இந்தியாவிடம் டி-20 தொடரை இழந்தது இலங்கை

179

மாற்றுத்திறனாளிகள் இந்திய அணிக்கு எதிரான டி-20 கிரிக்கெட் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டியில் தோல்வியை சந்தித்த இலங்கை மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட்  அணி தொடரை 1-2 என இழந்தது.

கொழும்பு, BRC மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலகு வெற்றி ஒன்றை பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் அணி 123 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இந்த இலக்கை இந்திய அணி 43 பந்துகளை மிச்சம் வைத்து எட்டியது.

இந்திய அணியின் வெற்றிக்காக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பல்ராஜ்ஜி துடுப்பாட்டத்தை இலங்கை பந்து வீச்சாளர்களால் தடுக்க முடியாமல் போனது. அவர் 25 பந்துகளுக்கு முகம்கொடுத்து 7 பௌண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன் 47 ஓட்டங்களை பெற்றார்.  

தொடரை தக்கவைத்துக் கொண்ட இலங்கை அணி

இந்தியாவுக்கு எதிரான உடல் அங்க குறைபாடு உள்ளோர் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது டி-20 போட்டியில் 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய இலங்கை அணி தொடரை 1-1 என தக்கவைத்

பல்ராஜ் மறுமுனை ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஜீட் (06) உடன் இணைந்து ஆரம்ப விக்கெட்டுக்கு 23 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டார். அந்த இணைப்பாட்டம் முறியடிக்கப்பட்ட பின் மேலும் 4 ஓட்டங்களுக்குள் இரண்டாவது விக்கெட்டை வீழ்த்த இலங்கை பந்து வீச்சாளர்களால் முடியுமானது.   

எனினும் மூன்றாவது விக்கெட்டுக்காக பல்ராஜ்ஜுடன் இணைந்த டிக்கா இலங்கை அணியின் வெற்றி வாய்ப்பை சிதறடித்தார். டிக்கா 22 பந்துகளுக்கு முகம்கொடுத்து 6 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 33 ஓட்டங்களை பெற்றார். இவர்கள் இருவருக்கும் இடையில் 70 ஓட்ட இணைப்பாட்டம் பெறப்பட்டது.

பல்ராஜ் மற்றும் டிக்கா ஆட்டமிழந்த பின் குலாம்டீன் (18*) மற்றும் பீ. கைலாஷ் (08*) இணைந்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.   

முன்னதாக போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி இலங்கையை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது. எனினும் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி 42 ஓட்டங்களை பெறும்போது முதல் விக்கெட்டை பறிகொடுத்து. இலங்கை அணி இணைப்பாட்டம் ஒன்றை பெற தடுமாறிய நிலையில் அந்த அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெயில் பறிபோயின. இலங்கை அணி சார்பில் சோபித்த துடுப்பாட்ட வீரராக உதார இந்திரஜித் இருந்தார். அவர் 52 பந்துகளுக்கு முகம்கொடுத்து ஐந்து பௌண்டரிகளுடன் 55 ஓட்டங்களை பெற்றார்.

செப்டம்பர் மாதத்தில் இலங்கை வரும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

உதாரவின் இந்த அரைச்சதம் இலங்கை அணி சார்பில் பெறப்பட்ட ஒரே ஒரு அரைச்சதமாகும். வேறு எந்த வீரரும் அவருக்கு கைகொடுக்க தவிறனர்.

பந்துவீச்சில் இலங்கை அணிக்கு நெருக்கடி கொடுத்த ஆரம்ப வேகப்பந்து வீச்சாளரான அணித்தலைவர் ரவீந்திர போல் 23 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை பாதம்பார்த்தார். இது தவிர, ரன்ஜித் மற்றும் குலாம் தீன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

போட்டியின் சுருக்கம்

இலங்கை – 123 (20) – உதார இந்திரஜித் 55, ரவீந்திர போல் 3/25, ரன்ஜித் 2/20, குலாம்தீன் 2/15

இந்தியா – 129/4 (12.5) – பல்ராஜ் 47, டிக்கா 33, குலாம்தீன் 18*, உதார இந்திரஜித் 2/26

முடிவு இந்திய மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி