முத்தரப்பு T20 தொடரில் இலங்கை கட்புலனற்றோர் அணிக்கு முதல் வெற்றி

178

இலங்கை, இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் கட்புலனற்றோர் கிரிக்கெட் அணிகள் பங்குபற்றி வருகின்ற முத்தரப்பு T20 தொடரின் மூன்றாவது போட்டியில், இலங்கை கட்புலனற்றோர் கிரிக்கெட் அணி இங்கிலாந்து கட்புலனற்றோர் கிரிக்கெட் அணியினை 78 ஓட்டங்களால் வீழ்த்தி தொடரில் முதல் வெற்றியினை பதிவு செய்துள்ளது.

இந்திய கட்புலனற்றோர் அணியிடம் தோல்வியை சந்தித்த இலங்கை கட்புலனற்றோர் அணி

இந்தியாவில் ஆரம்பமான இந்தியா, இலங்கை, இங்கிலாந்து கட்புலனற்றோர்…

இந்தியாவில் நடைபெற்று வருகின்ற இந்த முத்தரப்பு T20 தொடரில் தமது முதல் போட்டியில் இந்தியாவிடம் தோல்வியினை தழுவியிருந்த இலங்கை கட்புலனற்றோர் கிரிக்கெட் அணி தமது முதல் வெற்றியினை எதிர்பார்த்த வண்ணம் இங்கிலாந்து கட்புலனற்றோர் கிரிக்கெட் அணியை எதிர்கொண்டிருந்தனர்.

கோவாவின், GCA மைதானத்தில் ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து கட்புலனற்றோர் கிரிக்கெட் அணித் தலைவர் E. ஹொஸ்ஸேல் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இலங்கை கட்புலனற்றோர் அணிக்கு வழங்கினார்.

இலங்கை கட்புலனற்றோர் அணிக்கு ஆரம்ப வீரர்களில் ஒருவராக வந்த S. சம்பத்தும் அணித் தலைவர் C.தேசப்பிரியவும் இணைந்து அதிரடியான ஆட்டம் மூலம் ஓட்டங்களை அதிகரிக்க உதவியிருந்தனர். இதில் சம்பத் 26 பந்துகளை எதிர்கொண்டு 4 பெளண்டரிகள் அடங்கலாக 37 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த இதேநேரம், தேசப்பிரிய வெறும் 43 பந்துகளில் 15 பெளண்டரிகளை விளாசி 99 ஓட்டங்கள் பெற்று ஒரு ஓட்டத்தினால் சதம் பெறத் தவறியிருந்தார்.

சம்பத், தேசப்பிரிய ஆகியோரின் இந்த அதிரடியோடு இலங்கை கட்புலனற்றோர் அணி 20 ஓவர்கள் நிறைவில், 7 விக்கெட்டுக்களை இழந்து 260 ஓட்டங்களை குவித்துக் கொண்டது.

வரலாற்றின் ஊக்குவிப்புடன் இங்கிலாந்துடனான ஒருநாள் தொடரில் மோதும் இலங்கை

ஆசியக் கிண்ணத் தொடரில் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான்…

இங்கிலாந்து கட்புலனற்றோர் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பாக, M. டீன் 22 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுக்களை சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்பின்னர் போட்டியின் வெற்றி இலக்கான 261 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து கட்புலனற்றோர் கிரிக்கெட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 182 ஓட்டங்களை மட்டும் பெற்று போட்டியில் தோல்வியடைந்தது.

இங்கிலாந்து கட்புலனற்றோர் அணியின் துடுப்பாட்டத்தில், M. டீன் 48 ஓட்டங்களையும் S. முர்ராய் 34 ஓட்டங்களையும் பெற்றிருந்ததோடு இலங்கை கட்புலனற்றோர் கிரிக்கெட் அணிக்காக D. மத்துகம 2 விக்கெட்டுக்களையும், D. மதுவந்த ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றியிருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

இலங்கை – 260/7 (20) C. தேசப்பிரிய 99, சம்பத் 37,  பிரியங்க குமார 29, M. டீன் 2/22

இங்கிலாந்து – 182/7 (20) M. டீன் 48, S. முர்ரய் 30, L. சக் 20, தினேஷ் மத்துகம 2/31

முடிவு – இலங்கை கட்புலனற்றோர் கிரிக்கெட் அணி 78 ஓட்டங்களால் வெற்றி

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க