முதல் முறை SAFF U18 போட்டிகளுக்காக நேபாளம் சென்றுள்ள இலங்கை அணி

95
Sri Lanka U18 Boys Football Team

நேபாளத்தில் நாளை (20) ஆரம்பமாகவுள்ள 18 வயதுக்குட்பட்ட தெற்காசிய கால்பந்தாட்டப் போட்டித் தொடரில் (SAFF U18 CHAMPIONSHIP) பங்கேற்கவுள்ள இலங்கை இளம் வீரர்கள் தற்பொழுது நேபாளம் சென்றுள்ளனர்.

தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளனம் (SAFF) ஏற்பாடு செய்துள்ள 3ஆவது 18 வயதுக்குட்பட்ட கால்பந்தாட்டத் தொடர் நாளை (20) முதல் எதிர்வரும் 29ஆம் திகதி வரை நேபாளத்தின் .பி.எவ் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இதற்கான இலங்கை குழாம் நேற்று இலங்கை கால்பந்து சம்மேளனத்தினால் வெளியிடப்பட்டது. 

இலங்கையுடன் போராடி வென்றது பலம் மிக்க வட கொரியா

எதிர்வரும் 2022ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள பிஃபா உலகக்..

இப்போட்டியின் குழுவில் நேபாளம், மாலைத்தீவுகள், பூட்டான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளதுடன், பி குழுவில் இந்தியா, பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன

இந்நிலையில், இம்முறை போட்டித் தொடரில் இலங்கை அணியின் தலைவராக கொழும்பு புனித ஜோசப் கல்லூரியின் ஷெனால் சந்தேஷ் நியமிக்கப்பட்டுள்ளதுடன், உப தலைவராக கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் மொஹமட் முஷ்பிர் செயற்படவுள்ளார்

அத்துடன், குறித்த இலங்கை குழாத்தில் வட மாகாணத்தைச் சேர்ந்த 3 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில், கிளிநொச்சி உருத்திரபுரம் மகா வித்தியாலய மாணவன் கே. தேனுசன், யாழ். இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியைச் சேர்ந்த பாக்கியனாதன் ரெக்சன் மற்றும் எம். ப்ரசாந்த் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.  

கடந்த காலங்களில் இலங்கை 16 வயதின்கீழ் தேசிய அணியில் இடம்பிடித்திருந்த ரெக்சன், கிஹான் சன்தீப வாஸ் மற்றும் ரிகாஸ் ஆகியோர் இந்த 18 வயதின்கீழ் அணியிலும் தமக்கான இடத்தைப் பெற்றுள்ளனர். 

மேலும், கொழும்பு ஸாஹிரா கல்லூரி வீரர்கள் நாள்வரும், ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரியின் மூவரும், புனித ஹென்ரியரசர் கல்லூரியின் இருவரும் இந்த அணியில் இடம்பிடித்துள்ளனர். 

கடந்த 2015ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்த தொடரின் அங்குரார்ப்பண போட்டி நேபாளத்தில் நடைபெற்றதுடன் இறுதியாக 2017ஆம் ஆண்டு பூட்டானில் நடைபெற்றது. இவ்விரண்டு தொடர்களிலும் நேபாள அணி சம்பியனாகத் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும், இந்த 2 தொடர்களிலும் இலங்கை அணி பங்குபற்றவில்லை என்பது குறிப்பிடப்பட வேண்டிய விடயமாகும்

இந்தப் போட்டித் தொடரின் முதல் நாளான நாளை நடைபெறவுள்ள ஆரம்பப் போட்டியில் நேபாளம் மற்றும் பாகிஸ்தான் அணிகளும், பூட்டான் மற்றும் மாலைத்தீவுகள் அணிகளும் மோதவுள்ளன.  

பி பிரிவில் இடம்பிடித்துள்ள இலங்கை அணி எதிர்வரும் சனிக்கிழமை (21)  தனது முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்த்தாடவுள்ளதுடன், எதிர்வரும் 23ஆம் திகதி இந்தியாவை சந்திக்கவுள்ளது

PSG இடம் வீழ்ந்தது ரியல் மெட்ரிட்

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடரின் மேலும் சில முக்கிய..

முதல் சுற்று நிறைவில், குழு நிலையில் முதலிரண்டு இடங்களைப் பெற்றுக் கொள்கின்ற அணிகள் எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும். இறுதிப் போட்டி எதிர்வரும் 29ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

இம்முறை 18 வயதுக்குட்பட்ட இலங்கை கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணியின் முன்னாள் வீரரும் ரினௌன் விளையாட்டுக் கழகத்தின் தலைமைப் பயிற்சியாளருமான மொஹமட் அமானுல்லாஹ் செயற்படவுள்ளார். அணியின், உதவி பயிற்சியாளராக முன்னாள் தேசிய வீரரும், பெலிகன்ஸ் கழகத்தின் பயிற்சியாளருமான இசுரு பெரேரா செயற்படவுள்ளனர்

இலங்கை அணி விபரம்   

ஷெனால் சந்தேஷ்அணித் தலைவர் (மருதானை புனித ஜோசப் கல்லூரி), எம்.எஸ். ஏம் சாகிர், எம்.எம் முஷ்பிர், எச்.ஆர் ரஸா, எம்.என்.எம் சாஜித் (மருதானை ஸாஹிரா கல்லூரி), எம். பிரசாந்த், பி. ரெக்சன் (யாழ். புனித ஹென்றியரசர் கல்லூரி), கயாத் ராஜபக்ஷ (கேகாலை நிஸ்ஸங்க மகா வித்தியாலயம்), ஹசிக நவோத (அநுராதபுரம் புனித ஜோசப் கல்லூரி), ஷிசான் ப்ரபுத்த (கொழும்பு றோயல் கல்லூரி), .எம் சப்ரான், எஸ்.எம் குர்ஸித், அப்துல் பாசித் (கொழும்பு ஹமீட் அல் ஹுசைனி கல்லூரி), ரெஹான் ப்ரையன் (மாத்தறை ராஹுல கல்லூரி), தலால் சிஹாப் (தூதியான்ஸ் விளையாட்டுக் கழகம்), அவிஷ்க தேஷான் (கந்தானை டி மெசெனொட் கல்லூரி), கே. தேனுஷன் (கிளிநொச்சி உருத்திரபுரம் மகா வித்தியாலயம்), எம்.என்.எம் ரிகாஸ் (கண்டி விஷன் சர்வதேச பாடசாலை), கிஹான் சன்தீப வாஸ் (நீர்கொழும்பு மாரிஸ்டெல்லா கல்லூரி), எம்.எம் முர்ஷித் (கிண்ணியா மத்திய கல்லூரி)  

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<