ஆசிய இளையோர் வலைப்பந்தாட்டத்தில் இலங்கை அரையிறுதிக்கு தகுதி

111

ஆசிய இளையோர் வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திவரும் தருஷி இலங்கரத்ன தலைமையிலான இலங்கை வலைப்பந்தாட்ட அணி கமா விளையாட்டுத் தொகுதி உள்ளக அரங்கில் நேற்று (04) நடைபெற்ற ஏ குழுவுக்கான தனது கடைசி போட்டியில் சிங்கப்பூர் அணியிடம் 66-58 என்ற புள்ளிகள் அடிப்படையில் தோல்வியைத் தழுவியது.

இலங்கை இளையோர் வலைப்பந்து அணிக்கு முதல் 2 போட்டிகளிலும் அபார வெற்றி

மெலனி விஜேசிங்கவின் அபார ஆட்டத்தினால் ………

எனினும், ஐப்பானில் நடைபெற்று வருகின்ற ஆசிய இளையோர் வலைப்பந்தாட்டத்தில் முதல் 3 போட்டிகளிலும் அபார வெற்றியீட்டிய இலங்கை அணி, குழு நிலையின் இறுதி மோதலுக்கு முன்னரே, அரையிறுதிக்கான வாய்ப்பை உறுதிப்படுத்திக் கொண்டது

இதில் தென் கொரியா அணியுடனான முதல் போட்டியில் 95-7 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியீட்டிய இலங்கை அணி, இரண்டாவது போட்டியில் நேபாள அணியை 136-07 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தியது.

இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 3ஆவது லீக் போட்டியில் தாய்லாந்துடன் மோதிய இலங்கை இளையோர் வலைப்பந்தாட்ட அணி, மெலனி விஜேசிங்கவின் அபார ஆட்டத்தின் உதவியுடன் 85-29 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதியில் விளையாடும் வாய்ப்பை உறுதி செய்தது

இதுஇவ்வாறிக்க, இலங்கை அணி மற்றொரு வெற்றியை பெற்று குழுவில் முன்னிலையைப் பெற்றுக் கொள்ளும் எதிர்பார்ப்புடன் நேற்று (04) பலம் பொருந்திய சிங்கப்பூர் அணியை குழு நிலையில் தமது இறுதி மோதலில் எதிர்த்தாடியது

தேசிய விளையாட்டு விழா கடற்கரை கபடியில் கிழக்கு மாகாணத்திற்கு தங்கப் பதக்கம்

விளையாட்டுத்துறை அமைச்சும், விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களமும் ………

குறித்த போட்டி ஆரம்பமாகியது முதல் தனது தனித்துவமான ஆட்டத்தை சிங்கப்பூர் அணி வெளிப்படுத்தியது. இதனால் பந்து அதிக நேரங்கள் சிங்கப்பூர் வீராங்கனைகளின் கைகளில் இருந்தது. அது இலங்கை அணிக்கு சற்று அழுத்தம் கொடுப்பதாக அமைந்தது

எனவே பந்து பரிமாற்றத்தில் அபாரமாக செயற்பட்ட அந்த அணி, முதல் கால் பகுதி ஆட்டத்தில் 20-09 என முன்னிலை பெற்றது.  

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் கால் பகுதியிலும் தமது அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சிங்கப்பூர் அணி, இலங்கைக்கு வாய்ப்புகள் கொடுக்காமல் விளையாடி 40-20 என்ற புள்ளிகள் அடிப்படையில் தமது முன்னிலையினை நீடித்தது.

உலகக் கிண்ணத்திற்கான தேசிய வலைப்பந்து அணிக்கு எப்படியான உதவிகள் கிடைக்கின்றது?

ஆசிய சம்பியன்களாக திகழும் இலங்கையின் ……….

மூன்றாவது கால் பகுதியில் தமது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை வீராங்கனைகள் சற்று வேகமாக விளையாடி புள்ளிகளைக் குவித்தனர். இதில் இலங்கை அணியின் உப தலைவியான மெலனி விஜேசிங்க தனது வழமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

இதன்படி, மூன்றாவது கால் பகுதியில் இலங்கை அணி 20 புள்ளிகளைப் பெற, சிங்கப்பூர் வீராங்கனைகள் 13 புள்ளிகளை மாத்திரமே பெற்றனர். எனினும் மூன்றாம் கால் பகுதி முடிவில் 53-40 என்ற புள்ளிகள் கணக்கில் சிங்கப்பூர் அணி முன்னிலை பெற்றது.  

இதேநேரம், நான்காவது கால் பகுதியில் இரண்டு அணிகளும் பலத்த போட்டியைக் கொடுத்து விளையாடியிருந்தன. இதன்போது இலங்கை அணி 18 புள்ளிகளையும், சிங்கப்பூர் அணி 13 புள்ளிகளையும் பெற்றது. எனினும், போட்டியின் இறுதியில் 66-58 என்ற புள்ளிகள் கணக்கில் சிங்கப்பூர் அணி வெற்றி பெற்றது

இதன்படி, குழுவில் முன்னிலை பெற்ற சிங்கப்பூர் அணி, நாளை (06) நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டியில் ஹொங்கொங் அணியையும், இலங்கை அணி, நடப்புச் சம்பியனான மலேசியா அணியையும் சந்திக்கவுள்ளன. 

>> மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க <<