இளைஞர் ஆசிய கிண்ணத்திற்கான இலங்கை குழாம் அறிவிப்பு

236
Sri Lanka U19 squad announced for Youth Asia Cup 2017

மலேசியாவில் நடைபெறவுள்ள  ”இளைஞர் ஆசிய கிண்ணம் 2017” போட்டித் தொடருக்கான 15 பேர் கொண்ட வலுவான குழாம் ஒன்றை இலங்கை கிரிக்கெட் சபை (SLC) அறிவித்துள்ளது.  

அதன்படி, ரிச்மண்ட் கல்லூரியைச் சேர்ந்த கமின்து மெண்டிஸ் இந்த அணிக்கு தலைமை வகிப்பதோடு புனித ஜோசப் கல்லூரியின் சகலதுறை வீரர் ஜெஹான் டானியல் உப தலைவராக செயற்படவுள்ளார்.

கமிந்து மென்டிசின் அபார துடுப்பாட்டத்தினால் ரிச்மண்ட் கல்லூரி வலுவான நிலையில்

சிங்கர் நிறுவன அனுசரணையில் நடைபெறும் 19 வயதின் கீழான பாடசாலைகளுக்கு இடையிலான …

இந்த போட்டித் தொடர் வரும் நவம்பர் 9ஆம் திகதி தொடக்கம் 20ஆம் திகதி வரை மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெறவுள்ளது. இதில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், மலேசியா மற்றும் மேற்கு மற்றும் தெற்கு பிராந்தியத்தில் இருந்து தலா ஒரு அணி என மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்கவுள்ளன.

கடந்த முறை போட்டித் தொடர் இலங்கையில் நடைபெற்றதோடு இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. எனினும், R. பிரேமதாச அரங்கில் மின்னொளியில் நடந்த அந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்தது.

தற்பொழுது தேர்வு செய்யப்பட்டிருக்கும் அனைத்து வீரர்களும் 2018இல் நியூஸிலாந்தில் நடைபெறவிருக்கும் ஐ.சி.சி. இளைஞர் உலகக் கிண்ண போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

அனுபவம் கொண்ட வீரர்களான அஷேன் பண்டார, ஹசித் போயகொட, நிபுன் ரன்சிக்க, பிரவீன் ஜயவிக்ரம, கிரிஷான் சன்ஜுல மற்றும் திசரு டில்ஷான் ஆகியோர் 19 வயதுக்கு உட்பட்ட இலங்கை அணியில் ஏற்கனவே விளையாடி இருக்கும் நிலையிலேயே இந்த குழாமுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இரு கைகளாலும் பந்து வீசும் திறமை கொண்ட மெண்டிஸ் தலைமையிலான தேர்வு செய்யப்பட்ட குழாம், 44 பேர் கொண்ட பெரிய குழாம் ஒன்றுடன் இந்த ஆண்டு ஜூலையில் இருந்து பயிற்சி பெற்று வருகிறது. இலங்கை கிரிக்கெட் சபையின் முழுமையான வீரர் அபிவிருத்தி திட்டத்தின் கீழான இந்த பயிற்சியில் கிரிக்கெட் பயிற்சிகள் மாத்திரமன்றி வாழ்க்கை முறை மற்றும் ஆளுமை அபிவிருத்தி பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.

கொழும்பில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் குழாம் எதிர்வரும் 16ஆம் திகதி கண்டிக்கு சென்று அங்குள்ள பயிற்சி மையத்தில் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளது.

இலங்கையின் வெற்றி வேட்கை ஒரு நாள் போட்டிகளிலும் தொடருமா?

ஆசியாவின் கிரிக்கெட் சகோதரர்களாகக் கருதப்படும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் …

இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் ரோய் டயஸ் இந்த அணியின் பயிற்சியாளராக செயற்படுகிறார்.

19 வயதுக்கு உட்பட்ட இலங்கைக் குழாம்

கமின்து மெண்டிஸ் (ரிச்மண்ட் கல்லூரி, காலி), ஜெஹான் டானியல் (புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு), கிரிஷான் சன்ஜுல (டி மெசனோட் கல்லூரி, கன்தான), அஷேன் பண்டார (புனித அலோசியஸ் கல்லூரி, காலி), ஹசித போயகொட (திரித்துவக் கல்லூரி, கண்டி), திசரு ரஷ்மிக்க டில்ஷான் (திரித்துவக் கல்லூரி, கண்டி), பிரவீன் ஜயவிக்ரம (புனித செபஸ்டியன் கல்லூரி, மொரட்டுவ), நிபுன் ரன்சிக்க (பீ.டி.எஸ். குலரத்ன வித்தியாலயம், அம்பலங்கொடை), தனன்ஜய லக்ஷான் (ரிச்மண்ட் கல்லூரி, காலி), நிஷான் மதுஷன்க பெரேரா (மொரட்டு வித்தியாலயம்), நுவனிது பெர்னாண்டோ (புனித செபஸ்டியன் கல்லூரி, மொரட்டுவ), நிபுன் தனன்ஜய (புனித ஜோசப் வாஸ் கல்லூரி, வென்னப்புவ), ரன்தீர் ரனசிங்க (புனித அன்னம்மாள் கல்லூரி, குரணாகலை), கலன பெரேரா (புனித தோமியர் கல்லூரி, கல்கிஸ்ஸை), கெவின் கொத்திகொட (மஹிந்த கல்லூரி, காலி)

மேலதிக வீரர்கள்  

விஷ்வ சதுரங்க (பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, மொரட்டுவ), திலான் பிரஷான் (புனித செர்வதியஸ் கல்லூரி, மாத்தறை), ரவின்து சன்ஜன (புனித அலோசியஸ் கல்லூரி, காலி), ஹரீன் புத்தில (புனித அலோசியஸ் கல்லூரி, காலி)