Home Tamil பாகிஸ்தானை வீழ்த்தி முதல் முறையாக டி20 தொடரை வென்ற இலங்கை

பாகிஸ்தானை வீழ்த்தி முதல் முறையாக டி20 தொடரை வென்ற இலங்கை

65
Image courtesy - AFP

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இலங்கை அணி 2-0 என தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

லாஹூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி, களமிறங்கிய இலங்கை அணி முதல் போட்டியிலிருந்து எந்தவித மாற்றங்களையும் ஏற்படுத்தியிருக்கவில்லை. எனினும், பாகிஸ்தான் அணியில் இப்திகார் அஹமட் மற்றும் பஹீம் அஷ்ரப் ஆகியோருக்கு பதிலாக வஹாப் ரியாஸ் மற்றும் பக்ஹர் சமான் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.

அன்று சங்கக்கார செய்ததை இன்று குனதிலக்க செய்கிறார் – மிஸ்பா

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான தனுஷ்க குனத்திலக்கவின்……

இலங்கை அணி

தனுஷ்க குணதிலக்க, அவிஷ்க பெர்னாண்டோ, மினோத் பானுக, ஷெஹான் ஜயசூரிய, பானுக ராஜபக்ஷ, தசுன் ஷானக (அணித் தலைவர்), வனிந்து ஹசரங்க, லக்ஷான் சந்தகன், இசுரு உதான, கசுன் ராஜித, நுவன் பிரதீப்

பாகிஸ்தான் அணி

பக்ஹர் சமான், பாபர் அசாம், அஹமட் சேஷாட், உமர் அக்மல், அசிப் அலி, சர்பராஸ் அஹ்மட் (அணித்தலைவர்), இமாட் வசீம், சதாப் கான், மொஹட் அமீர், மொஹமட் ஹஸ்னைன், வஹாப் ரியாஸ்,

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது. குறிப்பாக தன்னுடைய இரண்டாவது டி20 போட்டியில் விளையாடிய பானுக ராஜபக்ஷ கன்னி அரைச் சதத்தை பெற்று, அபார துடுப்பாட்டத்தை வெளிப்படுத்த, ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் தங்கள் பங்கினை சிறப்பாக செய்திருந்தனர்.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகியோர் விரைவில் ஆட்டமிழந்த போதும், பானுக ராஜபக்ஷ 48 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 77 ஓட்டங்களை விளாசினார். இவருடன் நேர்த்தியான இணைப்பாட்டத்தை வழங்கிய ஷெஹான் ஜயசூரிய 34 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, இறுதியில் களமிறங்கிய தசுன் ஷானக 15 பந்துகளில் 27 ஓட்டங்களை விளாசி, அணியின் ஓட்ட எண்ணிக்கையை 182 ஆக உயர்த்தினார். 

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் இமாட் வசீம், வஹாப் ரியாஸ் மற்றும் சதாப் கான் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்க, இலங்கை அணியின் ஏனைய மூன்று விக்கெட்டுகள் ரன்-அவுட் மூலமாக பெறப்பட்டிருந்தது.

பின்னர், இலங்கை அணி நிர்ணயித்த வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி இமாட் வசீம் மற்றும் அசிப் அலி ஆகியோரது இணைப்பாட்டத்தின் மூலம் இலங்கை அணிக்கு நெருக்கடி கொடுத்த போதிலும், இறுதியில் 147 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 35 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

ஆரம்பத்திலிருந்து தடுமாற்றத்தை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுக்க தொடங்கியது. பக்ஹர் சமான் மற்றும் பாபர் அஸாம் ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். எனினும், அதனைத் தொடர்ந்து வருகைதந்த சர்பராஸ் அஹமட் வேகமாக ஓட்டங்களை குவிக்கத் தொடங்கினார்.

ஆனால், தனது முதல் ஓவரில் ஓட்டங்களை விட்டுக்கொடுத்த வனிந்து ஹசரங்க, தன்னுடைய இரண்டாவது ஓவரில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தான் அணிக்கு அதிர்ச்சிகொடுத்தார். இதில், அஹமட்  சேஷாட் 13 ஓட்டங்களுடன் போல்ட் முறையில் ஆட்டமிழக்க, அடுத்தப் பந்தில் உமர் அக்மல் வந்த வேகத்தில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து தனது இரண்டாவது ஓவரின் இறுதிப் பந்தில் சர்பராஸ் அஹமட்டின் (26) விக்கெட்டினை வீழ்த்த, பாகிஸ்தான் அணி 55 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது.

எனினும், அடுத்து ஜோடி சேர்ந்த இமாட் வசீம் மற்றும் அசிப் அலி ஆகியோர் வேகமாக ஓட்டங்களை குவித்ததுடன், 75 ஓட்டங்களை பகிர்ந்து இலங்கை அணிக்கு நெருக்கடி கொடுத்தனர். இந்த இணைப்பாட்டமானது, 6 ஆவது விக்கெட்டுக்காக டி20  போட்டிகளில் பாகிஸ்தான் அணி பெற்ற அதிகூடிய இணைப்பாட்டமாக பதிவாகியது. எனினும், 47 ஓட்டங்களை பெற்றிருந்த, இமாட் வசீம் இசுரு உதானவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இவரின் ஆட்டமிழப்பின் பின்னர் களமிறங்கிய பின்வரிசை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணி 147 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இலங்கை அணியின் பந்துவீச்சில், நுவன் பிரதீப் 4 விக்கெட்டுகளை வீழ்த்த, வனிந்து ஹசரங்க 3 விக்கெட்டுகளையும், இசுரு உதான 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதேவேளை, பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, அந்த அணிக்கு எதிராக 2013 ஆம் ஆண்டுக்கு பின்னர் முதல் டி20 வெற்றியை பதிவுசெய்தது. இந்த நிலையில், இன்றைய தினம் பெற்ற வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இலங்கை அணி தங்களுடைய, முதலாவது டி20 தொடர் வெற்றியை பதிவுசெய்துள்ளது. இதற்கு முன்னர், பாகிஸ்தான் அணிக்கு எதிராக இலங்கை அணி இருதரப்பு தொடரொன்றை வெற்றிகொண்டிருக்கவில்லை. அத்துடன், பாகிஸ்தானில் அந்த அணிக்கு எதிராக டி20 தொடரை கைப்பற்றிய முதல் அணியாகவும், இலங்கை அணி பதிவாகியது.

இதேவேளை, டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளையும் வெற்றிகொண்டிருக்கும் இலங்கை அணி தொடரை 2-0 என கைப்பற்றியுள்ள நிலையில், மூன்றாவதும் இறுதியுமான போட்டி எதிர்வரும் 9 ஆம் திகதி லாஹூர் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஸ்கோர் விபரம்

Result


Sri Lanka
182/6 (20)

Pakistan
147/10 (19)

Batsmen R B 4s 6s SR
Danushka Gunathilaka c Sarfaraz Ahmed b Imad Wasim 15 10 3 0 150.00
Avishka Fernando run out (Shadab Khan) 8 10 1 0 80.00
Bhanuka Rajapaksha c Fakhar Zaman b Shadab Khan 77 48 4 6 160.42
Shehan Jayasuriya run out (Asif Ali) 34 28 4 0 121.43
Dasun Shanaka not out 27 15 3 1 180.00
Minod Bhanuka run out (Wahab Riaz) 0 1 0 0 0.00
Isuru Udana b Wahab Riaz 8 6 1 0 133.33
Wanindu Hasaranga not out 2 2 0 0 100.00


Extras 11 (b 1 , lb 6 , nb 0, w 4, pen 0)
Total 182/6 (20 Overs, RR: 9.1)
Fall of Wickets 1-16 (2.2) Danushka Gunathilaka, 2-41 (4.6) Avishka Fernando, 3-135 (15.2) Shehan Jayasuriya, 4-142 (16.1) Bhanuka Rajapaksha, 5-145 (16.3) Minod Bhanuka, 6-155 (17.6) Isuru Udana,

Bowling O M R W Econ
Imad Wasim 4 0 27 1 6.75
Mohammad Amir 4 0 40 0 10.00
Wahab Riaz 4 0 31 1 7.75
Shadab Khan 4 0 38 0 9.50
Mohammad Hasnain 4 0 39 0 9.75


Batsmen R B 4s 6s SR
Babar Azam b Nuwan Pradeep 3 10 0 0 30.00
Fakhar Zaman b Kasun Rajitha 6 4 1 0 150.00
Ahmed Shehzad b Wanindu Hasaranga 13 16 0 1 81.25
Sarfaraz Ahmed b Wanindu Hasaranga 26 16 3 1 162.50
Umar Akmal b Wanindu Hasaranga 0 1 0 0 0.00
Asif Ali b Nuwan Pradeep 29 27 3 0 107.41
Imad Wasim lbw b Isuru Udana 47 29 8 0 162.07
Wahab Riaz c Minod Bhanuka b Nuwan Pradeep 7 5 1 0 140.00
Shadab Khan c Dasun Shanaka b Isuru Udana 0 1 0 0 0.00
Mohammad Amir not out 5 3 1 0 166.67
Mohammad Hasnain c Wanindu Hasaranga b Nuwan Pradeep 1 2 0 0 50.00


Extras 10 (b 0 , lb 2 , nb 0, w 8, pen 0)
Total 147/10 (19 Overs, RR: 7.74)
Fall of Wickets 1-9 (2.1) Fakhar Zaman, 2-11 (3.1) Babar Azam, 3-51 (7.3) Ahmed Shehzad, 4-51 (7.4) Umar Akmal, 5-51 (7.6) Sarfaraz Ahmed, 6-127 (15.5) Imad Wasim, 7-136 (16.6) Wahab Riaz, 8-136 (17.1) Shadab Khan, 9-145 (18.3) Asif Ali, 10-147 (18.6) Mohammad Hasnain,

Bowling O M R W Econ
Kasun Rajitha 3 0 11 1 3.67
Nuwan Pradeep 4 0 25 4 6.25
Isuru Udana 4 0 38 2 9.50
Wanindu Hasaranga 4 0 38 3 9.50
Lakshan Sandakan 4 0 33 0 8.25



முடிவு – இலங்கை அணி 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<