இங்கிலாந்துக்கு வழங்கிய மோசமான தோல்வியின் நம்பிக்கையுடன் T20 யில் களமிறங்கும் இலங்கை

1973

உலகின் முதல் நிலை ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு மிக மோசமான தோல்வியினை பரிசாக வழங்கிய இலங்கை அணி, அதே உத்வேகத்துடன் ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ள ஒரே ஒரு போட்டியைக் கொண்ட T20 தொடரில் நாளை இங்கிலாந்துடன் மோதுகிறது.

ஏன் குசல் மென்டிஸுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது?; விளக்கும் சந்திமால்

இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் துடுப்பாட்ட வீரரான குசல் மென்டிஸ் துடுப்பாட்டத்தில் தொடர்ந்து

ஒருநாள் போட்டிகளில் ஜிம்பாப்வே, பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுடன் தோல்விகளை சந்தித்த இலங்கை அணி தரம் குறைந்த அணியாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இங்கிலாந்து அணியுடனான தொடரை 3-0 என இழந்த பின்னர், இறுதிப் போட்டியில் இலங்கை விளையாடிய விதம் T20 போட்டி மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

முக்கியமாக, T20 குழாத்தில் உள்வாங்கப்பட்டுள்ள இலங்கை அணியின் நிரோஷன் டிக்வெல்ல, தினேஷ் சந்திமால் மற்றும் குசால் மெண்டிஸ் ஆகியோர் அரைச்சதம் அடித்து நம்பிக்கையை அதிகரித்திருப்பதால், T20 போட்டியில் இலங்கை அணியால் நிச்சயமாக அதிக ஓட்டங்களை பெற முடியும் என்ற எண்ணம் வீரர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

எனினும், இலங்கை அணியின் கடந்த கால T20 முடிவுகள் சிறப்பாக அமையவில்லை. 2017ம் ஆண்டு ஆரம்பத்திலிருந்து இலங்கை அணி 22 போட்டிகளில் விளையாடி 9 போட்டிகளில் மாத்திரமே வெற்றிபெற்றுள்ளது. இதில் பங்களாதேஷ் அணியுடன் 3 போட்டிகளில் இலங்கை அணி தோல்வியடைந்திருக்கிறது.

இதேநிலையில், இங்கிலாந்து அணியானது இறுதி ஒருநாள் போட்டியில் செய்த தவறுகளை நிவர்த்தி செய்துக்கொண்டு விளையாட எதிர்பார்த்துள்ளது. முக்கியமாக, இறுதி ஒருநாள் போட்டியில் இயன் மோர்கன், கிரிஸ் வோகஸ் மற்றும் ஒல்லி ஸ்டோன் ஆகியோருக்கு ஓய்வளித்திருந்தது. இந்நிலையில் இலங்கையுடனான T20 போட்டியில் இவர்களுடன் T20 தொடரை கைப்பற்றும் நோக்கில் இங்கிலாந்து களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆடாமல் இருந்து அணியின் வெற்றிக்கு பங்களித்த மாலிங்க

இலங்கை கிரிக்கெட் அணியானது தனக்காக சாதிக்க கூடிய கதாநாயகர்கள் (Heroes) பலரை எதிர்பார்த்த

காரணம், ஒருநாள் போட்டிகளில் முதல் நிலையில் வலம் வரும் இங்கிலாந்து அணி T20 போட்டி முடிவுகளில் சறுக்கலை சந்தித்து வருகின்றது. 2017ம் ஆண்டு ஆரம்பத்திலிருந்து 15 போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து 6 போட்டிகளில் மாத்திரமே வெற்றிபெற்றுள்ளது. அதேபோன்று, 2018ம் ஆண்டில் விளையாடிய 8 போட்டிகளில் 5 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளமை இங்கிலாந்து அணிக்கு மேலும் அழுத்தத்தை கொடுத்துள்ளது.

இதுவொரு புறமிருக்க, இந்த T20 தொடரை நோக்கும் போது, இலங்கைஇங்கிலாந்து அணிகள் இலங்கையில் மோதும் முதலாவது T20 தொடராகும். இரண்டு அணிகளும் இதற்கு முன்னர் ஒரு போட்டி கொண்ட நான்கு T20 தொடர்களில் விளையாடியுள்ளன. இந்த தொடர்கள் அனைத்தும் இங்கிலாந்தில் நடைபெற்றுள்ளன. இதில் இலங்கை அணி 3 தொடர்களிலும், இங்கிலாந்து அணி ஒரு தொடரிலும் வெற்றிபெற்றுள்ளது.

இலங்கைஇங்கிலாந்து T20 இருதரப்பு தொடர் முடிவுகள்

  • தொடர்கள் – 4
  • இலங்கை – 3 வெற்றிகள்
  • இங்கிலாந்துஒரு வெற்றி

அதேநேரம், இலங்கைஇங்கிலாந்து அணிகள் இலங்கையில் T20 இருதரப்பு தொடர்களில் விளையாடாவிட்டாலும், ஐசிசியின் பொதுவான T20 தொடர்களிலும் நேருக்கு நேர் சந்தித்துள்ளன.  இதன்படி மொத்தமாக இரண்டு அணிகளும் 8 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் இலங்கை 4 போட்டிகளிலும், இங்கிலாந்து அணி 4 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன.

இலங்கைஇங்கிலாந்து T20  போட்டி முடிவுகள்

  • போட்டிகள் – 8
  • இலங்கை – 4 வெற்றிகள்
  • இங்கிலாந்து – 4 வெற்றிகள்

அத்துடன், இலங்கைஇங்கிலாந்து அணிகள் இலங்கையில் இருதரப்பு தொடர்களில் விளையாடாத போதும், 2012ம் ஆண்டு நடைபெற்ற T20 உலகக் கிண்ண தொடரில் பல்லேகலை மைதானத்தில் வைத்து மோதியுள்ளன.  இந்தப் போட்டியில் இலங்கை அணி 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தது.

இலங்கைஇங்கிலாந்து T20 போட்டி முடிவுகள் (இலங்கையில்)

  • போட்டிஒரு போட்டி
  • இலங்கைஒரு வெற்றி
  • இங்கிலாந்துவெற்றியில்லை

இதனிடையே, இரண்டு அணிகளும் நாளை கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரண்டு அணிகளும் இதற்கு முன்னர் T20 போட்டியில் இந்த மைதானத்தில் மோதியதில்லை. ஆனால், ஆர்.பிரேமதாஸ மைதானது T20 போட்டிகளில் இலங்கை அணிக்கு அதிஷ்டமில்லாத மைதானமாக கருதப்படுகிறது. இந்த மைதானத்தில் 19 T20 போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை 4 போட்டிகளில் மாத்திரமே வெற்றிபெற்றுள்ளது.  

ஆர்.பிரேமதாஸ மைதான T20 போட்டி முடிவுகள் (இலங்கை)

  • போட்டிகள் – 19
  • வெற்றிகள் –  4
  • தோல்விகள் – 15

அதனுடன், இரண்டு அணிகளும் ஏற்கனவே மோதிய T20 போட்டிகளின் படி அதிக ஓட்டங்களை குவித்தவராக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன உள்ளார்.  இதே நிலையில் இங்கிலாந்து அணி சார்பில் அணித் தலைவர் இயன் மோர்கன் அதிக ஓட்டங்களை பெற்றுள்ளார்.

சச்சினின் உலக சாதனைக்கு மிரட்டல் விடுக்கும் கோஹ்லியின் பத்தாயிரம்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சாதனை 10,000 ஓட்டங்களை பெற விராட் கோஹ்லிக்கு இன்னும் ஒரே ஒரு ஓட்டம்

இலங்கைஇங்கிலாந்து T20 போட்டிகளில் அதிக ஓட்டங்கள்

  • மஹேல ஜயவர்தன – 213 (5 இன்னிங்ஸ்கள், சராசரி 53.25, அதிகூடிய ஓட்டம் 89)
  • இயன் மோர்கன் – 190 (7 இன்னிங்ஸ்கள், சராசரி 38.00, அதிகூடிய ஓட்டம் 57)

இலங்கைஇங்கிலாந்து T20 போட்டிகளில் அதிக ஓட்டங்கள் (இலங்கையில்)

  • சமீட் பட்டேல் – 67 (ஒரு இன்னிங்ஸ், சராசரி 67.00)
  • மஹேல ஜயவர்தன 42 (ஒரு இன்னிங்ஸ், சராசரி 67.00)

இதனிடையே, இரண்டு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை இலங்கை அணியின் லசித் மாலிங்க வீழ்த்தியுள்ளார்.

இலங்கைஇங்கிலாந்து T20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகள்

  • லசித் மாலிங்க – 11 விக்கெட்டுகள் (6 இன்னிங்ஸ்கள், சிறந்த பிரதி 31/5)
  • கிரிஸ் ஜோர்டன் – 10 விக்கெட்டுகள் (4 இன்னிங்ஸ்கள், சிறந்த பிரதி 28/4)

இலங்கைஇங்கிலாந்து T20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் (இலங்கையில்)

  • மாலிங்க – 5 விக்கெட்டுகள் (ஒரு இன்னிங்ஸ்)
  • ஸ்டுவர்ட் புரோட் – 3 விக்கெட்டுகள் (ஒரு இன்னிங்ஸ்)

இதேவேளை, இரண்டு அணிகளுக்கும் இடையிலான T20 போட்டிகளில் இங்கிலாந்து அணி அதிகூடிய ஓட்டங்களை பதிவுசெய்துள்ளதுடன், இலங்கை அணி குறைந்த ஓட்டங்களை பதிவுசெய்துள்ளது.

  • அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை – 190/4
  • அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை (இலங்கை) – 189/4
  • குறைந்த ஓட்ட எண்ணிக்கை128/6
  • குறைந்த ஓட்ட எண்ணிக்கை (இங்கிலாந்து) – 132/3

அணி விபரம்

இலங்கை அணியைப் பொருத்தவரையில் குழாத்தில் இடம்பெற்றுள்ள குசல் பெரேரா உபாதை காரணமாக நாளைய போட்டிக்கு அணியில் இணைக்கப்படமாட்டார் என அணித் தலைவர் திசர பெரேரா தெரிவித்துள்ளார்.  இதேவேளை, பதினொருவரில் இளம் வீரர் கமிந்து மெண்டிஸ் அறிமுகமாவார் என எதிர்பார்ப்பதுடன், இசுறு உதான, லசித் மாலிங்க ஆகியோரும் இணைக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இறுதிப் போட்டியை சாதனை வெற்றியாக மாற்றிய இலங்கை அணி

இங்கிலாந்து அணிக்கு எதிராக கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற ஐந்தாவதும் இறுதியுமான

T20 போட்டிக்கான இலங்கை உத்தேச பதினொருவர்

நிரோஷன் டிக்வெல்ல, குசால் மெண்டிஸ், தனன்ஜய டி சில்வா, தினேஷ் சந்திமால், கமிந்து மெண்டிஸ், தசுன் சானக, திசர பெரேரா (தலைவர்), அகில தனன்ஜய, இசுறு உதான, துஷ்மந்த சமீர, லசித் மாலிங்க

இங்கிலாந்து அணியில் லியாம் டவ்ஸனுக்கு பதிலாக இணைக்கப்பட்ட ஜோ டென்லி நாளைய தினம் தொடரின் முதல் போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவருடன் அணித் தலைவர் இயன் மோர்கன், கிரிஸ் வோகஸ் மற்றும் கிரிஸ் ஜோர்டன் அணியில் இடம்பிடிப்பார்கள் எனவும், ஜோ ரூட், செம் கரன் மற்றும் மார்க் வூட் ஆகியோர் வெளியேறுவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

T20 போட்டிக்கான இங்கிலாந்து உத்தேச பதினொருவர்

ஜேசன் ரோய், ஜொனி பெயார்ஸ்டோவ், ஜோ டென்லி, இயன் மோர்கன் (தலைவர்), பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மொயின் அலி, ஆதில் ரஷீட், கிரிஸ் ஜோர்டன், கிரிஸ் வோகஸ், டொம் கரன்

மைதான காலநிலை (ஆர்.பிரேமதாஸ)

கொழும்பில் நாளை காலை வெப்பம் 31 பாகை செல்சியஸ் அளவில் இருப்பதுடன், இரவு வேளையில் 24 பாகை செல்சியஸ் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  போட்டியின் போது மழைக் குறுக்கிட வாய்ப்புள்ளது. சிலவேளைகளில் இடியுடன் கூடிய மழை அல்லது இடி தாக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

T20 போட்டிக்கான ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட வீரர்கள்

திசர பெரேரா (தலைவர்) – இறுதியாக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் நாம் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்தோம். அதே உத்வேகத்துடன் T20 போட்டியில் விளையாடுவுள்ளோம்.  T20 போட்டியை பொருத்தவரையில் நாணய சுழற்சி முடிவு முக்கியமில்லை. களத்தில் நாம் தவறுகளை விடாமல் விளையாடுவோமானால் வெற்றிபெறலாம் என்றார்.

கிரிஸ் ஜோர்டன்உலகின் முதற்தர ஒருநாள் அணி, அத்துடன் சிறந்த வீரர்களை உள்ளடக்கிய அணியுடன் விளையாடுவதும், இங்கிலாந்து ஜேர்சியை மீண்டும் அணிவதும் புதிய நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. என்னால் முடிந்த 100 சதவீதத்தையும் அணிக்கு கொடுப்பேன். இங்கிலாந்து அணியின் மூன்று வகை போட்டிகளிலும் விளையாடுவதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறேன் என்றார்.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க