மினி உலகக் கிண்ண சம்பியன்களாக முடிசூடிய இலங்கை மற்றும் அமெரிக்க அணிகள்

554

இலங்கைக்கான ஜேர்மன் தூதரகம் மற்றும் தாபித் அஹ்மத் கால்பந்து பயிற்சியகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் கொழும்பு ரேஸ் கோர்ஸ் சர்வதேச அரங்கில் நடைபெற்ற மினி உலகக் கிண்ண கால்பந்து தொடரின் ஆடவர் பிரிவில் ஜேர்மனி அணியை 1-0 என வீழ்த்திய அமெரிக்க அணியும், மகளிர் பிரிவில் நோர்வே அணியை 5-1 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்திய இலங்கை அணியும் சம்பியன்களாக தெரிவாகின.

செரண்டிப் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக இஸ்ஸடீன் நியமனம்

இலங்கை தேசிய கால்பந்து அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய இலங்கை..

16 வயதுக்குட்பட்ட வீர, வீராங்கனைகளுக்கான பிரிவுகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த தொடரில், கிண்ணத்திற்காக யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, கம்பஹா மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களினை சேர்ந்த நான்கு ஆடவர் அணிகளும், நான்கு மகளிர் அணிகளும் பங்குபற்றியிருந்தன.

இவ்வணிகளுக்கு சுவிட்சர்லாந்து, நோர்வே, நெதர்லாந்து, பிரேசில், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் தூதரகங்கள் ஆதரவினை வழங்கின. எனவே, குறிப்பிட்ட பிரதேசங்களை சேர்ந்த அணிகள் தமக்கு ஆதரவளிக்கின்ற தூதரகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடியிருந்தன.  

ஆடவர் பிரிவில் விளையாடியிருந்த அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளுக்காக முறையே யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய பிரதேச அணிகள் விளையாடின. அதேபொன்று, மகளிர் அணிகளான ஸ்விட்சர்லாந்து, இலங்கை, பிரேசில் மற்றும் நோர்வே ஆகிய அணிகளை முறையே கொழும்பு, யாழ்ப்பாணம், நீர்கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய வீராங்கனைகள் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடினர்.

மகளிர் பிரிவின் இறுதிப் போட்டியில், அபார ஆட்டத்தினை வெளிக்காண்பித்த இலங்கை அணி வீராங்கனைகள் 5-1 என்கிற கோல்கள் கணக்கில் நோர்வே அணியை வீழ்த்தினர்.  

இத்தொடரில்  இலங்கை அணியினை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடியிருந்த யாழ்ப்பாண இளம் மங்கைகள், தமது அபார ஆட்டத்தின் மூலம் தொடரில் தாம் விளையாடியிருந்த 4 போட்டிகளிலும் மொத்தமாக 18 கோல்கள் வரை பெற்றதுடன், எதிரணிகளுக்கு 3 கோல்களை மாத்திரமே விட்டுக் கொடுத்திருந்தனர்.

மகளிர் பிரிவில் சிறந்த வீராங்கனையாக, பாஸ்கரன் சனு தெரிவு செய்யப்பட்டதோடு, சிறந்த கோல்காப்பாளராக ஜெகதெசுரன் ஜெதுனிஷ்கா தெரிவாகி, அதற்கான விருதைப் பெற்றார்.

மினி உலகக் கிண்ண புகைப்படங்கள்

ஆடவர் பிரிவிலும், இறுதிப் போட்டியில் யாழ்ப்பாண வீரர்கள் அங்கம் வகித்த அமெரிக்க அணியானது, ஜேர்மன் அணியை 1-0 என வீழ்த்தி சம்பியன் கிண்ணத்தை வென்றது.

ஆடவர் பிரிவில், சிறந்த வீரருக்கான விருது அமெரிக்க அணியை பிரிதிநிதித்துவம் செய்திருந்த ஸ்ரீகாந்த் தர்ஷிகனுக்கு வழங்கப்பட்டது. சிறந்த கோல்காப்பாளருக்கான விருது ஜேர்மனி அணிக்காக ஆடியிருந்த மொஹமட் நுஸ்காளுக்கு வழங்கப்பட்டிருந்தது.

போட்டிகளின் முடிவுகள்

ஆடவர் பிரிவு
அமெரிக்கா 0 – 0 பிரான்ஸ்
ஜேர்மனி 1 – 0 நெதர்லாந்து
அமெரிக்கா 5 – 0 நெதர்லாந்து
ஜேர்மனி 0-0 பிரான்ஸ்
அமெரிக்கா 0 -0 ஜேர்மனி
பிரான்ஸ் 4 – 0 நெதர்லாந்து
ஜேர்மனி 0 – 1 அமெரிக்கா (இறுதிப்போட்டி)

மகளிர் பிரிவு
ஸ்விட்சர்லாந்து 1 – 6 இலங்கை
பிரேசில் 3 – 1 நோர்வே
ஸ்விட்சர்லாந்து 0 – 3 நோர்வே
பிரேசில் 1 – 3 இலங்கை
ஸ்விட்சர்லாந்து 0 – 2 பிரேசில்
இலங்கை 4 -0 நோர்வே
நோர்வே 1 – 5 இலங்கை (இறுதிப் போட்டி)