தென்னாபிரிக்காவிற்கான இலங்கை அணியின் சுற்றுப்பயண விபரம்

2052

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள், 5 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 T20 போட்டிகள் கொண்ட முத்தரப்பு கிரிக்கெட் தொடர் அடுத்த வருடம் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் தென்னாபிரிக்காவில் இடம்பெறவுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை (CSA) இன்று (23) அறிவித்துள்ளது.

இலங்கை வரவிருக்கும் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் (SLC) வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றின் படி…..

குறித்த சுற்றுத்தொடர் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் நடுப்பகுதியில் ஆரம்பமாகவுள்ளது. அதன் முதல் கட்டமாக டெஸ்ட் தொடர் டேர்பன் மற்றும் போர்ட் எலிசபெத் மைதானங்களில் இடம்பெறவுள்ளன. அதன் பின்னர் ஒரு நாள் தொடரும், இறுதியாக T20 தொடரும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணி இறுதியாக கடந்த 2016/17 காலப்பகுதியில் தென்னாபிரிக்காவுக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தது. இதன்போது, இலங்கை வீரர்கள் அந்நாட்டவர்களிடம் டெஸ்ட் தொடரை 3-0 எனவும், ஒரு நாள் தொடரை 5-0 எனவும் வைட்வொஷ் முறையில் இழந்தனர். எனினும், T20 தொடரை இலங்கை வீரர்கள் 2-1 எனக் கைப்பற்றினர்.

”எமது நாட்டில் இடம்பெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் குறித்த முழுமைப்படுத்தப்பட்ட அட்டவணையை வெளியிடுவதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம்” என தென்னாபிரிக்க கிரிக்கெட் சங்கத்தின் தற்காலிக தலைமை நிர்வாகி  தாபாங் மோரோ குறிப்பிட்டிருந்தார்.

தென்னாபிரிக்க அணி டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கான சர்வதேச தரப்படுத்தல்களில் இரண்டாவது இடத்தில் இருக்கும் அதேவேளை, T20 போட்டிகளுக்கான தரப்படுத்தலில் பின்தங்கிய நிலையான ஆறாவது இடத்திலேயே உள்ளது.

குறித்த தொடருக்கு முன்னர், தென்னாபிரிக்க வீரர்கள் 2 டெஸ்ட் போட்டிகள், 5 ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஒரு T20 போட்டி என்பன கொண்ட தொடர்களில் விளையாடுவதற்காக இவ்வருட ஜூலை மற்றும் ஆகஸ்ட் காலப்பகுதியில் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வீரர்களின் நடத்தைகள் குறித்து பொதுக் கூட்டத்தில் ஆராயவுள்ள ஐ.சி.சி

ஐ.சி.சி. இன் இந்த காலாண்டுக்கான (2018) பொதுக் கூட்டம் இன்னும் இரண்டு நாட்களில்…..

தொடர் அட்டவணை

முதல் டெஸ்ட் – பெப்ரவரி 13-17 (கிங்ஸ்மேட், டேர்பன்)

இரண்டாவது டெஸ்ட் – பெப்ரவரி 21-25 (சென்.ஜோர்ஜ்ஸ் பார்க், போர்ட் எலிசபத்)

முதல் ஒரு நாள் போட்டி – மார்ச் 3 (வெண்டரர்ஸ், ஜொஹனஸ்பேக்) பகல் ஆட்டம்

இரண்டாவது ஒரு நாள் போட்டி – மார்ச் 6 (சுபர்ஸ்போர்ட் பார்க், சென்சூரியன்) பகலிரவு ஆட்டம்

மூன்றாவது ஒரு நாள் போட்டி – மார்ச் 10 (கிங்ஸ்மேட், டேர்பன்) பகல் ஆட்டம்

நான்காவது ஒரு நாள் போட்டி – மார்ச் 13 (சென்.ஜோர்ஜ்ஸ் பார்க், போர்ட் எலிசபத்) பகலிரவு ஆட்டம்

ஐந்தாவது ஒரு நாள் போட்டி – மார்ச் 16 (நிவ்லேண்ட்ஸ், கேப் டவுன்) பகலிரவு ஆட்டம்

முதல் T20 – மார்ச் 19 (நிவ்லேண்ட்ஸ், கேப் டவுன்) பகலிரவு ஆட்டம்

இரண்டாம் T20 -மார்ச் 22 (சுபர்ஸ்போர்ட் பார்க், சென்சூரியன்) பகலிரவு ஆட்டம்

மூன்றாம் T20 -மார்ச் 24 (வெண்டரர்ஸ், ஜொஹனஸ்பேக்) பகல் ஆட்டம்

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க