின் காரணமாக இரு அணிகளும் எந்தவித கோல்களையும் பெற்றிராத நிலையில் நிறுத்தப்பட்டது. அதற்கு முன்னர் இடம்பெற்ற ஜப்பான் எதிர் பூட்டான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஜப்பான் அபார வெற்றி பெற்றது.

இலங்கை எதிர் நேபால்

ஏற்கனவே நடைபெற்ற போட்டிகளில் இரு அணியினரும் ஜப்பானிடம் தோல்வியடைந்தும், பூட்டானுடனான போட்டியை வெற்றி கொண்டும் இருந்த நிலையில் இந்தப் போட்டியில் களமிறங்கினர்.

சபீரின் ஹெட்ரிக் கோலினால் பூட்டானை இலகுவாக வீழ்த்திய இலங்கை

போட்டி ஆரம்பமாகி முதல் நிமிடத்திலேயே நேபால் தரப்பினரால் கோலை நொக்கி அடிக்கப்பட்ட பந்து கோல் காப்பாளர் மஹேந்திரன் தினேஷ் மூலம் சிறந்த முறையில் தடுக்கப்பட்டது.

பின்னர் இரு தரப்பும் ஓரளவு சமநிலையில் ஆடிக்கொண்டிருந்த நிலையில் இலங்கை வீரர்களுக்கு பெனால்டி எல்லைக்கு சற்று வெளியே வைத்து ப்ரீ கிக் வாய்ப்பொன்று கிடைத்தது. எனினும் அதன்போது சபீர் உதைந்த பந்து நெபால் அணியின் பின்கள வீரர்களினால் திசை திருப்பப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இலங்கையின் பின்கள வீரர் ரெக்சன் மூலம் எதிரணியின் கோல் எல்லையில் இருந்து உள்ளனுப்பப்பட்ட பந்தை நேபாலின் கோல் காப்பாளர் சிறந்த முறையில் பாய்ந்து பிடித்தமையினால், இலங்கை வீரர்களுக்கான சிறந்த ஒரு கோல் வாய்ப்பு தவறவிடப்பட்டது.

அதன் பின்னர் மழை பெய்ய ஆரம்பித்தமையினால் போட்டி மேலும் விறுவிறுப்படைந்தது. இரு அணியினரும் மழையையும் பொருட்படுத்தாது வேகமாக விளையாட ஆரம்பித்தனர்.

இலங்கையின் வேகமான வீரர் முர்ஷித் பந்தை தனியே நீண்ட தூரம் எடுத்து வந்து உள்ளனுப்ப, அங்கே இருந்த சபீர் மூலம் கோலுக்கான அழகான முயற்சி சிறந்த முறையில் நிறைவு செய்யப்படவில்லை.

அதனைத் தொடர்ந்து மீண்டும் ஒருமுறை முர்ஷித் வேகமாகப் பந்தை முன்கொண்டு செல்லுகையில், நேபால் கோல் காப்பாளர் தனது எல்லையில் இருந்து பந்தைத் தடுப்பதற்கு வெளியே ஓடி வந்தார். எனினும், இந்த சந்தர்ப்பத்தைப் பார்த்து வேகமாக கோலை நோக்கி முர்ஷித் பந்தை உதைய பந்து கம்பங்களில் பட்டு வெளியே வந்தது.

ஜப்பான் எதிர் பூட்டான்

இந்தப் போட்டி ஆரம்பமாகி இரண்டாவது நிமிடத்திலேயே ஜப்பான் அணியினர் நகானொ கைடா மூலம் தமக்கான முதல் கோலைப் பெற்றுக்கொண்டது. அதனைத் தொடர்ந்து 7 ஆம் நிமிடத்தில் சக வீரர் சுமி கொஷிஹாரோ, ஜப்பான் அணிக்கான இரண்டாவது கோலைப் பெற, அதே நிமிடத்தில் நகானா கைடா அணிக்கான மூன்றாவது கோலையும் பெற்றார்.

முதல் பாதி: ஜப்பான் 03 – 00 பூட்டான்

முதல் பாதியைப் போன்றே இரண்டாவது பாதி ஆரம்பித்தவுடனேயே ஜப்பான் அணியினரால் ஒரு கோல் பெறப்பட்டது. இந்த கோலையும் நகானா கைடா பெற்றுக் கொடுத்தார்.

மீண்டும் 51ஆவது நிமிடத்தில் கொண்டொ க்ராபா மூலமாக ஜப்பான் அணி அடுத்த கோலையும் பெற்றுக்கொண்டது. தொடர்ந்து, மாற்று வீரராக மைதானத்திற்கு வந்த ரியொ டாரோ மிகவும் சிறந்த முறையில் பந்தை நீண்ட தூரத்திற்கு கொண்டு வந்து மிக வேகமாக கோலை நேக்கி அடிக்க, பந்து கோலின் ஒரு திசையினால் வலைக்குள் சென்றது.

அதனைத் தொடர்ந்து ஜப்பான் வீரர்கள் 55ஆம், 56ஆம், 64ஆம் நிமிடங்களில் தொடர்ச்சியாக கோல்களை அடிக்க, எதிர் தரப்பு தம்மால் முடியுமான வகையில் அவற்றைத் தடுப்பதற்கான முயற்சிகளையே மேற்கொண்டது.

எனினும் தொடர்ந்து தமது பலத்தைக் காண்பித்த ஜப்பான் வீரர்கள் 75ஆவது நிமிடத்திலும், 90 நிமிடங்கள் கடந்து மேலதிக நேரத்திலும் மேலும் இரு கோல்களைப் பெற, ஆட்ட நிறைவின்போது அவர்கள் 11 கோல்களைப் பெற்றிருந்தனர்.

முழு நேரம்: ஜப்பான் 11 – 00 பூட்டான்

தொடர்ந்தும் அடை மழை பெய்தமையினால் போட்டி நடுவர் ஆட்டத்தை இடைநிறுத்துவதாக அறிவித்தார். பின்னரும் மழை தொடர்ந்தமையினால் ஆட்டம் 37 நிமிடங்கள் நிறைவுற்ற நிலையில் நிறுத்தப்பட்டது.