இரண்டாம் போட்டியை வென்று டெஸ்ட் தொடரை சமன் செய்த இலங்கை இளம் அணி

15

சுற்றுலா பங்களாதேஷ் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி மற்றும் இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி ஆகியவை இடையே கட்டுநாயக்கவில் நடைபெற்ற இளையோர் டெஸ்ட் தொடரின் இரண்டாவதும் இறுதியுமான போட்டியில் இலங்கை 19 வயதின் கீழ் அணி 74 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.  

சவாலான வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடும் பங்களாதேஷ் இளையோர் அணி

பங்களாதேஷ் இளம் அணியுடனான இந்த வெற்றியுடன் இலங்கை 19 வயதின் கீழ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட இளையோர் டெஸ்ட் தொடரினை 1-1 என சமநிலையில் முடித்துள்ளது.

இலங்கைக்கு சுற்றுலா வந்திருக்கும் பங்களாதேஷ் இளையோர் அணி அவர்களின் சுற்றுப் பயணத்தின் முதற்கட்டமாக இலங்கை இளையோர் அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.

அந்த வகையில் இரண்டு அணிகளுக்கும் இடையிலான இளையோர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் விருந்தினர் பங்களாதேஷ் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை அடைந்தது. பின்னர் இரண்டு அணிகளுக்கும் இடையிலான இளையோர் டெஸ்ட் தொடரின் இரண்டாவதும் இறுதியுமான போட்டி கடந்த செவ்வாய்க்கிழமை (23) கட்டுநாயக்கவில் ஆரம்பமானது.

இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி தமது முதல் இன்னிங்ஸில் 226 ஓட்டங்களினை குவித்த வேளையில், பங்களாதேஷின் இளம் வீரர்கள் 109 ஓட்டங்களை மாத்திரம் பெற்று முதல் இன்னிங்ஸில் சுருண்டிருந்தனர்.

Photos: Bangladesh U19 vs Sri Lanka U19 | 2nd Youth Test | Day 3

பின்னர், 117 ஓட்டங்கள் முன்னிலையோடு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இலங்கை 19 வயதின் கீழ் அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 233 ஓட்டங்கள் பெற்றிருந்த போது தமது துடுப்பாட்டத்தை இடைநிறுத்தி போட்டியின் வெற்றி இலக்காக 351 ஓட்டங்களை பங்களாதேஷ் அணிக்கு நிர்ணயம் செய்தது.

இந்த வெற்றி இலக்கினை அடைவதற்காக தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பம் செய்த பங்களாதேஷ் அணி 75 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்து காணப்பட்ட போது போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது. களத்தில் சஜித் ஹசன் 29 ஓட்டங்களுடனும், பங்களாதேஷ் 19 வயதின் கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணியின் தலைவர் தவ்ஹீத் ரித்தோய் 2 ஓட்டங்களுடனும் அவர்களது தரப்பிற்கு நம்பிக்கை தந்து ஆட்டமிழக்காது இருந்தனர்.

இன்று (26)  போட்டியின் நான்காவதும் இறுதியுமான நாளில் வெற்றி இலக்கினை அடைய இன்னும் 276 ஓட்டங்கள் தேவைப்பட்டவாறு பங்களாதேஷ் அணி தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடர்ந்தது.

மிகவும் பெரிய இலக்கு ஒன்றினை நோக்கி இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த பங்களாதேஷ் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணிக்கு இலங்கையின் இளம் சுழல் வீரரான ரோஹான் சஞ்சய தொடக்கத்தில் இருந்தே நெருக்கடி தந்தார்.   

இதன்படி, போட்டியின் இறுதி நாளில் ரோஹான் சஞ்சயவின் முதல் விக்கெட்டாக சஜித் ஹசன் 36 ஓட்டங்களோடு ஓய்வறை நடந்தார். தொடர்ந்து ரோஹான் சஞ்சயவிற்கு உறுதுணையாக இருந்த மற்றுமொரு இளம் சுழல் வீரரான சந்துன் மெண்டிஸின் அபாரத்தினால் பங்களாதேஷ் இளம் அணியின் தலைவர் தவ்ஹீத் ரித்தோயின் விக்கெட் 18 ஓட்டங்களுடன் தகர்க்கப்பட்டது.  

இப்படியாக தொடர்ந்தும் தமது துடுப்பாட்ட வீரர்களை இழந்த பங்களாதேஷ் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணிக்கு மத்திய வரிசையில் ஆடிய MD அக்பர் அலி மட்டுமே அரைச்சதம் ஒன்றுடன் நம்பிக்கை தந்தார். எனினும், அவரது விக்கெட்டும் ரோஹான் சஞ்சயவினால் பின்னர் வீழ்த்தப்பட பங்களாதேஷ் 19 வயதின் கீழ் அணி தமது இரண்டாம் இன்னிங்ஸில் 83.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 276 ஓட்டங்களை மட்டும் பெற்று போட்டியில் தோல்வியினை தழுவியது.  

பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டம் சார்பாக சிறப்பான முறையில் பிரகாசித்த MD அக்பர் அலி 113 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 11 பெளண்டரிகள் உள்ளடங்கலாக 90 ஓட்டங்களை குவித்திருந்தார்.

இங்கிலாந்துக்கு வழங்கிய மோசமான தோல்வியின் நம்பிக்கையுடன் T20 யில் களமிறங்கும் இலங்கை

இலங்கை 19 வயதின் கீழ் அணியின் பந்துவீச்சு சார்பாக ரோஹான் சஞ்சய இம்முறை 96 ஓட்டங்களை விட்டுத்தந்து 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்ததோடு, பங்களாதேஷ் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணியின் முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்திலும் முன்னதாக 5 விக்கெட்டுக்களை சாய்த்து போட்டியில் மொத்தமாக 10 விக்கெட்டுக்களுடன் இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணியின் வெற்றியினை உறுதி செய்திருந்தார். அதோடு, சந்துன் மெண்டிஸும் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றி இலங்கைத் தரப்பின் வெற்றிக்கு பங்களிப்புச் செய்திருந்தார்.

இப்போட்டியின் தோல்வியோடு தமது இலங்கை சுற்றுப் பயணத்தின் முதற்கட்டத்தை இளையோர் டெஸ்ட் தொடருடன் நிறைவு செய்திருக்கும் பங்களாதேஷ் 19 வயதின் கீழ் அணி, அடுத்ததாக இம்மாதம் 30ஆம் திகதி ஆரம்பமாகும் ஐந்து போட்டிகள் கொண்ட இளையோர் ஒரு நாள் தொடரில் இலங்கை 19 வயதின் கீழ் அணியுடன் மீண்டும் பலப்பரீட்சை நடாத்துகின்றது.

போட்டியின் சுருக்கம்

Title

Full Scorecard

Sri Lanka U19

226/10 & 233/9

(92 overs)

Result

Ban U19

109/10 & 276/10

(83.1 overs)

SLU19 won by 74 runs

Sri Lanka U19’s 1st Innings

BattingRB
Navod Paranavithana c T Hridoy b S Alam79153
Nipun Dananjaya c R Hossain b S Alam013
Kamil Mishara lbw by R Hasan5296
Mohomed Shamaz b S Alam1034
Sonal Dinusha c A Ali b M Chowdhury836
Janishka Perera c A Ali b S Alam01
Sandun Mendis c S Hossain b S Alam1026
Chaminda Wijesinghe c M Hasan b R Hossain1766
Ashan Daniel c R Hossain b M Chowdhury326
Naveen Fernando not out2064
Rohan Sanjaya b M Chowdhury1433
Extras
13 (b 6, lb 3, nb 2, w 2)
Total
226/10 (91 overs)
Fall of Wickets:
1-0 (N Dananjaya, 5.1 ov), 2-122 (K Mishara, 37.5 ov), 3-144 (N Paranavithana, 48.3 ov), 4-149 (M Shamaz, 50.1 ov), 5-149 (J Perera, 50.2 ov), 6-167 (S Mendis, 58.1 ov), 7-167 (S Dinusha, 60.6 ov), 8-176 (A Daniel, 68.5 ov), 9-195 (C Wijesinghe, 80.1 ov), 10-226 (N Fernando, 90.6 ov)
BowlingOMRWE
Mittunjoy Chowdhury256522 2.08
Sahin Alam144375 2.64
Shamim Hossain93160 1.78
Towhid Hridoy72250 3.57
Rishad Hossain152501 3.33
Rakibul Hasan216371 1.76

Ban U19’s 1st Innings

BattingRB
Tanzid Hasan c N Fernando b R Sanjaya5055
Sajd Hossain c K Mishara b R Sanjaya2237
Hassan Joy b A Daniel03
Towhid Hridoy b A Daniel18
Shamim Hossain lbw by A Daniel311
Akbar Ali c K Mishara b R Sanjaya116
Amite Hasan c A Daniel b R Sanjaya07
Rakibul Hasan not out1544
Mittunjoy Chowdhury lbw by A Daniel314
Rishad Hossain b A Daniel04
Sahin Alam lbw by R Sanjaya019
Extras
14 (b 8, lb 4, nb 2)
Total
109/10 (36 overs)
Fall of Wickets:
1-77 (S Hossain, 11.5 ov), 2-78 (H Joy, 12.5 ov), 3-82 (T Hridoy, 14.6 ov), 4-90 (S Hossain, 18.2 ov), 5-90 (T Hasan, 19.2 ov), 6-90 (A Hasan, 21.3 ov), 7-91 (A Ali, 23.1 ov), 8-94 (M Chowdhury, 26.4 ov), 9-94 (R Hossain, 28.2 ov), 10-109 (S Alam, 35.6 ov)
BowlingOMRWE
Naveen Fernando30190 6.33
Chamindu Wijesinghe51220 4.40
Ashan Daniel154375 2.47
Rohan Sanjaya114175 1.55
Sandun Mendis2020 1.00

Sri Lanka U19’s 2nd Innings

BattingRB
Navod Paranavithana st. A Ali b T Hridoy3662
Nipun Dananjaya c T Hasan b R Hasan2328
Kamil Mishara c T Hasan b R Hasan1370
Mohomed Shamaz st. A Ali b R Hasan1484
Sonal Dinusha c T Hasan b R Hasan3798
Janishka Perera c A Hasan b S Alam024
Sandun Mendis c S Hossain b R Hasan3671
Chamindu Wijesinghe lbw by R Hasan5569
Naveen Fernando c T Hasan b R Hasan03
Ashan Daniel not out1029
Rohan Sanjaya not out116
Extras
8 (b 4, lb 1, nb 2, w 1)
Total
233/9 (92 overs)
Fall of Wickets:
1-47 (N Dananjaya, 10.5 ov), 2-61 (N Paranavithana, 20.5 ov), 3-82 (K Mishara, 33.4 ov), 4-111 (M Shamaz, 48.5 ov), 5-120 (J Perera, 55.6 ov), 6-134 (S Dinusha, 56.1 ov), 7-215 (C Wijesinghe, 80.3 ov), 8-215 (N Fernando, 81.6 ov), 9-222 (S Mendis, 85.1 ov)
BowlingOMRWE
Sahin Alam141311 2.21
Shamim Hossain41120 3.00
Rakibul Hasan4210937 2.21
Towhid Hridoy82241 3.00
Rishad Hossain101410 4.10
Mittunjoy Chowdhury147270 1.93

Ban U19’s 2nd Innings

BattingRB
Tanzid Hasan lbw by R Sanjaya3748
Sajd Hossain c K Mishara b R Sanjaya3680
Towhid Hridoy c K Mishara b S Mendis1848
Amite Hasan b R Sanjaya1653
Shamim Hossain c J Perera b S Mendis1334
Akbar Ali b R Sanjaya90113
Rakibul Hasan c R Sanjaya b S Mendis47
Mrittunjoy Chowdhury c N Paranavithana b A Daniel2321
Mahmudul Joy lbw by C Wijesinghe2674
Rishad Hossain lbw by R Sanjaya019
Sahin Alam not out04
Extras
13 (b 7, nb 2, w 4)
Total
276/10 (83.1 overs)
Fall of Wickets:
1-66 (T Hasan, 13.4 ov), 2-84 (S Hossain, 26.2 ov), 3-112 (T Hridoy, 37.2 ov), 4-122 (A Hasan, 40.4 ov), 5-128 (S Hossain, 45.4 ov), 6-144 (R Hasan, 47.5 ov), 7-174 (M Chowdhury, 53.4 ov), 8-240 (M Joy, 74.2 ov), 9-269 (R Hossain, 81.4 ov), 10-276 (A Ali, 83.1 ov)
BowlingOMRWE
Naveen Fernando2060 3.00
Chamindu Wijesinghe71231 3.29
Ashan Daniel246871 3.63
Rohan Sanjaya35.15965 2.74
Sandun Mendis111453 4.09
Navod Paranavithana40120 3.00

 

முடிவு – இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி 74 ஓட்டங்களால் வெற்றி