பங்களாதேஷ் தொடருக்கான உத்தேச இலங்கை குழாம் அறிவிப்பு

4721

இலங்கை தேசிய அணியின் தேர்வாளர்கள் பங்களாதேஷ் அணியுடன் நடைபெறவிருக்கும் இருதரப்பு ஒரு நாள் தொடரில் பங்கேற்கும் உத்தேச வீரர்கள் 23 பேர் அடங்கிய பட்டியலை இன்று (23) வெளியிட்டுள்ளனர்.

அதோடு இத்தொடருக்காக உத்தேச வீரர்கள் குழாத்தில் தேர்வு செய்யப்பட்டிருக்கும் வீரர்கள் அனைவரும், பங்களாதேஷ் அணியுடனான தொடருக்காக இலங்கை அணி அங்கு பயணிக்கும் வரை உள்ளூர் போட்டிகள் எதிலும் விளையாடாமல் இருக்குமாறும் பணிக்கப்பட்டுள்ளனர்.

பின்தொடை காயத்தால் மெதிவ்ஸ் மீண்டும் அணியில் இருந்து விலகல்

நேற்று நிறைவடைந்த இந்தியாவுடனான இரண்டாவது T20 போட்டியில் இந்திய இன்னிங்ஸின்…

“ (தெரிவு செய்யப்பட்டிருக்கும்) வீரர்கள் எவரையும் உள்ளூர் போட்டிகளில் விளையாட அனுமதிக்க வேண்டாம் என புதிய பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹதுருசிங்க கூறியிருந்தார். எனவே, நாம் அவரது முடிவுக்கு கட்டுப்படுகின்றோம். என இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் திலங்க சுமதிபால கருத்து தெரிவித்திருந்தார்.

இப்படியானதொரு செயற்பாட்டினை ஹதுருசிங்க மேற்கொள்வது வீரர்களின் தரத்தினை அதிகரிக்கும் நோக்குடன் அவர்களோடு நேரம் செலவழிக்கவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வீரர்கள் அனைவருக்குமான பயிற்சிகள் டிசம்பர் மாதம் 28ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கின்றது. பயிற்சி நடைபெறும் இடம், நேரம் என்பன இன்னும் ஊர்ஜிதம் செய்யப்படவில்லை.

தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்ற இலங்கை கிரிக்கெட் அணியில் பெரிய அளவிலான மாற்றங்களையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும் நோக்கில் அண்மைக் காலமாக இலங்கை அணியின் அதிகாரங்களில் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதில் குறிப்பாக முன்னாள் வீரர்கள் பலரை இலங்கை அணிக்கான பயிற்றுவிப்புக் குழுவுடன் இணைத்துக்கொள்ளும் செயற்பாட்டை இலங்கை கிரிக்கெட் மேற்கொண்டது. அதன் இறுதி முயற்சியாக பங்களாதேஷ் அணிக்கு பயிற்றுவிப்பு பணியை மேற்கொண்டு வந்த இலங்கையின் முன்னாள் வீரர் ஹதுருசிங்க இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கை அணியின் எதிர்காலதிற்கான ஹத்துருசிங்கவின் திட்டம்

இலங்கை அணிக்கு மீண்டும் சேவையாற்ற கிடைத்தமையை எனக்கு கிடைத்த மிகப் பெரிய கௌரவமாகவும்…

அதனைத் தொடர்ந்து, நீண்டகாலத் திட்டங்களுடன் செயற்படவுள்ள ஹதுருசிங்க இலங்கை அணியுடன் மேற்காள்ளும் முதல் கிரிக்கெட் சுற்றுப் பயணமாக பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடர் அமையவுள்ளது.

எனவே, அதற்கான சிறந்த தயார்படுத்தல்களை மேற்கொள்ளும் முகமாகவே தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள வீரர்கள் எவரையும் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டாம் என அறிவுருத்தப்பட்டுள்ளது.

உத்தேச இலங்கை ஒரு நாள் குழாம்

  1. திசர பெரேரா
  2. உபுல் தரங்க
  3. தனுஷ்க குணத்திலக்க
  4. குசல் மெண்டிஸ்
  5. தினேஷ் சந்திமால்
  6. அஞ்செலோ மெதிவ்ஸ்
  7. குசல் பெரேரா
  8. அசேல குணரத்ன
  9. நிரோஷன் திக்வெல்ல
  10. சதீர சமரவிக்ரம
  11. சுரங்க லக்மால்
  12. நுவான் பிரதீப்
  13. தசுன் சானக்க
  14. லஹிரு கமகே
  15. விஷ்வ பெர்னாந்து
  16. துஷ்மந்த சமீர
  17. ஷெஹான் மதுசங்க
  18. லஹிரு குமார
  19. அகில தனன்ஞய
  20. ஜெப்ரி வன்டர்சேய்
  21. அமில அபொன்சோ
  22. லக்ஷான் சந்தகன்
  23. சத்துரங்க டி சில்வா