ஹொங்கொங் செல்லும் இலங்கை அணியில் இடம்பிடித்த தர்ஜினி

168

ஹொங்கொங்கில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நான்கு நாடுகளுக்கு இடையிலான வலைப்பந்தாட்டப் போட்டித் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட இலங்கை வலைப்பந்தாட்ட அணியில் வடக்கின் நட்சத்திர வீராங்னையான தர்ஜினி சிவலிங்கம் இடம்பிடித்துள்ளார்.  

உலக தரநிலைப்படுத்தும் வலைப்பந்தாட்டப் போட்டித் தொடர் மற்றும் தென்கொரியாவில் நடைபெறவுள்ள ஆசிய வலைப்பந்தாட்டப் போட்டித் தொடர்களை இலக்காகக் கொண்டு இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட தேர்வுப் போட்டிகள் நேற்று (22) கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்றது

ஆசிய வலைப்பந்தாட்ட அணியில் மீண்டும் இடம்பிடித்த தர்ஜினி

தென்கொரியாவில் எதிர்வரும் ஜுலை மாதம் ….

இறுதியாக நடைபெற்ற உலகக் கிண்ண வலைப்பந்தாட்டத் தொடர் மற்றும் ஆசிய கிண்ண வலைப்பந்தாட்டத் தொடர்களில் விளையாடிய பெரும்பாலான வீரர்கள் 15 பேர் கொண்ட இந்தக் குழாத்தில் இடம்பிடித்துள்ளமை சிறப்பம்சமாகும்.   

இதில், அண்மைக்காலமாக இலங்கை வலைப்பந்தாட்ட அணிக்காக விளையாடிவரும் வடக்கின் நட்சத்திர வீராங்கனையும், இங்கிலாந்தில் கடந்த வருடம் நடைபெற்ற உலகக் கிண்ண வலைப்பந்தாட்டத் தொடரில் அதிக கோல்களைப் போட்டு சாதனை படைத்தவருமான தர்ஜினி சிவலிங்கம் இலங்கை அணியில் இடம்பிடித்துள்ளார்

இந்த நிலையில், வடக்கின் இளம் வலைப்பந்தாட்ட வீராங்கனையான எழிலேந்தினி சேதுகாவலவருக்கு இந்தத் தொடரில் பங்குபற்றும் வாய்ப்பு கிடைக்கவில்லை

எனினும், தயார்நிலை வீராங்கனைகள் பட்டியலில் அவரை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2020 ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற்ற முதல் இலங்கையராக மெட்டில்டா கார்ல்சன்

ஜப்பானின் டோக்கியோவில் இவ்வருடம் நடைபெறவுள்ள ஒலிம்பிக் …….

அத்துடன், இலங்கை அணியின் அனுபவமிக்க வீராங்கனையான திசாலா அல்கம, நீண்ட இடைவெளியின் பிறகு இலங்கை வலைப்பந்தாட்ட அணியில் இடம்பிடித்துள்ளார்.

ஹொங்கொங்கில் நடைபெறவுள்ள இந்தத் தொடரில் வரவேற்பு அணியான ஹொங்கொங், இலங்கை, தாய்லாந்து மற்றும் கென்யா ஆகிய நாடுகள் பங்குபற்றவுள்ளன

இலங்கை வலைப்பந்தாட்ட குழாம் 

தர்ஷிகா அபேவிக்ரம, கயனி திசாநாயக்க, கயாஞ்சலி அமரவங்ஷ, நவ்ஜலி ராஜபக்ஷ, மந்திரா சாருணி, ஹசித்தா மெண்டிஸ், துஷானி பண்டார, தர்ஜினி சிவலிங்கம், திசாலா அல்கம, திலினி வத்தேகெதர, கயத்ரி கௌஷல்யா, சுரேக்கா குமாரி, சமுர்தி அபேகுணவர்தன, துலங்கி வன்னிதிலக்க, துலங்கா தனஞ்சி

>>மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க <<