இங்கிலாந்து இளைஞர் அணியுடனான போட்டியை சமநிலையில் முடித்த இலங்கை இளைஞர் அணி

215
SL youth cricket

இங்கிலாந்துக்கு விஜயம் செய்துள்ள இலங்கை இளைஞர் அணிக்கும், இங்கிலாந்து இளைஞர் அணிக்கும் இடையிலான 4 நாள் டெஸ்ட் போட்டி கடந்த 26 ஆம் திகதி ஆரம்பித்தது. தனது முதல் இனிங்ஸிற்காக 500 எனும் பிரம்மாண்டமான ஓட்டத்துடன் இங்கிலாந்து இளைஞர் அணி ஆட்டதை நிறுத்திக்கொள்ள இலங்கை இளைஞர் அணி முதல் இனிங்ஸிற்காக 335 ஓட்டங்களைப் பெற்றது. தொடர்ந்து இரண்டாவது இனிங்ஸையும் இலங்கை அணி துடுப்பெடுத்தாடி 4ஆவது  நாள் ஆட்ட நேர  முடிவின் பொழுது 182 ஓட்டங்களைப் பெற்று 3  விக்கட்டுகளை இழந்து காணப்பட்டது. இதனால் போட்டி வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிந்தது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய  இங்கிலாந்து இளைஞர் அணி முதல் இனிங்ஸிற்காக 500 எனும் பிரம்மாண்டமான ஓட்ட எண்ணிக்கையைப் பெற்று ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது.

sl youth cicketrஇங்கிலாந்து இளைஞர் அணிக்காக ஆரம்பத் துடுப்ப்பாட்ட வீரர் வெஸ்ட்பரி மிக அற்புதமாக துடுப்பெடுத்தாடி 196 ஓட்டங்களும், பார்ட்லட் 131 ஓட்டங்களும் பெற்று இங்கிலாந்து இளைஞர் அணியின் இவ் ஓட்ட எண்ணிக்கைக்கு  உதவினர்.

500 ஓட்டங்களை 9 விக்கட்டுகளை இழந்து பெற்ற  பின்னர் இரண்டாம் நாளில் ஆட்டத்தை நிறுத்திக்கொண்டனர்.

தமது முதல் இனிங்ஸைத் துடுப்பெடுத்தாட வந்த இலங்கை அணி முதல் இரண்டு விக்கட்டுகளையும் குறைந்த ஓட்டத்திற்கு இழந்தாலும் தலைவர் அசலங்க, உப தலைவர் சம்மு அஷான், பெர்னாண்டோ மற்றும் டேனியலின் உதவியுடன் 335 ஓட்டங்களைப் போராடிப் பெற்றது. தலைவர் அசலங்க 81 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

சம்மு அஷான் 51 ஓட்டங்களையும், டேனியல் 62 ஓட்டங்களையும் பெற்றனர். மூன்றாம் நாள் முடிவின் பொழுது 235 ஓட்டங்களைப் பெற்று 6 விக்கட்டுகளை இலங்கை இளைஞர் அணி இழந்து இருந்தது.

இறுதி நாளில் 235 ஓட்டங்களுடன் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை இளைஞர் அணி 335 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

இறுதி நாளில் டேனியல் இலங்கை அணிக்காக போராடிய பொழுதும் 335 ஓட்டங்களுக்கு இலங்கை ஆட்டமிழந்தது. சில்வாவும் டேனியலுக்குத் துணையாக 33 ஓட்டங்களைப் பெற்று உதவினார்.

sl youth cricketகுறைந்த எண்ணிக்கையான ஓட்டத்தை முதல் இனிங்ஸில் பெற்றதால் தொடர்ந்து 2ஆவது இனிங்ஸையும் இலங்கை அணி  துடுப்பெடுத்தாடியது.

முதல் இனிங்ஸில் பிரகாசிக்காத நிசங்க இரண்டாவது இனிங்ஸிலும் பிரகாசிக்கத் தவறி குறைந்த ஓட்டத்திற்கு ஆட்டமிழந்தார். எனினும் ஜயலத் மற்றும் சரித அசலங்க ஜோடி 112 ஓட்டங்களை இணைப்பாகப் பெற்று இலங்கை இளைஞர் அணியை மீட்டனர்.

இருவரும் முறையே 77 மற்றும் 70 ஓட்டங்களைப் பெற்றனர். இறுதி நாள் ஆட்ட நேர முடிவின் பொழுது ஜயலத்  மற்றும் சம்மு அஷான் ஆட்டமிழக்காமல் காணப்பட இலங்கை இளைஞர் அணி 182 ஓட்டங்களைப் பெற்று போட்டியை வெற்றி தோல்வி இன்றி  சமநிலை செய்தது.

இலங்கை இளைஞர் அணி 500 எனும் பாரிய ஓட்ட எண்ணிக்கையை விட்டுக்கொடுத்த பொழுதும், மற்றைய நாட்களில் சிறப்பாக விளையாடி போட்டியை சமநிலையில் முடித்துக்கொண்டது.

போட்டியின் சுருக்கம்

இங்கிலாந்து இளைஞர் அணி (முதல் இனிங்ஸ்) – 500/9d (131)

வெஸ்ட்பரி 196, பார்ட்லட் 131, போப் 78

லஹிரு குமார 2/104, டேனியல் 3/91

இலங்கை இளைஞர் அணி (முதல் இனிங்ஸ்) – 335(104)

சரித் அசலங்க 81, சம்மு அஷான் 51, பெர்னாண்டோ 45, டேனியல் 62

விர்டி 5/77, கோப்லின் 2/45

இலங்கை இளைஞர் அணி (2ஆவது இனிங்ஸ்) – 182/3(39)

ஜயலத் 77*, அசலங்க 70

பானைல் 2/62, பியர்ட் 1/12