தனுஷ்க ரன்ஞன் தலைமையிலான இலங்கை எழுவர் ரக்பி அணி இம்மாதம் 17ஆம் திகதி தொடக்கம் 19ஆம் திகதி வரை மலேசியாவில் நடைபெறவுள்ள அணிக்கு 7 வீரர்கள் கொண்டு பொர்னியோ ரக்பி தொடரில் பங்கேற்பதற்காக புறப்படவுள்ளனர்.

இங்கிலாந்து எழுவர் அணியின் வீரர் மேட் டர்னரின் (Matt Turner) பயிற்றுவிப்பில் இலங்கை ரக்பி அணி, கடந்த வருடம் ஆசிய சுற்றுவட்டாரத்தில் இரண்டாம் இடத்தினைப் பெற்று சாதனை செய்திருந்தது.

தற்போது இலங்கையின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள நியூசிலாந்து எழுவர் அணியின் முன்னாள் ரக்பி வீரர் பீட்டர் வூட்ஸ் (Peter Woods), நடைபெறவுள்ள இத்தொடர் குறித்து தெரிவிக்கையில், தமது அணிக்கு அடுத்த மாதம் ஹொங்கொங்கில் இடம்பெறவுள்ள World Sevens தொடரின் தகுதிகாண் போட்டிகளுக்கு வீரர்களை சிறந்த முறையில் தயார்படுத்துவதற்கான பயிற்சி முகாமாக இத்தொடர் அமையும் என தான் நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, ThePapare.com இற்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

நான் தற்போதைய நிலைமைக்கு, ஒரு போட்டியை மட்டுமே எடுத்துப் பார்க்கின்றேன். பெரிதாக எதனையும் நோக்கவில்லை. இத்தொடரினை முடித்துக்கொண்டு நாடு திரும்பும்போது அணியில் நிச்சயமாக மாற்றம் ஒன்று ஏற்பட்டிருக்கும். அதன் மூலம், எங்கள் வீரர்கள் எங்கு செல்வார்கள் என்பதனை பார்க்க முடியும். அதாவது, ஹொங்ஹொங்கில் நடைபெறும் தகுதிகாண் போட்டிகளுக்குரியவர்களாகஎன்றார்.

அத்துடன், நடைபெறவுள்ள இத்தொடரின் முக்கியத்துவத்தினையும் இலங்கையின் தலைமைப் பயிற்சியாளர் இவ்வாறு வெளியிட்டிருந்தார்.

வீரர்களை சரியான முறையில் ஆயத்தப்படுத்த வேண்டும் எனில், அதற்கு நாம் செய்ய வேண்டிய ஒரே வேலை அவர்களினை ஏழு வீரர்கள் கொண்ட தொடர்களில் விளையாட வைப்பதே. அத்துடன், ஒரு பயிற்சியாளராக அணியில் பங்கெடுத்து இலங்கை வீரர்கள் எப்படியானவர்கள் என்பதனையும் அவதானித்து நான் செயற்படவேண்டும்என்றார்.

அத்துடன், மேலும் கருத்துக்கூறிய அவர், வீரர்களிடம் இருந்து எழுவர் அணியினை சிறப்பாக வழிநடாத்த அதிக உடல் வலிமையை (Fitness) எதிர்பார்ப்பதாகவும் அவை அணிக்கு தற்போதைய தருணத்தில் உள்ளூர் தொடர்கள் மூலம் பெறப்பட்டிருந்தாலும் அது போதாமல் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். எனினும், ஹொங்ஹொங்கில் நடைபெறவுள்ள தொடரில் தமது அணி இருபடி முன்னேறிய நிலையில் காணப்படும் என்பதில் அவர் உறுதியாக இருக்கின்றார்.

கண்டி விளையாட்டுக் கழக அணியின் சென்டர் (Center) வீரராகவும் நடைபெற்று முடிந்த டயலொக் ரக்பி லீக்கில் அதிக ட்ரைகளை வைத்த வீரருமான, இலங்கை அணியின் தலைவர் தனுஷ்க ரன்ஞன் கருத்து தெரிவிக்கையில், இத்தொடரில் திறமையான பல அணிகளுடன் தாம் மோத இருப்பதால் பல பாடங்களை கற்றுக்கொள்ள முடியும். இளம் வீரர்களைக் கொண்ட தனது அணி இத்தொடரிற்காக தமது முழுப் பங்களிப்பினையும் வழங்கும்” என்வும் உறுதி பூண்டார்.

இத்தொடரிற்கான 15 பேர் கொண்ட இலங்கை வீரர்கள் குழாம் இன்று புதன்கிழமை இரவு இலங்கைத் தீவில் இருந்து புறப்படுகின்றது.

தொடரில், முக்கிய வீரர்களான தினுஷ சத்துரங்க (இலங்கை கடற்படை SC), நிஷோன் பெரேரா (ஹெவ்லோக்) மற்றும் அனுராத ஹேரத் (CR&FC) ஆகிய வீரர்கள் உள்வாங்கப்படவில்லை.

அணிக் குழாம்

தனுஷ்க ரன்ஞன், சிறினாத் சூரியபண்டார, தனுஷ் தயன், ஜேசோன் திசநாயக்க, றிச்சார்ட் தர்மபால, சுஹிரு அந்தோனி (கண்டி SC), சுதர்ஷன முத்துதந்த்ரி, கெவின் டிக்சொன், கவிந்து பெரேரா, ஒமல்க குணரத்ன (CR&FC), சலிய ஹந்தபன்கொட (இலங்கை கடற்படை SC), ரீசா றபாய்தீன் (பொலிஸ் SC)

பயிற்றுவிப்பாளர்பீட்டர் வூட்ஸ், முகாமையாளர்ரோஹன் சிந்தக்க, உதவிப் பயிற்றுவிப்பாளர்ரஜீவ் பெரேரா, ட்ரைனர் (Trainer) – நிக் குருபே, உடற் பயிற்சியாளர்அமித் ஜயசேகர,  High Performance – இந்தி மரிக்கார்.

இத்தொடரில், இலங்கை மகளிர் அணியும் பங்குகொள்கின்றது. மகளிர் அணியின் தலைமைப் பயிற்சியளராக சுதத் சம்பத் செயற்படவுள்ளார்.

தொடர் குறித்து சுதத் சம்பத் ThePapare.com இற்கு கருத்து தெரிவிக்கையில், இத்தொடரில் பங்குபற்றுவது எமது மகளிர் அணிக்கு சிறந்த அனுவங்களை வழங்கும். அந்த அனுபவங்கள் மூலம் நாம் ஆசிய சுற்றுவட்டாரத்தில் சவால் மிக்க அணிகளில் ஒன்றாக செயற்பட முடியும். இத்தொடரிற்காக வீராங்கணைகள் சரியான முறையில் தயாராக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்கள் இத்தொடர் மூலம் பல விடயங்களை கற்றுக்கொள்ளவும் போகின்றனர்.“ என்றார்.

இலங்கை மகளிர் அணிக் குழாம்

ரந்திக்க குமுதுமலி (அணித் தலைவி), அனுஷ அத்தநாயக்க, அயெஷா பெரேரா, அயெஷா கழுஆராய்ச்சி, சரணி லியனகே, தசுனி டீ சில்வா, திலினி காஞ்சனா, துலானி பல்லிக்கொன்டகே, நதீகா முனசிங்க, சஜீவனி டி சில்வா, தனுஜ வீரக்கொடி, வாசனா வீரக்கோடி

பயிற்றுவிப்பாளர்சுதத் சம்பத், முகாமையாளர்பியுமிக்கா திலகவர்தன, உடற்