2013/2014ஆம் ஆண்டுகளில் வெற்றி பெற்றதன் பின்னர், தொடர்ந்து வந்த ஆண்டுகளில் டயலொக் ரக்பி லீக் போட்டிகளில் பிரகாசிக்க தவறிய இலங்கை கடற்படை ரக்பி அணி, இவ்வாண்டு பலம் கொண்ட வீரர்களை உள்ளடக்கிய அணியாக கிண்ணத்திற்காக போட்டியிட உள்ளது

Visit the Navy SC Rugby Hub

இவ்வணியின் கடந்த காலம்

கடந்த வருடம் நடைபெற்ற ரக்பி போட்டிகளில் முதல் போட்டியிலேயே தோல்வியுற்ற கடற்படை அணி, தாம் விளையாடிய 14 போட்டிகளில் வெறும் 7 போட்டிகளில் மட்டுமே வென்று மோசமான ஆட்டத்தை வெளிக்காட்டியது.

பாடசாலை மட்டப் போட்டிகளில் கலக்கிய இளம் வீரரான ஒமல்க குணரத்னவை சென்ற வருடம் தமது அணியில் இணைத்துக்கொண்டது கடற்படை அணி. எதிர்பார்க்கப்பட்டது போலவே ஒமல்க கடற்படை அணி சார்பாக சிறந்த விளையாட்டை வெளிக்காட்டி இருந்தார்.

யாரும் எதிர்பாராத விதத்தில் சென்ற வருட போட்டிகளில் கலக்கிய கடற்படை வீரர் திலின வீரசிங்க, கடற்படை அணி சார்பாக மொத்தமாக 146 புள்ளிகளை பெற்றுக்கொடுத்து சென்ற வருட லீக் போட்டிகளில் அதிக புள்ளிகள் பெற்றுக்கொண்ட வீரர் என்ற பெருமையை  அடைந்தார்.

கடற்படை அணியில் சில வீரர்கள் பிரகாசித்தாலும், அவ்வணி பலமான கழகங்களான கண்டி கழகம், ஹெவலொக் கழகம் மற்றும் CR&FC கழகங்களுடன் பிரகாசிக்கத் தவறியது. மேற்கூறப்பட்ட மூன்று அணிகளுடனும் மொத்தமாக இடம்பெற்ற 6 போட்டிகளில், கடற்படை அணி ஒரு போட்டியை சமன் செய்ததோடு, ஒரே ஒரு போட்டியை மட்டுமே வென்றது. இதனால் சென்ற வருடம் தர வரிசையில் 4ஆவது இடத்தையே அவ்வணி பெற்றுக்கொண்டது.

கடற்படை  குழாம்

அனுபவம் வாய்ந்த வீரர்கள்

கடந்த இரண்டு வருடங்களாக கடற்படை அணி சார்பாக விளையாடி வரும் தனுஷ்க பெரேரா இம்முறை பிளேன்கர் நிலையில் விளையாடுகிறார். கழக மட்டத்தில் மற்றும் தேசிய மட்டத்தில் பல வருடம் அனுபவம் பெற்ற இவர், இம்முறை கடற்படை அணிக்கு பெரும் பலமாவார்.

107 கிலோ எடை கொண்ட அணித்தலைவர் ரணசிங்க, ப்ரொப் நிலையில் விளையாடுவதால் கடற்படை அணியின் முன் வரிசை பலம் பெற்றுள்ளது.

ப்ளை ஹாப் நிலையில் விளையாடவிருக்கும் சாணக சந்திமல் கடற்படை அணியின் புதிய சக்தியாக காணப்படுகின்றார். அவருக்கு துணையாக கழக மட்ட போட்டிகளில் பல வருட அனுபவம் பெற்ற சுரங்க புஷ்பகுமார ஸ்க்ரம் ஹாப் நிலையில் விளையாடுகிறார்.

சென்ற வருடம் அதிக புள்ளிகள் பெற்று அசத்திய திலின வீரசிங்க இவ்வருடமும் தனது திறமையை வெளிக்காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பின் வரிசையில் விளையாடும் லீ கீகல் மற்றும் தினுஷ சதுரங்க ஆகியோர் இத்தொடரில் அசத்த காத்திருக்கும் கடற்படை அணிக்கு மிகப்பெரிய பலமாக அமைவார்கள்.

இளம் வீரர்கள்

இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்திய புத்திம பிரியரத்ன இந்த வருட கழக மட்ட போட்டிகளில் தனது திறமையை வெளிக்காட்ட காத்திருக்கிறார்.

ஜோசப் கல்லூரியின் பழைய மாணவனான, 120 கிலோ எடை கொண்ட ஸ்டீபன் க்ரெகரி, ஒமல்க விட்டு சென்ற இடத்தை நிரப்பவுள்ளார். இவரும் அணிக்கு தூணாக அமைவார்.  

சம்பியன் பட்டம் வென்ற இசிபதன கல்லூரியின் வீரரான இசுரு கொன்னகஹவத்த ப்லை ஹாப் நிலையில் விளையாடவுள்ளார்.

Dialog Rugby League Hub

பயிற்றுவிப்பாளர்கள்

கடற்படை அணிக்கு திரும்பியுள்ள மோதிலால் ஜயதிலக்க, அவருடைய தனித்துவமான பாணியில் அணியை வழி நடத்தி, அணியின் திட்டத்தில் பல மாற்றங்களை கொண்டுவந்து கடற்படை அணியை வெற்றியின் பக்கம் அழைத்து செல்லவிருக்கிறார்.

கடந்த சில வருடங்களாக கடற்படை அணியில் விளையாடி வந்த தேவ் ஆனந்த், இம்முறை துணை பயிற்றுவிப்பாளர் பதவியை ஏற்றுள்ளார். கடற்படை அணி பற்றி அதிகம் அறிந்துள்ள அவரது அனுபவம் அணிக்கு ஊக்கமளிக்கும் என்பதில் ஐயமில்லை.

நீண்ட காலமாக கடற்படை அணியின் முகாமையாளராக பணியாற்றி வரும் மேனக சுரங்க இவ்வருடமும் முகாமையாளராக கடமையாற்றவிருக்கிறார்.

தொடரில் வெற்றிபெறக் கூடிய பலமான வீரர்களை உள்ளடக்கிய அணியை கொண்டுள்ள கடற்படை அணியானது, சென்ற வருட தோல்வியில் இருந்து மீண்டு, வெற்றிகளை குவிக்க காத்திருக்கிறது.

2016/17 ஆம் ஆண்டுக்கான கடற்படை அணி

[a-team-showcase-vc ats_team_id=”2136265″]