இளையோர் ஆசிய கிண்ணத்திற்கான இலங்கை குழாம் அறிவிப்பு

263

இலங்கையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5 தொடக்கம் 14 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும் 19 வயதுக்கு உட்பட்ட இளையோர் ஆசிய கிண்ண தொடருக்கான 15 பேர் கொண்ட இலங்கை குழாத்தை இலங்கை கிரிக்கெட் சபை (SLC) அறிவித்துள்ளது. 

மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர் நிபுன் தனன்ஜய இலங்கை அணிக்கு தொடர்ந்து தலைமை வகிக்கவிருப்பதோடு உப தலைவராக விக்கெட் காப்பாளர் மற்றும் துடுப்பாட்ட வீரரான கமில் மிஷார செயற்படவுள்ளார். 

இலங்கைக்கெதிராக வலுவான நிலையில் உள்ள பங்களாதேஷ் வளர்ந்துவரும் அணி

சுற்றுலா இலங்கை வளர்ந்துவரும் அணி……….

இலங்கையில் அண்மையில் முடிவுற்ற பாகிஸ்தான் 19 வயதுக்கு உட்பட்ட அணியுடனான தொடரில் இடம்பெற்ற முக்கிய வீரர்களை, எட்டு அணிகள் பங்கேற்கும் ஆசிய கிண்ண தொடரில் இணைக்க இலங்கை கிரிக்கெட் கனிஷ்ட தேர்வுக் குழுவினர் முடிவெடுத்துள்ளனர். பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் இலங்கை அணி 3-2 என தொடரை இழந்தமை குறிப்பிடத்தக்கது. 

நிபுன் தனன்ஜய மற்றும் கமில் மிஷார தவிர, நவோத் பரணவிதான, தவீஷ அபிஷேக், ரவிந்து ரஷன்த மற்றும் வேகப்பந்து சகலதுறை வீரர் அவிஷ்க தரிந்து ஆகியோர் கடந்த காலங்களைப் போன்று ஓட்டங்களை குவிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

இடதுகை சுழற்பந்து வீச்சாளர் சொனால் தினுஷ மற்றும் திலும் சுதீர ஆகியோர் பதில் வீரர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கு எதிரான தொடரில் திலும் சுதீர 2 போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியபோதும் குழாத்தில் ஏற்கனவே இடதுகை சுழற்பந்து வீச்சாளர்களான ரொஷான் சஞ்சய மற்றும் நவோத் பரணவிதான ஆகியோர் உள்ளனர். வலதுகை சுழற்பந்து ஜோடியான அஷேன் டானியல் மற்றும் சந்துன் மெண்டிஸ் ஆகியோரில் ஒருவர் மற்றொரு சுழற்பந்து வீசக்கூடிய கவிந்து நதீஷன் உடன் அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

தேர்வாளர்கள் மூன்று புதுமுக வீரர்களையும் தேர்வு செய்துள்ளனர். அவர்கள் இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட தேசிய அணிக்காக முதல் முறை விளையாடவுள்ளனர். 19 வயதுக்கு உட்பட்ட மாகாண மட்டத் தொடரில் 4 இன்னிங்சுகளில் 290 ஓட்டங்களை பெற்ற அஹான் விக்ரமசிங்கவும் இவர்களில் உள்ளடக்கப்பட்டுள்ளார். 

16 வயதுடைய இடதுகை வேகப்பந்து வீச்சாளர் யசிரு ரொட்ரிகோ, இன்னும் முதல் பதினொருவர் கிரிக்கெட்டில் விளையாடாத நிலையில், வலதுகை வேகப்பந்துவீச்சாளர் அம்ஷி டி சில்வாவுடன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இலங்கை வேகப்பந்து முகாமை இடதுகை வேகப்பந்து வீச்சாளர் டில்ஷான் மதுஷங்க மற்றும் வலதுகை மித வேகப்பந்து வீச்சாளர் சமிந்து விஜேசிங்க வழிநடத்தவுள்ளனர்.    

டெஸ்ட் தரவரிசையில் மேலும் முன்னேறினார் திமுத் கருணாரத்ன

நியூசிலாந்து அணிக்கு எதிரான……….

இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கு முன்னாள் இலங்கை அணித் தலைவர் ஹஷான் திலகரத்ன பயிற்சியாளராக செயற்படுவதோடு அணியின் முகாமையாளராக இலங்கை அணியின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரர் பர்வீஸ் மஹ்ரூப் செயற்படுகிறார்.  

2018 இல் பங்களாதேஷில் நடைபெற்ற இளையோர் ஆசிய கிண்ணத்தில் இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணி இரண்டாம் இடத்தை பிடித்ததோடு இந்திய இளையோர் அணி கிண்ணத்தை வென்றது.  

19 வயதுக்கு உட்பட்ட இலங்கை குழாம்

  1. நிபுன் தனன்ஜய (தலைவர் – புனித ஜோசப் வாஸ் கல்லூரி, வென்னப்புவ)
  2. கமில் மிஷார (உப தலைவர்/ விக்கெட் காப்பாளர் – றோயல் கல்லூரி, கொழும்பு)
  3. நவோத் பரணவிதான (மஹிந்த கல்லூரி, காலி)
  4. தவீஷ அபிஷேக் (ரிச்மண்ட் கல்லூரி, காலி)
  5. ரவிந்து ரஷன்த டி சில்வா (புனித தோமியர் கல்லூரி, கல்கிஸ்சை)
  6. அஹான் விக்ரமசிங்க (றோயல் கல்லூரி, கொழும்பு)
  7. அவிஷ்க தரிந்து (புனித அந்தோனியார் கல்லூரி, வத்தளை)
  8. ரொஹான் சஞ்சய (திஸ்ஸ மத்திய கல்லூரி, களுத்துறை)
  9. அஷேன் டானியல் (புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு)
  10. சந்துன் மெண்டிஸ் (ரிச்மண்ட் கல்லூரி, காலி)
  11. கவிந்து நதீஷன் (தர்மாசோக்க கல்லூரி, அம்பலங்கொட)
  12. யசிரு ரொட்ரிகோ (புனித தோமியர் கல்லூரி, கல்கிஸ்சை)
  13. டில்ஷான் மதுஷங்க (விஜயபா மத்திய கல்லூரி, ஹுங்கம)
  14. சமிந்து விஜேசிங்க (நாலந்த கல்லூரி, கொழும்பு)
  15. அம்ஷி டி சில்வா (ரிச்மண்ட் கல்லூரி, காலி)

பதில் வீரர்கள் 

  1. சமிந்து விக்ரமசிங்க (புனித அந்தோனியார் கல்லூரி, களுத்துறை)
  2. திலும் சுதீர (ரிச்மண்ட் கல்லூரி, காலி)
  3. சொனால் தினுஷ (மஹானாம கல்லூரி, கொழும்பு)
  4. சிஹான் கலிந்து (புனித செர்வஷியஸ் கல்லூரி, மாத்தறை)

பாக். அணியின் பயிற்சியாளர் பதவிக்கு மிஸ்பா உல் ஹக் விண்ணப்பம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின்………..

குழுக்கள்

குழு A குழு B
இந்தியா இலங்கை
பாகிஸ்தான் பங்களாதேஷ்
ஆப்கானிஸ்தான் ஐக்கிய அரபு இராச்சியம்
குவைட் நேபாளம்

போட்டி அட்டவணை

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<