ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ண போட்டிகள் எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் 18ஆம் திகதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெறவுள்ளது.

எட்டாவது தடவையாக நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் உலக தரப்படுத்துதலில் முதல் எட்டு இடங்களை பிடித்துள்ள அணிகள் போட்டியிடுகின்றன. அந்தவகையில், எவ்வாறெனினும் இம்முறை கிண்ணத்தை கைப்பற்றி தமது பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் குதித்திருக்கும் வலிமைமிக்க எதிரணிகளுடன் போட்டியிட்டு கிண்ணத்தைக் கைப்பற்ற வேண்டிய சூழ்நிலையில் இலங்கை அணியும் உள்ளது.

48121இம்முறை சம்பியன்ஸ் கிண்ண போட்டிகளில், 2013ஆம் ஆண்டு சம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி நடப்பு சம்பியனாக களமிறங்கவுள்ள, நிலையில் 2006ஆம் ஆண்டு சம்பியன்ஸ் கிண்ண போட்டிகளுக்கு அறிமுகமான பங்களாதேஷ் அணி, மேற்கிந்திய தீவுகள் அணியை பின்னிலைப்படுத்தி இரண்டாவது தடவையாக சம்பியன்ஸ் கிண்ண போட்டிகளில் பங்குபற்றவுள்ளது. அதேநேரம், 2004ஆம் ஆண்டு சம்பியன் பட்டதை வென்றிருந்த மேற்கிந்திய தீவுகள் அணி முதல் தடவையாக இப்போட்டித் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் இதற்கு முன்னர் நடைபெற்ற இரண்டு சம்பியன்ஸ் கிண்ண போட்டிகளிலும் இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து அணி முன்னேறிய போதிலும், அவ்வணியால் கிண்ணத்தை கைப்பற்ற முடியவில்லை. சொந்த மண்ணில் இரண்டு தடவைகள் கோட்டை விட்ட இங்கிலாந்து அணிக்கு சாதகமான மற்றும் உகந்த காலநிலையில் சொந்த மண்ணில் மீண்டுமொரு வாய்ப்பு கிடைக்கபெற்றுள்ளது.

ஜூன் முதலாம் திகதி ஓவல் மைதானத்தில், இங்கிலாந்து அணி பங்களாதேஷ் அணியுடனான முதல் போட்டியுடன் 2017ஆம் ஆண்டுக்கான சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகள் ஆரம்பமாக உள்ளன. நடப்பு சம்பியனான இந்தியா ஜூன் மாதம் 4ஆம் திகதி தனது பரம எதிரியான பாகிஸ்தான் அணியுடன் எஜ்பஸ்டனில் மோதவுள்ளது.

2015ஆம் ஆண்டு ஐ.சி.சி உலக கிண்ண இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணியிடம் தோல்வியுற்ற நியூசிலாந்து அணி ஜூன் மாதம் 2ஆம் திகதி எஜ்பஸ்டனில் நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய அணியுடனான போட்டியில் வெற்றி பெற்று அவுஸ்திரேலிய அணியை பழி தீர்க்க காத்திருகின்றது.

இலங்கை அணிக்கோ மிகப் பெரிய சவால் ஓன்று காத்திருகின்றது. ஏனெனில், ஜூன் மாதம் 03ஆம் திகதி வலிமைமிக்க தென்னாபிரிக்க அணியுடன் முதல் போட்டியில் மோதவுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை அணி அங்கு நடைபெற்ற 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில், 5-0 என்ற கணக்கில் படுதோல்வியை சந்தித்திருந்தது. அத்துடன், சம்பியன்ஸ் கிண்ணத்தில் தனது முதலாவது போட்டியில் தென்னாபிரிக்க அணியை மீண்டும் எதிர்கொள்ளவுள்ளது.

எது எவ்வாராயினும், இம்முறை சம்பியன்ஸ் கிண்ண போட்டிகளில் லசித் மலிங்கவுடன் களமிறங்கவுள்ள இலங்கை அணி, எதிர்நோக்கவுள்ள சவால்களை சற்று ஆராய்வோம்.    

தென்னாபிரிக்கா

இந்தக் கட்டுரை எழுதப்படும் நேரத்தில், தென்னாபிரிக்க அணி அவுஸ்திரேலிய அணியை பின்தள்ளி ஒரு நாள் போட்டித் தர வரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. உலகக் கிண்ண போட்டிகளில் சிறந்த வீரர்களுடன் களமிறங்கி திறமைகளை வெளிப்படுத்தும் தென்னாபிரிக்கா அணி துரதிஷ்டவசமாக நொக் அவுட் போட்டிகளில், தோல்வியுற்று வெளியேறுவது யாவரும் அறிந்த விடயமாகும்.

B குழுவில் இடம் பிடித்துள்ள இவ்வணி இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணியுடன் மோதவுள்ளது. துடுப்பாட்டம், பந்து வீச்சு மற்றும் களத்தடுப்பு என மூன்று துறைகளிலும் பிரகாசிக்கும் இவ்வணியில் விளையாடும், ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் இம்ரான் தாஹிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் முறையே துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சு என்பவற்றில் உலக தர வரிசையில் முதலிடத்தில் உள்ளனர்.  

Imran Tahir becomes World's No.1 ODI Bowler

அத்துடன், ஏபி டி வில்லியர்ஸ் தலைமையில் களமிறங்கும் இவ்வணியில் உலக தரம் வாய்ந்த துடுப்பாட்ட வீரரான ஹஷிம் அம்லா மற்றும் அனுபவம் வாய்ந்த  டூ பிளெசிஸ், ஜே.பி. டுமினி ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.

மேலும், வேகப்பந்து வீச்சுக்கு உகந்த இங்கிலாந்து மைதானங்களில் ககிஸோ ரபாடா, மோர்ன் மோர்கெல் மற்றும் பர்ஹான் பெஹார்டின் ஆகியோரின் வேகத்தையும் இலங்கை அணி சமாளித்தாக வேண்டிய நிலையில் உள்ளது.


இந்தியா

இந்தியாவைப் பற்றிய அறிமுகம் கிரிக்கெட் ரசிகர்களான உங்களுக்கு அதிகம் தேவையில்லை என்றே நினைகின்றேன். ஏனெனில் கிரிக்கெட் உலகில் அதிகளவாக பேசப்படும் ஒரு நாடாக இந்தியா உள்ளது. இந்திய கிரிக்கெட் செய்திகள் இலங்கை ஊடகங்களில் வெளிவராத நாளே இல்லை எனலாம்.

2011ஆம் ஆண்டு உலகக் கிண்ணம் மற்றும் 2013ஆம் ஆண்டுக்கான சம்பியன்ஸ் கிண்ணம் ஆகியவற்றை வென்று வழமையாக வெற்றிகளை குவித்து வரும் வலிமை மிக்க அணியாகத் திகழ்கின்றது. நாம் யாவரும் அறிந்த சிறந்த துடுப்பாட்ட வீரரான விராத் கோஹ்லியின் தலைமையின் கீழ் துடுப்பாட்டம், பந்து வீச்சு மற்றும் களத்தடுப்பு என சகல துறைகளிலும் பிரகாசிக்கும் இவ்வணி இம்முறை கிண்ணத்தைக் கைப்பற்ற முயற்சிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Virat-Kohli-

ஆனால், உள்ளூர் மண்ணில் கலக்கும் இந்திய அணி வெளிநாட்டு மைதானங்களில் அதிகளவான தோல்விகளை சந்தித்துள்ளது. 2013ஆம் ஆண்டு இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளிலும் சற்றுத் தடுமாறியிருந்தது. இந்திய அணியானது அவர்களது உறுதியான துடுப்பாட்ட வரிசையை நம்பியுள்ளது. 300 இற்கும் அதிகமான ஓட்டங்களை பெற்றிருந்தாலும் மோசமான பந்து வீச்சு காரணமாக பல தடவைகள் தோல்வியை சந்தித்திருக்கின்றது.

யுவராஜ் சிங் போன்ற சிறந்த களத்தடுப்பு வீரர்களை கொண்டுள்ள இந்திய அணி பந்து வீச்சில் தடுமாறினாலும், இம்முறை அஷ்வின் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் 25 விக்கெட்டுகளுக்கும் மேல் வீழ்த்தி முதலிடத்தில் இருக்கும் புவனேஷ் குமார் ஆகியோர் பந்து வீச்சுத் துறையை பலப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.


பாகிஸ்தான்

ஐ.சி.சி தர வரிசைப்படி எட்டாவது இடத்திலிருந்தாலும் இங்கிலாந்து கிரிக்கெட் களங்களில் பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்களான வஹாப் ரியாஸ் மற்றும் ஜுனைட் கான் ஆகியோர் தமது ஸ்விங் பந்து வீச்சால் அச்சுறுத்தக்கூடியவர்கள்.

muhammad-amir

போட்டி நிர்ணயக் குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுத்து சர்வதேச போட்டிகளிருந்து விலகியிருந்த மொஹமட் அமீர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ள நிலையில், நடப்பாண்டில் 8 போட்டிகளில் பங்குபற்றி 13 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இவரது ஸ்விங் பந்து வீச்சு நிச்சயமாக துடுப்பாட்ட வீரர்களை அச்சுறுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

சப்ராஸ் அஹமட் தலைமையில் களமிறங்கும் பாகிஸ்தான் அணியில் அனுபவம் மிக்க மற்றும் சகல துறைகளிலும் பிரகாசிக்கும் ஷுஐப் மாலிக் மற்றும் மொஹமட் ஹபீஸ் ஆகியோர் அணியை வெற்றிப்பாதைக்கு வழி நடத்தக்கூடியவர்கள்.


இங்கிலாந்து

2015ஆம் ஆண்டு உலக கிண்ணத்துக்குப் பின்னர் இங்கிலாந்து அணி வியக்கத்தக்க வகையில் முன்னேற்றம் கண்டுள்ளது. இயன் மோர்கன் தலைமையிலான இவ்வணி நீண்டதொரு சிறந்த துடுப்பாட்ட வரிசையை கொண்டுள்ளது. அத்துடன், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மிகவும் ஆக்ரோஷமாக விளையாடும் அணியாக இங்கிலாந்து அணி கணிக்கப்படுகின்றது. ஏனெனில், பென் ஸ்டோக்ஸ், மொய்ன் அலி மற்றும் கிரிஸ் வோக்ஸ் போன்ற அதிகளவான சகலதுறை ஆட்டக்காரர்களை உள்ளவாங்கியுள்ளது. இந்திய ஐபிஎல் போட்டிகளில் 13 கோடி ரூபாய்க்கு விலை போன பென் ஸ்டோக்ஸ் தனது திறமையை ஐபிஎல் போட்டிகளில் நிரூபித்திருந்தார். அத்துடன் ஜேசன் ரோய், அலெக்ஸ் ஹேல்ஸ், மற்றும் ஸாம் பில்லிங்ஸ் போன்ற வீரர்களும் அணியில் உள்ளடங்கியுள்ளனர். இங்கிலாந்து அணியானது, இலங்கை அணிக்கு மாத்திரமல்லாது ஏனைய அணிகளுக்கும் சவாலாக அமைந்துள்ளது.

joe-root

ஜோ ரூட் போன்ற சிறந்த துடுப்பாட்ட வீரரைக் கொண்டுள்ள அவ்வணிக்கு இயன் மோர்கன் போன்ற மேலும் பல வீரர்கள் கிடைத்திருப்பது போனஸ். ஜோஸ் பட்லரை பற்றி சொல்லவே தேவையில்லை. ஒருநாள் போட்டிகளில் வேகமான துடுப்பாட்ட விகிதத்தினை தன்னகத்தே வைத்துள்ளார்.

அதேநேரம் சொந்த மண்ணில் விளையாட இருக்கும் இங்கிலாந்து அணியில் இடம் பிடித்திருக்கும் டேவிட் வில்லி மற்றும் கிறிஸ் வோக்ஸ் போன்ற ஸ்விங் பந்து வீச்சாளர்களும் இலங்கை அணிக்கு சவாலாக உள்ளனர். அத்துடன், காலநிலை மற்றும் அதிகளவான மைதான ரசிகர்களின் ஆதரவு ஆகியன மேலும் உற்சாகப்படுத்தும் என்பதில் எவ்விதமான ஐயமுமில்லை.

எனினும் துரதிஷ்டவசமாக முக்கியமான தருணங்களில் கோட்டை விடுவது இங்கிலாந்து அணியின் வழக்கமாக உள்ளது. இம்முறை கிடைத்துள்ள இந்த பொன்னான வாய்ப்பையும் தவறவிடுவார்களா அல்லது சிறப்பாக பயன்படுத்திக்கொள்வார்களா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


அவுஸ்திரேலியா

வலிமை மிக்க அணிகளில் அவுஸ்திரேலிய அணியும் ஓன்று. அத்துடன் துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சு ஆகியவற்றில் சம பலத்தைக் கொண்டுள்ள அணியாகத் திகழ்கின்றது. ஸ்டீவன் ஸ்மித்தின் தலைமையில் களமிறங்கும் இவ்வணியில் ஐபிஎல் 2017 போட்டிகளில் சராசரியாக 58.27 என்ற ஓட்ட விகிதத்தில் அதிகூடிய ஓட்டங்களை (641) விளாசிய டேவிட் வோர்னர் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கவுள்ளார்.

david warnerபொதுவாக பொக்கெட் ரொக்கெட் என்று வர்ணிக்கப்படும் டேவிட் வோர்னர் இவ்வருடம் மட்டும் 5 ஒருநாள் போட்டிகளில் 367 ஓட்டங்களை விளாசியுள்ளார். இதுவரை ஒரேயொரு சம்பியன்ஸ் கிண்ண போட்டிகளில் பங்குபற்றியுள்ள வோர்னர் நிச்சியமாக இம்முறை போட்டிகளில் கலக்குவார் என எதிர்பார்க்கலாம்.

கடந்த இலங்கை அணியுடனான ஒருநாள் போட்டித் தொடரில்  இலங்கை அணியை துவம்சம் செய்த ஜோர்ஜ் பெய்லி சம்பியன்ஸ் கிண்ண அணிக்கு தெரிவு செய்யப்படவில்லை. எனினும்,எனினும், கடந்தாண்டு  இலங்கை மண்ணில் நடைபெற்ற டி20 போட்டித் தொடரில்,  இலங்கை அணியின் 260 ஓட்டங்கள் என்ற உலக சாதனையை, இலங்கை அணிக்கெதிராகவே  முறியடித்த அதே வேளை ஆட்டமிழக்காமல் 65 பந்துகளில் 145 ஓட்டங்களை விளாசி டி20 தொடரை கைப்பற்ற உதவிய கிளென் மெக்ஸ்வெல் இலங்கை அணிக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருப்பார்.

அதிரடியாக துடுப்பாடும் டேவிட் வோவார்னர் மற்றும் கிளென் மெக்ஸ்வெல் ஆகியோரை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் இலங்கை அணிக்கு கடினமான வெற்றி இலக்குகளை எட்டவேண்டிய நிர்ப்பந்தங்கள் ஏற்படலாம். மறுபுறம் பந்து வீச்சில் பயமுறுத்தும் அடம் சம்பா மற்றும் மிச்சல் ஸ்டார்க் ஆகியோர் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களுக்கு சவாலாக அமையலாம். வேகப் புயலாக உருவெடுத்திருக்கும் மிச்சல் ஸ்டார்க் நடப்பாண்டில் 6 போட்டிகளில் மட்டும் பங்குபற்றி 13 விக்கெட்டுளை வீழ்த்தியுள்ளார்.


நியூஸிலாந்து

article-doc-7h774-3bmscybNe842cce83474b5100341-121_634x497துடுப்பாட்டத்தை விட பந்து வீச்சில் சிறந்த அணியாக நியூஸிலாந்து அணி விளங்குகின்றது. டிம் சௌத்தீ மற்றும் ட்ரென்ட் போல்ட் ஆகியோர் தமது அதிரடி பந்து வீச்சினால் அச்சுறுத்தக் கூடியவர்கள். அதேநேரம் கோயே ஆண்டர்சன், கேன் வில்லியம்சன் மற்றும் மார்ட்டின் கப்தில் போன்ற  சிறந்த துடுப்பாட்ட  வீரர்களையும் கொண்டுள்ளது.

வேகப் பந்துக்கு உகந்த இங்கிலாந்து மைதானங்கள் நியூஸிலாந்து அணியின் ஸ்விங் பந்து வீச்சாளர்களுக்கு விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடிய வாய்ப்பினை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. நிச்சியமாக அரையிறுதிப் போட்டிகளுக்கு தகுதிபெறும் அணிகளில் ஒன்றாக நியூஸிலாந்து அணி இருக்கப்போகின்றது.


பங்களாதேஷ்

இரண்டு தடவைகள் உலகக் கிண்ணத்தை வென்ற அணியை நடைபெறவுள்ள சம்பியன்ஸ் கிண்ண போட்டிகளிலிருந்து வெளியேற்றிய பெருமை இந்த அணிக்கு உண்டு. அத்துடன், 100வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியை வென்று சாதனை படைத்த அணி. மேலும், சொந்த மண்ணில் இங்கிலாந்து அணியை வீழ்த்திய பெருமையும் இந்த அணிக்கு உண்டு. இவைகளிலிருந்தது இவ்வணி பெரும் பலமிக்க அணியாக உருவெடுத்து வருகின்றது என்பதை புரிந்து கொள்ளலாம்.

Mustafizur-Rahman

முஸ்தபிகுர் ரஹ்மான், சாகிப் அல் ஹசன் மற்றும் தமீம் இக்பால் போன்ற சிறந்த வீரர்களை கொண்டுள்ளது. எனினும் உள்ளூர் மற்றும் ஆசிய நாடுகளில் வெற்றிகளை குவிக்கும் பங்களாதேஷ் அணி இங்கிலாந்து மண்ணில் சாதிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


இலங்கை

இன்னும் குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோரை பற்றி பேசிக்கொண்டிருப்பதில் பலனில்லை. அன்று இந்திய அணியின் கிரிக்கெட் கடவுள் என்றழைக்கப்பட்ட சச்சின் டெண்டுல்கர் மற்றும் அதிரடி வீரர் விரேந்தர் சேவாக் போன்ற கிரிக்கெட் வீரர்களின் ஓய்வுக்குப் பின்னர் இந்திய அணி தோணி மற்றும் விராத் கோஹ்லி போன்ற சிறந்த வீரர்களை உருவாக்கி கிரிக்கெட் உலகத்தில் வெற்றி நடைபோட்டுக்கொண்டிருக்கின்றது.

16178733_1381068565300038_2350922567977697069_oசகலதுறை ஆட்டக்காரர் அஞ்சலோ மெதீவ்ஸின் தலைமயில் இலங்கை அணி களமிறங்கவுள்ளது. இலங்கை அணியின் பினிஷெர் (Finisher) என்ற ரீதியில், இறுதி ஓவர்களில் அணியை வலுப்படுத்தும் இவரது ஆட்டம் முக்கியமானது. அத்துடன், இவரது மித வேகப்பந்து வீச்சு அணிக்கு பல வெற்றிகளை தேடித்தந்துள்ளது. காயம் காரணமாக தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்தின் போது இலங்கை திரும்பியிருந்தார்.

தனது சம்பியன்ஸ் கிண்ணத்துக்கான போட்டிகள் குறித்து கருத்து தெரிவித்த அஞ்சலோ, ”கடினமான மதீப்பீடுகளுக்கு பின்னர் தெரிவு செய்யப்பட்ட சிறந்த குழாம் ஓன்று எனக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களாக நாம் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டோம். போட்டிகளுக்கு நாம் தயாராகிவிட்டோம் என்ற நம்பிக்கை உள்ளது. திட்டமிட்டபடி எங்கள் ஆட்டத்தை நாம் விளையாடுவோம். மேலும், ஒரு வார காலத்துக்கு முன்பதாகவே அங்கு செல்கின்றோம். அத்துடன் இரண்டு பயிற்சிப் போட்டிகளில் விளையாடவுள்ளோம். அது எனது அணிக்கு தேவையான சக்தியை வழங்கும்” என்று தெரிவித்திருந்தார்.

அந்த வகையில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிரோஷன் திக்வெல்ல மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் சம்பியன்ஸ் கிண்ண போட்டிகளில் இலங்கை அணியின் முதுகெலும்புகளாக விளங்குகின்றனர்.

16251933_1389518854455009_8959356744272147830_oதனது கன்னி சம்பியன்ஸ் கிண்ண போட்டியில் பங்கேற்கவுள்ள குசல் மெண்டிஸ் நடப்பாண்டில் 8 போட்டிகளில் பங்குபற்றி மொத்தமாக 276 ஓட்டங்களை குவித்துள்ளார். சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தும் இந்த இளம் வீரர் சம்பியன்ஸ் கிண்ண போட்டிகளில் எதிர்நோக்கவுள்ள அனைத்து சவால்களையும் சிறப்பாக எதிர்கொள்ளும் பட்சத்தில் இலங்கைக்கான வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கலாம்.   

17758330_1482973441776216_3875636901112156225_oபந்து வீச்சில்  இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்ல இலங்கை அணியும் முற்று முழுதாக நம்பியுள்ள பந்து வீச்சாளராக முழு உலகையும் அச்சுறுத்திய லசித் மலிங்க உள்ளார் என்றால் அது மிகையாகாது. அனுபவம் மற்றும் மதிநுட்பத்துடன் பந்து வீசும் ஒரே ஒரு பந்து வீச்சாளர் லசித் மலிங்க. கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அவர் இறுதியாக விளையாடிய போட்டியில் 45 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

 

33 வயதாகும் லசித் மலிங்க 2004ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகியிருந்தார். இதுவரை 191 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 291 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அத்துடன் நான்கு பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரேயொரு பந்துவீச்சாளர் இவராவார். மேலும், குறித்த சாதனை தென்னாபிரிக்க அணிக்கெதிரான போட்டியிலேயேLasith Malinga பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் ஒருநாள் போட்டிகளில் 3 ஹட்ரிக் சாதனை படைத்த ஒரேயொரு பந்து வீச்சாளர் லசித் மலிங்கவே.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் களமிறங்கவுள்ள லசித் மலிங்க விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் இந்தியா போன்ற வலிமைமிக்க அணிகளை இலகுவாக வெற்றியீட்டலாம் என்பது திண்ணம்.

இவர்கள் அனைவரும் ஒரு அணியாக முழு பலத்துடன் திறமைகளை வெளிப்படுத்தும் பட்சத்தில் நிச்சயமாக சம்பியன்ஸ் கிண்ணத்தை இலங்கை மண்ணுக்கு கொண்டு வரலாம்.

இது குறித்த உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யவும்.