இலங்கை இளையோர் தேசிய கால்பந்து அணிக்கான வீரர்கள் தேர்வு இம்மாதம்

575

இலங்கை 18 வயதின்கீழ் மற்றும் 19 வயதின்கீழ் ஆடவர் கால்பந்து அணிகளுக்கான வீரர்கள் தேர்வு எதிர்வரும் (ஜூலை மாதம்) 10ஆம் மற்றும் 11 ஆம் திகதிகளில் கொழும்பு சிட்டி கால்பந்து வளாகத்தில் இலங்கை கால்பந்து சம்மேளனத்தினால் (FFSL) நடத்தப்படவுள்ளது.  

கட்டாரில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆரம்பமாகவிருக்கும்  2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 19 வயதுக்கு உட்பட்ட AFC சம்பியன்ஷிப் போட்டிக்கான தகுதிகாண் சுற்று மற்றும் மாலைதீவில் நடைபெறவிருக்கும் SAFF சம்பியன்ஷிப் போட்டிகளுக்கு இலங்கை இளம் அணிகளை தேர்வு செய்வதற்காகவே இந்த தேர்வு முகாம் நடத்தப்படுகிறது.  

இந்த இரண்டு தேர்வு முகாம்களும் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் மூலம் இரு பிரிவுகளில் நடத்தப்படும். அதன்படி, கீழே குறிப்பிடப்பட்டுள்ள இரு தினங்களிலும் மு.ப. 7.00 மணிக்கு தேர்வுகள் ஆரம்பமாகும். 2001 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளில் பிறந்த வீரர்கள் இந்த தேர்வு முகாமில் பங்கேற்க தகுதி பெறுகின்றனர்.   

>>எப்.ஏ. கிண்ண மட்டக்களப்பு லீக் சம்பியனாக ஏறாவூர் இளந்தாரகை

  • ஜூலை 10 – கொழும்பு மாட்ட வீரர்களுக்கான தேர்வு 
  • ஜூலை 11 – வெளி மாவட்ட வீரர்களுக்கான தேர்வு 

19 வயதுக்கு உட்பட்ட AFC சம்பியன்ஷிப் போட்டிக்கான தகுதிகாண் சுற்றில் இலங்கை அணி B குழுவில் கட்டார், யெமன் மற்றும் துர்க்மனிஸ்தான் அணிகளுடன் விளையாடவுள்ளது. இந்த தகுதிகாண் போட்டிகள் 2019 நவம்பர் மாதம் 2ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. 

SAFF சம்பியன்ஷிப் தொடருக்கு அணிகளை பிரிக்கும் குலுக்கலுக்கான திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. இந்த தொடர் 2019ஆம் ஆண்டு மாலைதீவில் நடத்தப்படவுள்ளது.  

இது தொடர்பான மேலதிக விபரங்களை பெறுவதற்கு 011 269 6179 என்ற தொலைபேசி இலக்கத்தில் காமினி மதுர்வலவுடன் தொடர்புகொள்ளலாம்.  

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<