லசித் மாலிங்கவுக்கு நல்வரவு

648

ஆசிய கிண்ணத்தின் முதல் போட்டியில் டுபாயில் இலங்கை அணி பங்களாதேஷை சந்தித்தபோது, ஓர் ஆண்டுக்குப் பின்னர் இலங்கை அணிக்கு திரும்பிய லசித் மாலிங்கவுக்கு அது முக்கியமான போட்டியாக இருந்தது. இதனால் இந்தப் போட்டியில் லசித் மாலிங்க மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தமை போட்டியை விறுவிறுப்பாக முக்கிய காரணமாக இருந்தது.

இதற்கு முன்னர் கடைசியாக 2017 செப்டெம்பர் 3 ஆம் திகதி இந்தியாவுக்கு எதிரான போட்டியிலேயே மாலிங்க இலங்கை அணிக்காக ஆடினார். அதாவது 377 நாட்கள் அவர் இலங்கை ஒருநாள் அணிக்காக ஆடாமல் இருந்துள்ளார். இந்த காலப்பிரிவில் இலங்கை அணி 18 போட்டிகளில் விளையாடி அதில் 12 போட்டிகளில் தோற்று 6 ஆட்டங்களில் மாத்திரம் வெற்றியீட்டியுள்ளது.

மாலிங்கவின் பந்துவீச்சு வீண்; ஆசிய கிண்ண முதல் போட்டியில் பங்களாதேஷ் வெற்றி

ஆசியக் கிண்ணத் தொடரின், 14 ஆவது அத்தியாயம் இன்று (15) ஐக்கிய ஐக்கிய அரபு இராச்சியத்தில் 14 ஆவது முறையாக நடைபெறும் ஆசியக் கிண்ணத் தொடரின்…….

இந்த நிலையில், நேற்றைய போட்டியின் முதல் ஓவரிலேயே அணியில் தனது தேவையை நிரூபித்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய மாலிங்க தனது 10 ஓவர்களுக்கும் 23 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது கடந்த நான்கு ஆண்டுகளில் ஒருநாள் போட்டிகளில் மாலிங்கவின் சிறந்த பந்துவீச்சாகும். இதற்கு முன் 2014 மார்ச் மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவர் 56 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

எனினும், அவர் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 17 தடவைகள் 4 அல்லது அதற்கு மேல் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இலங்கை அணிக்கு இது மிகக் குறை

262 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலெடுத்தாட வந்த இலங்கையின் ஆரம்பவரிசை, மத்தியவரிசை, பின்வரிசை என எந்த வீரரும் சொபிக்காத நிலையில் 124 ஓட்டங்களுக்கே சுருண்டது.

பங்களாதேஷுக்கு எதிராக ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இலங்கை அணி பெற்ற மிகக் குறைவான ஓட்டங்கள் இதுதான். இதற்கு முன்னர் 2009ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் திகதி டாக்காவில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 147 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்ததே மோசமான பதிவாக இருந்தது.    

தமது கடைசி ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள வீரர்கள்

கிரிக்கெட்டில் ஆசிய கண்டத்தின் ஜாம்பவான் யார்? என்பதை அடையாளம் காணவும், ஆசிய நாடுகள் இடையே நல்லுறவை வளர்க்கவும்……

பங்களாதேஷின் சிறந்த வெற்றி

பங்களாதேஷ் அணி 137 ஓட்டங்களால் பெற்ற வெற்றி அந்த அணி வெளிநாட்டு மண்ணில் பெற்ற மிகச் சிறந்த வெற்றியாகும். பங்களாதேஷ் அணி இதனை விடவும் அதிக ஓட்ட வித்தியாசத்தில் வெற்றிகளை பெற்றபோதும் அதுவெல்லாம் சொந்த மண்ணில் பெற்ற வெற்றிகளாகும்.

அந்த அணி இதற்கு முன்னர் வெளிநாட்டு மண்ணில் பெற்ற சிறந்த வெற்றி 2013 ஆம் ஆண்டு ஜிம்பாப்வேயுக்கு எதிராக புலவாயோவில் 121 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியாகும்.

மறுபுறம் இது இலங்கை அணியின் மூன்றாவது மிக மோசமான தோல்வியாகும். 2002 ஆம் ஆண்டு பாகஸ்தானுக்கு எதிராக 217 ஓட்டங்களால் பெற்ற தோல்வியும், 1986ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 193 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெற்ற தோல்விகளுமே இதனை விடவும் மோசமாகும்.   

குசல் மெண்டிஸை துரத்தும் துரதிஷ்டம்

பங்களாதேஷுக்கு எதிரான போட்டி குசல் மெண்டிஸின் 50ஆவது ஒருநாள் சர்வதேச போட்டியாகும். அவர் 2016 ஜுன் 16 ஆம் திகதியே அயர்லாந்துக்கு எதிராக தனது அறிமுக ஒருநாள் போட்டியில் களமிறங்கினார்.

இதன்படி இலங்கை அணிக்காக 50 ஒருநாள் சர்வதேச போட்டியில் ஆடும் 46 ஆவது வீரராக குசல் மெண்டிஸ் பதிவானார்.

இதுமட்டுமல்லாது குசல் மெண்டிஸ் பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் முதல் முறையாகவே இலங்கை அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கினார். அதாவது இலங்கை அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரராக வரும் 52 ஆமவர் மெண்டிஸ் ஆவார்.

Photos: Sri Lanka vs Bangladesh | Asia Cup 2018 – Match 1

ThePapare.com | 15/09/2018 Editing and re-using images without permission of ThePapare.com will be considered…..

எனினும், அவர் முகம்கொடுத்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். குசல் மெண்டிஸ் கடைசியாக ஆடிய 21 ஒருநாள் போட்டிகளில் ஐந்து தடவைகள் பூஜ்யத்திற்கு ஆட்டமிழந்திருப்பதோடு ஒரு அரைச்சதம் கூட இல்லாமல் 267 ஓட்டங்களையே பெற்றுள்ளார். அதாவது இந்தக் காலத்தில் போட்டி ஒன்றில் சராசரியான 14 ஓட்டங்களே பெற்றுள்ளார்.

23 ஆண்டுகள் காத்திருந்த பங்களாதேஷ்

பங்களாதேஷ் அணி ஐக்கிய அரபு இராச்சியத்தில் போட்டி ஒன்றில் ஆடுவது கடந்த 23 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். கடைசியாக அந்த அணி இங்கு 1995ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் திகதி பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் களமிறங்கியது. அதாவது ஆசிய கிண்ணத்திற்கான பங்களாதேஷ் குழாத்தில் இருக்கும் அபூ ஹைதர் (22), மொசதிக் ஹொஸைன் (22), முஸ்தபிசுர் ரஹ்மான் (22), நஸ்முல் ஹொஸைன் ஷன்டோ (20), மஹதி ஹஸன் (20) அப்போது பிறந்திருக்கவே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.   

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<