இலங்கை கால்பந்து சம்மேளமானது (FFSL), 19 வயதுக்கு உட்பட்ட வீரர்கள் பங்குபெறும் 2018 ஆம் ஆண்டிற்கான ஆசிய கால்பந்து சம்மேளன சம்பியன்ஷிப் தொடரின் தகுதிகாண் போட்டிகளில் இலங்கை சார்பாக கலந்து கொள்ளவுள்ள 32 வீரர்கள் கொண்ட குழாமை வெளியிட்டுள்ளது.

இந்த தகுதிகாண் தொடரில் பங்கேற்கும் தேசிய அணி வீரர்கள் யார் என்பதை தேர்ந்தெடுப்பதற்காக, வீரர்கள் தெரிவு முகாம் ஒன்றை ஜூன் மாதம் 13 ஆம் மற்றும் 20 ஆம் திகதிகளில் இலங்கை கால்பந்து சம்மேளனம் (FFSL) சிட்டி கால்பந்து தொகுதி மைதானத்தில் நடாத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த தெரிவு முகாமில், நாட்டின் அனைத்து பாகங்களையும் சேர்ந்த கால்பந்து வீரர்கள் தங்களது திறமைகளை வெளிக்காட்டியிருந்தனர். அதில் திறமையாக செயற்பட்ட வீரர்கள், ஜூன் 29 ஆம் திகதி நடைபெற்றிருந்த இறுதி தேர்விற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

அதனடிப்படையில் தற்போது தெரிவு செய்யப்பட்டிருக்கும் குழாமானது 8 பின்கள வீரர்கள், 7 மத்தியகள வீரர்கள், 11 முன்கள வீரர்கள் மற்றும் 6 கோல் காப்பாளர்கள் ஆகியோரை உள்ளடக்கியிருக்கின்றது.

தேசிய குழாமில் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களைச் சேர்ந்த நான்கு வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. சந்திரசேகரன் சஜேந்தன், தங்கராசா அஜித், சசிகுமார் கனுஜன் மற்றும் மொஹமட் அஷ்ராஸ் ஆகியோரே அந்த நான்கு வீரர்களுமாவர்.

>> கிழக்கு மாகாண கால்பந்தாட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய கிண்ணியா பாடசாலைகள்

அதே போன்று, 2016 ஆம் ஆண்டின் பருவகாலத்திற்கான 19 வயதுக்கு உட்பட்ட வீரர்களுக்கான டிவிஷன் – I கால்பந்து தொடரிலும், 2016 ஆம் ஆண்டிற்கான கொத்மலே கிண்ணத் தொடரிலும் அற்புதமான ஆட்டத்தினை வெளிக்காட்டியிருந்த அமான் பைசர், மொஹமட் ஆகீப், அசேல மதுஷான் மற்றும் மொஹமட் சாஜித் ஆகிய வீரர்களும் இந்த 32 வீரர்கள் கொண்ட குழாமில் அடக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கொழும்பு புனித பேதுரு கல்லூரி வீரர்கள் மூவரும், ஹமீத் அல் ஹூசைனி கல்லூரி, ஸாஹிரா கல்லூரி மற்றும் கொழும்பு புனித ஜோசப் கல்லூரி ஆகியவற்றில் இருந்தும் தலா இரண்டு வீரர்கள் வீதம் தேசிய அணியில் விளையாடும் வாய்ப்பினை பெற்றிருக்கின்றனர்.

32 வீரர்கள் கொண்ட குழாம்

இல பெயர் பாடசாலையின் பெயர்/ கழகம் நிலை
1. சந்திரசேகரன் சஜேந்தன் மத்திய கல்லூரி, யாழ்ப்பாணம் பின்கள வீரர் (DF)
2. தங்கராசா அஜித் புனித ஹென்ரியரசர் கல்லூரி, யாழ்ப்பாணம் பின்கள வீரர் (DF)
3. சசிகுமார் கனுஜன் மஹாஜன கல்லூரி, யாழ்ப்பாணம் முன்கள வீரர் (FW)
4. மொஹமட் அஷ்ராஸ் கிண்ணியா மத்திய கல்லூரி, திருகோணமலை கோல் காப்பாளர் (GK)
5. மொஹமட் றிப்லான் ஊவா கல்லூரி, பதுளை கோல் காப்பாளர் (GK)
6. நெத்ம மல்ஷான் புனித ஜோசப் கல்லூரி, அனுராதபுரம் முன்கள வீரர் (FW)
7. பதும் விமுக்தி கிங்ஸ்வூட் கல்லூரி, கண்டி முன்கள வீரர் (FW)
8. சல்மான் அஹமட் நூரனியா மத்திய மகா வித்தியாலயம், மாவனல்லை முன்கள வீரர் (FW)
9. இஷார சந்தருவன் புனித ஜோசப் வாஸ் கல்லூரி, வென்னப்புவ மத்தியகள வீரர் (MF)
10. ஜௌபர் ஹூசைர் ஸாஹிரா கல்லூரி, புத்தளம் கோல் காப்பாளர் (GK)
11. அமான் பைசர் ஹமீட் அல் ஹூசைனி கல்லூரி, கொழும்பு மத்தியகள வீரர் (MF)
12. ஹனிபா சபீக் சப்ரின் ஹமீட் அல் ஹூசைனி கல்லூரி, கொழும்பு கோல் காப்பாளர் (GK)
13. மொஹமட் நாஸிக் ஸாஹிரா கல்லூரி, மருதானை பின்கள வீரர் (DF)
14. மொஹமட் ஆகீப் ஸாஹிரா கல்லூரி, மருதானை மத்தியகள வீரர் (MF)
15. ஷெஹான் யஷ்மில புனித பேதுரு கல்லூரி, கொழும்பு மத்தியகள வீரர் (MF)
16. மொஹமட் ஷபீர் புனித பேதுரு கல்லூரி, கொழும்பு முன்கள வீரர் (FW)
17. ஷெஹான் திவங்க புனித பேதுரு கல்லூரி, கொழும்பு முன்கள வீரர் (FW)
18. சமத் ரஷ்மித் புனித ஜோசப் கல்லூரி, மருதானை மத்தியகள வீரர் (MF)
19. அசேல மதுஷான் புனித ஜோசப் கல்லூரி, மருதானை முன்கள வீரர் (FW)
20. நுவான் கிம்ஹான நாலந்தா கல்லூரி, மருதானை கோல் காப்பாளர் (GK)
21. பசிந்து கவிந்த வெஸ்லி கல்லூரி, கொழும்பு முன்கள வீரர் (FW)
22. I. மிதுர்ஷன் விவேகானந்தா கல்லூரி, கொழும்பு கோல் காப்பாளர் (GK)
23. மொஹமட் மெளலானா லும்பினி கல்லூரி, கொழும்பு பின்கள வீரர் (DF)
24. சசங்க தில்ஹார ஜயசேகர புனித லூசியா கல்லூரி, கொழும்பு முன்கள வீரர் (FW)
25. கிறிஸ்ரி அந்தோனி துல்ஷான் கருணாரத்ன பெளத்த கல்லூரி, வெலிசர பின்கள வீரர் (DF)
26. மொஹமட் சாஜிட் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு மத்தியகள வீரர் (MF)
27. மொஹமட் முஸ்னி வெஸ்டர்ன் விளையாட்டு கழகம் பின்கள வீரர் (DF)
28. மொஹமட் முர்சித் ஜீலானி முஸ்லிம் கல்லூரி, பாணந்துறை முன்கள வீரர் (FW)
29. மொஹமட் நஜ்மான் முஸ்லிம் கல்லூரி, களுத்துறை மத்திய கள வீரர் (MF)
30. சுரேஷ் புஷ்பகுமார சுஹாத வித்தியாலயம், களுத்துறை முன்கள வீரர் (FW)
31. விக்கும் அவிஷ்க கவிந்து ஓல் சைன்ட்ஸ் கல்லூரி, காலி பின்கள வீரர் (DF)
32. லஹிரு விதுரங்க வித்யாலோக மகாவித்தியாலயம், காலி பின்கள வீரர் (DF)