இந்தியாவின் செலன்ஜர் கிண்ண தொடரில் முதற்தடவையாக பங்கேற்கும் இலங்கை

151

இந்திய கிரிக்கெட் சபையினால் அந்நாட்டு கனிஷ்ட வீரர்களுக்காக வருடாந்தம் நடாத்துகின்ற 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான செலென்ஜர் கிண்ணப் போட்டித் தொடரில் முதற்தடவையாக கலந்துகொள்ளவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, நேற்று(24) இந்தியாவுக்கு பயணமாகியுள்ளது.

அந்நாட்டு கிரிக்கெட் சபையினால் சம்பிரதாயபூர்வமாக 19 வயதுக்குட்பட்ட வீரர்களுக்காக நடாத்தப்படுகின்ற இப்போட்டித் தொடரில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்தியா ரெட், இந்தியா புளூ மற்றும் இந்தியா கிரீன் என 3 அணிகள் பங்கேற்று வருகின்றன. இம்முறை போட்டித் தொடரில் இம்மூன்று அணிகளின் தலைவர்களாக இந்திய 19 வயதுக்குட்பட்ட அணியில் இடம்பெற்றுள்ள ஹிமன்சு ராணா, ப்ரிதிவ் ஷா மற்றும் அபிஷேக் சர்மா ஆகிய வீரர்கள் செயற்படவுள்ளனர்.

முதலாவது T-10 தொடர் குறித்த முழுமையான பார்வை

உலகின் அனைத்து துறைகளிலும் நவீன தொழில்நுட்ப மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன…

எனினும், வழமைக்கு மாறாக் போட்டித் தன்மையை மேலும் அதிகரிக்கும் நோக்கிலும், எதிர்வரும் ஜனவரி மாதம் நியூசிலாந்தில் நடைபெறவுள்ள இளையோர் உலகக் கிண்ணப் போட்டிகளைக் கருத்திற்கொண்டும் இவ்வருட போட்டித் தொடருக்காக இலங்கை அணிக்கும் அழைப்புவிடுக்க இந்திய கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்திருந்தது. இதன்படி குறித்த தொடரில் முதற்தடவையாக வெளிநாட்டு அணியொன்று கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பில் இந்திய கிரிக்கெட் சபையின் உயர் அதிகாரியொருவர் கருத்து வெளியிடுகையில், ”எங்களது நாட்டு வீரர்கள் தமக்கிடையில் அதிகளவான போட்டிகளில் விளையாடியுள்ளனர். எனவே, முதற்தடவையாக வெளிநாட்டு அணியொன்றுக்கு வாய்ப்பு வழங்கி அதன்மூலம் அவர்களுக்கு மேலும் அனுபவத்தைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்தோம். இதனால் அடுத்த வருடம் நடைபெறவுள்ள இளையோர் உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு சிறந்த அணியொன்றை எம்மால் இனங்காண முடியும்” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், குறித்த அழைப்பினை ஏற்றுக்கொண்ட இலங்கை கிரிக்கெட் சபை, இளையோர் உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு முன்னதாக நடைபெறுகின்ற இப்போட்டித் தொடருக்காக இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணியை அனுப்பவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தியா பயணமாகும் இலங்கைக் குழாம்

அயன சிறிவர்தன (அணித் தலைவர்) – இசிபதன கல்லூரி, விஷ்வ சதுரங்க – பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, தனஞ்சய லக்ஷான் – ரிஷ்மண்ட் கல்லூரி, கமில் மிஷார – றோயல் கல்லூரி, சன்தூஷ் குனதிலக்க – புனித பேதுரு கல்லூரி, நிஷான் மதுஷ்க – மொறடு மஹா விதி., நிபுன் தனன்ஞய – புனித ஜோசப் வாஸ் கல்லூரி, வென்னப்புவ, நுவனிது பெர்னாண்டோ – புனித செபஸ்டியன் கல்லூரி, ரவிந்து சன்ஞய – புனித அலோசியஸ் கல்லூரி, ஹரீன் புது்தில – புனித அலோசியஸ் கல்லூரி, ஹேஷான் ஹெட்டியாரச்சி – மஹானாம கல்லூரி, ரன்திர் ரனசிங்க – புனித ஏன்ஸ் கல்லூரி, நிபுன் மலிங்க – மஹிந்த கல்லூரி, நிபுன் லக்ஷான் – தர்ஸ்டன் கல்லூரி, கலன பெரேரா – புனித தோமியர் கல்லூரி, கல்கிஸ்ஸை

புதிய ஒருநாள் அணித்தலைவர் ஒருவரை வேண்டி நிற்கிறதா இலங்கை?

ThePapare.com இற்கு கிடைத்திருக்கும் தகவல்களின் அடிப்படையில், இலங்கை கிரிக்கெட் வாரியமானது…

இப்போட்டித் தொடரில் கலந்துகொள்ளும் ஒவ்வொரு அணியும் முதல் சுற்றில் லீக் முறையில் ஏனைய 3 அணிகளுடன் போட்டியிடும். இதன்படி, புள்ளிப் பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பெற்றுக்கொள்ளும் அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும். இதன்படி இறுதிப்போட்டி எதிர்வரும் டிசம்பர் 12ஆம் திகதி பகலிரவுப் போட்டியாக மும்பையில் உள்ள சி.சி.ஐ மைதானத்தில் நடைபெறவுள்ளது.

செலென்ஜர் கிண்ண போட்டி அட்டவணை                                                                                        

அணிகள் திகதி இடம்

 

இந்தியா புளூ எதிர் இந்தியா ரெட் நவம்பர் – 26 சி.சி.ஐ மைதானம்

 

இந்தியா கிரீன் எதிர் இலங்கை  பதினொருவர் அணி நவம்பர் – 26 பி.கே.சி மைதானம்

 

இந்தியா புளூ எதிர் இந்தியா கிரீன் நவம்பர் – 28 பி.கே.சி மைதானம்

 

இந்தியா ரெட் எதிர் இலங்கை பதினொருவர் அணி நவம்பர் – 28 சி.சி.ஐ மைதானம்
இந்தியா புளூ எதிர் இலங்கை பதினொருவர் அணி நவம்பர் – 30 சி.சி.ஐ மைதானம்

 

இந்தியா ரெட் எதிர் இந்தியா கிரீன் நவம்பர் – 30 சி.சி.ஐ மைதானம்
இறுதிப் போட்டி டிசம்பர் – 2  
இறுதிப் போட்டிக்குத் தெரிவாகாத அணிகள் டிசம்பர் – 2 வன்கடே மைதானம்