இலங்கை அஞ்சலோட்ட அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி

186
Men’s 4X400m relay

ஆசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 4X400 அஞ்லோட்டத்தில் கலந்துகொண்ட காலிங்க குமாரகே தலைமையிலான இலங்கை அணி, தகுதிச் சுற்றுப் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பெற்று இறுதிப் போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பை உறுதி செய்தது.

ஆசிய விளையாட்டு விழாவில் கயந்திகா, இந்துனில் முன்னேற்றம்

ஆசிய விளையாட்டு விழாவின் மெய்வல்லுனர் போட்டிகளில் நிச்சயம் பதக்கம் வெல்வார்…

இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தா மற்றும் பால்ம்பேங் நகரங்களில் நடைபெற்று வரும் 18ஆவது ஆசிய விளையாட்டு விழா 11ஆவது நாளாகவும் இடம்பெற்று வருவதுடன், இலங்கைக்கு மெய்வல்லுனர் போட்டிகளில் பதக்கமொன்றைப் பெற்றுக்கொடுக்கின்ற கடைசி வாய்ப்பாக அமைந்த மெய்வல்லுனர் போட்டிகள் தொடர்ந்து ஜந்தாவது நாளாக இன்றும் (29) நடைபெற்றன.

இதில், ஆண்களுக்கான 4X400 அஞ்சலோட்ட இரண்டாவது தகுதிச் சுற்றில் கலந்துகொண்ட இலங்கை அணி, 03 நிமிடங்களும் 06.66 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து 3ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.

இப் போட்டியின் ஆறாவது சுவட்டில் ஓடிய கட்டார் அணியின் அப்துர் ரஹ்மான் சம்பா முதல் வீரராக போட்டியை நிறைவு செய்தார். ஆனால், அவரைத் பின்தொடர்ந்து ஏழாவது சுவட்டில் ஓடிய இலங்கை அணியின் இளம் வீரரான அருண தர்ஷன இரண்டாவது வீரராக போட்டியை முடித்துக் கொண்டார்.

எனினும், போட்டியின் 2ஆவது மற்றும் 3ஆவது கோல் பரிமாற்றங்களில் கட்டார் மற்றும் பஹ்ரெய்ன் வீரர்கள் இலங்கை வீரர்களுக்கு சவால் கொடுத்து முன்னிலை பெற்றிருந்தனர். ஆனால் அந்த சவாலை இறுதி வீரராக ஓடிய காலிங்க குமாரகே இறுதி 100 மீற்றரில் முறியடிக்க கடுமையாக முயற்சி செய்த போதிலும் அது வெற்றியளிக்கவில்லை.

ஆசிய விளையாட்டு விழாவில் தொடர்ச்சியாக பதக்க வாய்ப்பை இழக்கும் இலங்கை

ஆசிய விளையாட்டு விழா மெய்வல்லுனரில் 800 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் இலங்கையின்….

இறுதியில், இலங்கை குழாத்தினர் போட்டியை 03 நிமிடங்களும் 06.66 செக்கன்களில் நிறைவுசெய்து 3ஆவது இடத்தைப் பெற்றுக்கொள்ள, ஒட்டுமொத்த நிலையில் ஐந்தாவது இடத்தைப் பெற்று நாளை (30) இரவு நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பை உறுதி செய்தனர்.

அருண தர்ஷன, அஜித் பிரேமகுமார, பசிந்து கொடிக்கார, காலிங்க குமாரகே ஆகியோர் இலங்கை குழாத்தை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தனர். இதில் அருண தர்ஷன மற்றும் பசிந்து கொடிக்கார ஆகியோர் பாடசாலை மாணவர்கள் என்பது சிறப்பம்சமாகும்.

இதேவேளை, இந்தப் போட்டியை 3 நிமிடங்களும் 06.08 செக்கன்களில் நிறைவுசெய்த கட்டார் அணி முதலிடத்தையும், பஹ்ரெய்ன் அணி (3 நிமிடங்களும் 06.29 செக்.) இரண்டாவது இடத்தையும் பெற்றுக்கொண்டது.

எனினும், முதலாவது தகுதிச்சுற்றில் முதல் மூன்று இடங்களையும் பெற்றுக்கொண்ட ஜப்பான், இந்தியா மற்றும் ஈராக் அணிகள் இறுதிப் போட்டியில் பலத்த போட்டியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<