முதல் கட்ட தகுதிகாண் போட்டியில் மக்காவுவிடம் வீழ்ந்தது இலங்கை

853
Sri Lanka vs Macau

எதிர்வரும் 2022ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள பிஃபா உலகக் கிண்ண கால்பந்து தொடருக்கான பூர்வாங்க தகுதிகாண் போட்டியின் முதல் கட்ட ஆட்டத்தில் இலங்கை அணி மக்காவு அணியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்துள்ளது.  

இரண்டு கட்டங்களைக் கொண்ட இந்த பூர்வாங்க தகுதிகாண் போட்டிகளில் முதல் கட்டம் மக்காவு அணியின் சொந்த மைதானமான சீனாவின் சுஹாய் விளையாட்டு மத்திய நிலைய அரங்கில் வியாழக்கிழமை (06) இடம்பெற்றது.

உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் கவிந்து இஷான் சந்தேகம்

லாவோஸ் அணிக்கு எதிரான முதல் நட்புறவு போட்டியின்போது இலங்கை கால்பந்து அணி வீரர் கவிந்து இஷானின் இடது

போட்டியின் ஆரம்பத்தில் சிறந்த பந்துப் பரிமாற்றங்களை மேற்கொண்ட இலங்கை வீரர்கள் பல இலகுவான வாய்ப்புக்களை தவறவிட்டனர்.

போட்டியின் 10ஆவது நிமிடத்தில் திலிப் பீரிஸ் உள்ளனுப்பிய பந்து மக்காவு பின்கள வீரரின் உடம்பில் பட்டு வெளியே சென்றது. இதன்போது கிடைத்த கோணர் உதையின்போது, கிடைத்த கோல் வாய்ப்பின்போதும் இலங்கை வீரர்கள் உதைந்த பந்து கோலின் ஒரு பக்க கம்பத்தில் பட்டு வெளியேறியது.

அடுத்த சில நிமிடங்களில் இரு அணியினருக்கும் கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்புக்களை இரு தரப்பினரும் சிறந்த முறையில் நிறைவு செய்யத் தவறினர்.

30ஆவது நிமிடத்தில் கோல் எல்லையில் இருந்து பசால் ஹெடர் செய்த பந்தை கம்பத்திற்கு அண்மையில் இருந்த மக்காவு பின்கள வீரர் வெளியேற்றினார்.

அடுத்த நிமிடம் மத்திய களத்தில் இருந்து சுந்தராஜ் நிரேஷ் கோல் நோக்கி வேகமாக உதைந்த பந்தை மக்காவு கோல் காப்பாளர் மன் பாய் பிடித்தார். மீண்டும் 37ஆவது நிமிடம் நிரேஷ் மத்திய களத்தில் இருந்து வேகமாக கோல் நோக்கி உதைந்த பந்து கம்பங்களை விட்டு மேலால் சென்றது.

லாவோசுடனான இரண்டாவது மோதலை சமநிலையில் முடித்த இலங்கை

இலங்கை மற்றும் லாவோஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது நட்புறவு கால்பந்து போட்டி 2-2 என்ற கோல்

இலங்கை வீரர்கள் ஆரம்பம் முதல் தமக்கு கிடைத்த வாய்ப்புக்கள் அனைத்தையும் வீணடிக்க முதல் பாதி கோல்கள் ஏதுமின்றி நிறைவுற்றது.

முதல் பாதி: இலங்கை 0 – 0 மக்காவு

இரண்டாம் பாதி ஆரம்பமாகி ஓரிரு நிமிடங்களில் முன்கள வீரர் வழங்கிய பந்தைப் பெற்ற டக்சன் பியுஸ்லஸ் கோல் நோக்கி உதைந்த பந்தை மக்காவு கோல் காப்பாளர் மன் பாய் கோலுக்கு அண்மையில் இருந்து பிடித்தார்.

முதல் பாதியில் இலங்கையை விட மந்தமான ஆட்டத்தை காண்பித்து வந்த மக்காவு அணிக்கு 52ஆவது நிமிடத்தில் போட்டியின் முதல் கோல் கிடைத்தது. கோணர் உதையின்போது உள்வந்த பந்தை இலங்கை அணியின் தலைவரும் கோல் காப்பாளருமான சுஜான் பெரேரா பாய்ந்து தட்டினார். இதன்போது மத்திய களத்தில் இருந்து பந்தை எடுத்து வந்த மக்காவு வீரர் செலுத்திய பந்தை சுஜான் சிறந்த முறையில் தடுக்கத் தவற, பந்தை மீண்டும் பெற்ற மக்காவு வீரர்கள் அதனை கம்பங்களுக்குள் செலுத்தி கோலைப் பெற்றனர்.

AFC இணை உறுப்பினராக அநுர டி சில்வா நியமனம்

இலங்கை கால்பந்து சம்மேளத்தின் (FFSL) தலைவர் அனுர டி சில்வா ஆசிய கால்பந்து கூட்டமைப்பு (AFC) நிறைவேற்றுக்

58ஆவது நிமிடத்தில் திலிப் பீரிஸ் வழங்கிய பந்துப் பரிமாற்றத்தின்போது கவிந்து இஷான் கோல் நோக்கி உதைந்த பந்து இடது பக்க கம்பங்களை அண்மித்த வகையில் வெளியே சென்றது.

எனினும், அதன் பின்னர் இலங்கை அணியின் வாய்ப்புக்களை சிறந்த முறையில் தடுத்தாடிய மக்காவு வீரர்கள் தமக்கான வாய்ப்புக்கள் பலவற்றையும் ஏற்படுத்தினர்.

போட்டியின் உபாதையீடு நேரத்தில் வேகமாக செயற்பட்ட இலங்கை வீரர்கள் தமக்கான முதல் கோலுக்கான வாய்ப்பை ஏற்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்ட போதும், சிறந்த முறையில் அவற்றை நிறைவு செய்யவில்லை.  

எனவே, இரண்டாம் பாதியில் மீண்டெழுந்து வேகமான ஆட்டத்தைக் காண்பித்த மக்காவு வீரர்கள் போட்டியின் நிறைவில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றியைப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளுக்கான பூர்வாங்க தகுதிகாண் போட்டியின் தமது இரண்டாம் கட்ட ஆட்டத்தில் இலங்கை அணி மக்காவு அணியை எதிர்வரும் 11ஆம் திகதி சுகததாஸ அரங்கில் எதிர்கொள்ளவுள்ளது.

முழு நேரம்: இலங்கை 0 – 1 மக்காவு

 மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க