வரலாற்றின் ஊக்குவிப்புடன் இங்கிலாந்துடனான ஒருநாள் தொடரில் மோதும் இலங்கை

2815
Sri Lanka Cricket

ஆசியக் கிண்ணத் தொடரில் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிராக அடைந்த மோசமான தோல்விகளைத் தொடர்ந்து, இலங்கை கிரிக்கெட் அணி உலகின் முதல் நிலை ஒருநாள் அணியான இங்கிலாந்தை தங்களது சொந்த மண்ணில், 5 போட்டிகள் கொண்ட தொடரில் எதிர்கொள்கிறது.

முதலாவது பயிற்சிப் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு வெற்றி

இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் மற்றும்..

இலங்கை கிரிக்கெட் அணியானது தற்போது மிகவும் இக்கட்டான நிலைக்கு முகங்கொடுத்துள்ளது. உலகக் கிண்ணத் தொடருக்கு ஒருவருடத்துக்கும் குறைந்த காலப்பகுதி மாத்திரமே உள்ள நிலையில், இதுவரையில் முழுமையடைந்த அணியாக இலங்கை உருவாக்கப்படவில்லை. அடிக்கடி அணிகளில் ஏற்படும் மாற்றங்கள் அணியின் ஸ்திரத்தன்மையை குறைத்து வருகின்றது. இறுதியாக, அஞ்சலோ மெதிவ்ஸை தலைமைப் பதவியிலிருந்து நீக்கி, புதிதாக தினேஷ் சந்திமால் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

உலகக் கிண்ணத் தொடரை எதிர்நோக்கியுள்ள இலங்கை அணிக்கு தற்போது அணித் தலைவர் மாற்றம் தேவைதானா? என்ற கேள்வி பலருக்குள் எழுந்தாலும், அணியை கட்டியெழுப்ப வேறு வழியில்லை என்ற ரீதியில் அந்த மாற்றத்தையும் தேர்வுக்குழு மற்றும் பயிற்றுவிப்பாளர் இணைந்து மேற்கொண்டுள்ளனர். தற்போது இலங்கை அணி மேலும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

அதுவும் 2019ஆம் ஆண்டு எந்த நாட்டில் உலகக்கிண்ணத் தொடரில் விளையாடவுள்ளதோ? அந்த அணியை இம்முறை இலங்கை அணி சந்திக்கிறது. அதுவும் மிகவும் கடினமான தருணத்தில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. எனினும், இந்த கடினமான தருணத்தில் அவர்களது நம்பிக்கை மட்டத்தை உயர்த்திக்கொள்வதற்கான வாய்ப்பும் கிடைத்துள்ளது.

இலங்கை ஒருநாள் குழாமிலிருந்து மெதிவ்ஸ்,மெண்டிஸ் நீக்கம் : குழாம் அறிவிப்பு

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில்..

உலகக் கிண்ணத்தை நடாத்தும் அணியுடன் மோதுவதால், ஒரு மாறுபட்ட மாற்றத்தை அணியால் உணர முடியும்.  சொந்த மண்ணின் சூழ்நிலைகளை பயன்படுத்தி ஒருநாள் தொடரை இலங்கை கைப்பற்றுமானால், உலகக் கிண்ணத்துக்கு செல்லும் போது மிகவும் தெளிவாகவும், நம்பிக்கையுடனும் போட்டியை எதிர்கொள்ளக் கூடிய வாய்ப்புகள் அணிக்கு அதிகரிக்கும்.

இங்கிலாந்து அணியுடனான வரலாற்றை நோக்கும் போது, இலங்கை அணியால் தொடரை வெற்றிக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையே அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. இங்கிலாந்து அணியின் தற்போதைய தரவரிசையை மறந்து, எமது வரலாற்றை பலமாக வைத்து விளையாடும் பட்சத்தில் இலங்கை அணியால் சாதிக்க முடியும். அத்துடன் கடந்தகால மோசமான தோல்விகளை மறைக்கவும், மறக்கவும் முடியும்.

தற்போதையை தரவரிசையை தவிர்த்து, வரலாற்றை பொருத்தவரையில், இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் சம பலமுடைய அணிகளாகவே கணிக்கப்படுகிறன. 198ஆ2ம் ஆண்டு ஆரம்பித்து இதுவரையில் இரண்டு அணிகளும் 69 ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இலங்கை அணி 34 போட்டிகளிலும், இங்கிலாந்து அணி 33 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளதுடன், ஒரு போட்டி சமனிலையிலும், ஒரு போட்டி கைவிடப்பட்டும் உள்ளன.

இலங்கை – இங்கிலாந்து ஒட்டுமொத்த ஒருநாள் போட்டி முடிவுகள்

  • மொத்த போட்டிகள் – 69
  • இலங்கை அணி – 34 போட்டிகளில் வெற்றி
  • இங்கிலாந்து அணி – 33 போட்டிகளில் வெற்றி
  • சமனிலை – ஒரு போட்டி
  • கைவிடப்பட்ட போட்டிகள் – ஒரு போட்டி

ஒருநாள் தொடர் முடிவுகளை பொருத்தவரையில் இரண்டு அணிகளும் மொத்தமாக 6 தொடர்களில் விளையாடியுள்ளன. முதலாவதாக 2006ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி 5 போட்டிகள் கொண்ட தொடரை 5-0 என வைட்வொஷ் செய்து வெற்றிக்கொண்டது. பின்னர் 2007ஆம் ஆண்டு இலங்கை வந்த இங்கிலாந்து அணி 3-2 என ஒருநாள் தொடரை கைப்பற்றியிருந்தது.  இதுவரையில் இரண்டு அணிகளும் 6 தொடர்களில் மோதி, தலா மூன்று தொடர்களில் வெற்றிகளை பெற்றுள்ளன.

இலங்கை – இங்கிலாந்து தொடர் முடிவுகள்

  • 2006 – இங்கிலாந்து – இலங்கை – 5-0 என இலங்கை வெற்றி
  • 2007 – இலங்கை – இங்கிலாந்து – 3-2 என இங்கிலாந்து வெற்றி
  • 2011 – இங்கிலாந்து – இலங்கை – 3-2 என இங்கிலாந்து வெற்றி
  • 2014 – இங்கிலாந்து – இலங்கை – 3-2 என இலங்கை வெற்றி
  • 2014 – இலங்கை – இங்கிலாந்து – 5-2 என இலங்கை வெற்றி
  • 2016 – இங்கிலாந்து – இலங்கை – 3-0 (5) என இங்கிலாந்து வெற்றி

இதவேளை, 1982ஆம் ஆண்டு இங்கிலாந்துடன் தங்களது சொந்த மண்ணில் முதல் ஒருநாள் போட்டியில் விளையாடிய இலங்கை அணி, இதுவரையில் மொத்தம் 21 போட்டிகளில் தமது மண்ணில் மோதியுள்ளது. இதில் இலங்கை அணி 15 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளதுடன், இங்கிலாந்து அணி 6 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது.

இலங்கையில் நடைபெற்ற இலங்கை – இங்கிலாந்து போட்டி முடிவுகள்

  • மொத்த போட்டிகள் – 21
  • இலங்கை – 15 போட்டிகளில் வெற்றி
  • இங்கிலாந்து – 6 போட்டிகளில் வெற்றி

இந்த முடிவுகளுடன் இலங்கை – இங்கிலாந்து அணிகள் முதல் ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ள தம்புள்ளை ரங்கிரி கிரிக்கெட் மைதானத்தில், இதுவரை 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் இலங்கை 3 போட்டிகளிலும், இங்கிலாந்து 2 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன.

ராங்பூர் அணிக்கு த்ரில் வெற்றிகளை பெற்றுத்தந்த திசரவுக்கு வாய்ப்பில்லை

பங்களாதேஷில் நடைபெறவுள்ள பங்களாதேஷ்..

இலங்கை – இங்கிலாந்து (தம்புள்ளை ரங்கிரி மைதானம்)

  • மொத்தப் போட்டிகள் – 5
  • இலங்கை – 3 போட்டிகளில் வெற்றி
  • இங்கிலாந்து – 2 போட்டிகளில் வெற்றி

இலங்கை – இங்கிலாந்து (பல்லேகலை மைதானம்)

  • மொத்தப் போட்டிகள் – 2
  • இலங்கை – ஒரு போட்டியில் வெற்றி
  • இங்கிலாந்து – ஒரு போட்டியில் வெற்றி

இதேநிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணிக்கு அதிக சாதகம் வாய்ந்த மைதானமாக ஆர்.பிரேமதாஸ மைதானம் காணப்படுகிறது. இந்த மைதானத்தில் நடைபெற்ற 9 போட்டிகளில் இலங்கை அணி ஒரு போட்டியில் மாத்திரமே தோல்வி கண்டுள்ளது.  இங்கிலாந்து அணி இந்த மைதானத்தில் 1993ஆம் ஆண்டு விளையாடிய முதல் போட்டியில் மாத்திரமே வெற்றிபெற்றுள்ளது.

இலங்கை – இங்கிலாந்து (ஆர்.பிரேமதாஸ மைதானம்)

  • மொத்த போட்டிகள் – 9
  • இலங்கை – 8 போட்டிகளில் வெற்றி
  • இங்கிலாந்து – ஒரு போட்டியில் வெற்றி

இங்கிலாந்து அணியுடன் வரலாற்று ரீதியில் இத்தகைய சிறந்த பெறுபேறுகளை கொண்டுள்ள இலங்கை அணிக்கு, இந்தத் தொடரில் வெற்றியீட்டுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றன. அதுவும் சொந்த மண்ணில் இங்கிலாந்தை எதிர்கொள்வதால் இலங்கை அணிக்கான சாகத்தன்மை மிகவும் அதிகம்.  

இந்திய அணிக்கு எதிரான தொடரிலிருந்து விலகும் கிறிஸ் கெயில்

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் அதிரடித் துடுப்பாட்ட..

அதுபோன்றே, கடந்த காலப் போட்டிகளில் பதியப்பட்டுள்ள தனிநபர் சாதனைகளை பார்க்கும்பொழுது இலங்கை வீரர்களின் ஆதிக்கமே உள்ளன.

இலங்கை சார்பாக அதிக ஓட்டங்கள்
குமார் சங்கக்கார 41 இன்னிங்ஸ்களில் 1625 ஓட்டங்கள்) – சராசரி 47.79

இங்கிலாந்து சார்பாக அதிக ஓட்டங்கள்
ஜோ ரூட் (17 இன்னிங்ஸ்களில் 825 ஓட்டங்கள்) – சராசரி 58.92

இலங்கை சார்பாக அதிக விக்கெட்டுக்கள்
லசித் மாலிங்க (25 இன்னிங்ஸ்களில் 39 விக்கெட்டுக்கள்) சராசரி 28.35

இங்கிலாந்து சார்பாக அதிக விக்கெட்டுக்கள்
ஜேம்ஸ் அண்டர்சன் (24 இன்னிங்ஸ்களில் 34 விக்கெட்டுக்கள்) சராசரி 26.97

எனினும், இங்கிலாந்து அணியை தற்போது குறைவாக எடைப்போட்டுவிட முடியாது. சர்வதேச தரவரிசையில் முதலிடத்தில் உள்ள அணி. அத்துடன் இங்கிலாந்து வீரர்கள் இந்தியா, பங்களாதேஷ் போன்ற மைதானங்களில் அதிகமான போட்டிகளில் விளையாடி வருகின்றனர். இதனால் அந்த அணியால் இலங்கை போன்ற சூழ்நிலைக்கு தங்களை மாற்றிக்கொண்டு விளையாட முடியும்.

எவ்வாறாயினும் தற்போது அணிக்குள் புதிய வீரர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் சர்வதேச அனுபவம் கொண்ட திசர பெரேரா, உபுல் தரங்க, குசல் பெரேரா ஆகியோரும் அணியில் எதிர்பார்க்கப்படும் முக்கிய வீரர்களாக மாறியுள்ளனர். இவர்களுடன் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க அணிக்கு திரும்பியுள்ளமையும், அகில தனன்ஜயவின் சுழற்பந்து வீச்சும் அணிக்கும் மேலும் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை அணி இந்த நம்பிக்கைகளுடன் மாத்திரமின்றி, புதிய தலைவர் தினேஷ் சந்திமால், அவரது நிதான துடுப்பாட்டம் மற்றும் துடிப்புடன் கூடிய அணித் தலைமை என்பவற்றுடன் அணியை தோல்விகளில் இருந்து மீட்டு, அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்வார் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.  

ஒரு நாள் தொடருக்கான இலங்கை குழாம்

தினேஷ் சந்திமால் (தலைவர்), தனன்ஜய டி சில்வா, குசல் பெரேரா, உபுல் தரங்க, சதீர சமரவிக்ரம, நிரோஷன் டிக்வெல்ல, திசர பெரேரா, தசுன் சானக, அகில தனன்ஜய, அமில அபோன்சோ, லக்ஷான் சந்தகன், லசித் மாலிங்க, நுவான் பிரதீப், கசுன் ராஜித, துஷ்மந்த சமீர

ஒரு நாள் தொடருக்கான இங்கிலாந்து குழாம்

இயன் மோர்கன் (தலைவர்), மொயீன் அலி, ஜொன்னி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர், சாம் கர்ரன், டொம் கர்ரன், லியாம் டோசன், அலெக்ஸ் ஹேல்ஸ், லியாம் பிளங்கட் (கடைசி இரண்டு போட்டிகளுக்கும்), ஆதில் ரஷித், ஜோ ரூட், ஜேசன் ரோய், பென் ஸ்டொக்ஸ், ஒலி ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட்

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<