தனுஷ்க குணத்திலக்கவின் சதத்தோடு SSC அணிக்கு இலகு வெற்றி

246

இலங்கை கிரிக்கெட் சபை, இலங்கையின் முதல்தர கழகங்களுக்கு இடையே ஒழுங்கு செய்து நடாத்தும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட  ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இன்றைய நாளில் (12) மொத்தமாக 11 போட்டிகள் நிறைவுக்கு வந்தது.

சோனகர் விளையாட்டுக் கழகம் எதிர் SSC

சோனகர் விளையாட்டுக் கழக அணியின் சொந்த மைதானத்தில் முடிந்த இப்போட்டியில், SSC அணி தேசிய அணி வீரர் தனுஷ்க குணத்திலக்கவின் (100) சதத்தோடு 7 விக்கெட்டுக்களால் வெற்றியை சுவைத்தது.

Photos: SSC vs Moors SC | Major Limited Overs Tournament 2018/19

போட்டியின் சுருக்கம்

சோனகர் விளையாட்டுக் கழகம் – 253 (49.3) – பபசர வடுகே 73, சாமர சில்வா 53, தம்மிக்க பிரசாத் 3/43, சச்சித்ர சேனநாயக்க 2/51

SSC – 257/3 (46.2) – தனுஷ்க குணத்திலக்க 100, சச்சித்ர சேனநாயக்க 66, சந்துன் வீரக்கொடி 44

முடிவு – SSC அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி

இரோஷ் – அதீஷ ஆகியோரின் துடுப்பாட்டத்தினால் சோனகர் கழகத்திற்கு வெற்றி

இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம் எதிர் குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம்

கொழும்பு கிரிக்கெட் கழக மைதானத்தில் முடிந்த இப்போட்டியில், இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம் குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகத்தினை 15 ஓட்டங்களால் வீழ்த்தி தொடரில் தமது முதல் வெற்றியினை பதிவு செய்தது.

Photos: SL Ports Authority SC vs Kurunegala Youth CC – Major Limited Overs Tournament 2018/19

போட்டியின் சுருக்கம்

இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம் –  270/7 (50) – அதீஷ நாணயக்கார 113, கயான் மனீஷன் 33, தனுஷ்க மாலன் 3/46

குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் – 255 (44) – தனுஷ்க தர்மசிரி 132, ரனேஷ் பெரேரா 3/29, சமிந்த பண்டார 3/49

முடிவு – இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம் 15 ஓட்டங்களால் வெற்றி


கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம்

கோல்ட்ஸ் அணியின் சொந்த மைதானத்தில் முடிந்த இந்தப் போட்டியில் கோல்ட்ஸ் அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றியினை சுவைத்தது. கோல்ட்ஸ் அணியின் வெற்றிக்கு தேசிய அணி வீரரான சதீர சமரவிக்ரம (85*) அரைச்சதம் ஒன்றுடன் ஆட்டமிழக்காது உதவியிருந்தார்.

Photos: Colts CC vs CCC | Major Limited Overs Tournament 2018/19

போட்டியின் சுருக்கம்

கொழும்பு கிரிக்கெட் கழகம் – 193 (45.5) – ரொன் சந்திரகுப்தா 62, அஷான் பிரியன்ஞன் 31, கவிஷ்க அஞ்சுல 4/40, நிசால தாரக்க 3/52

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 196/6 (44.5) – சதீர சமரவிக்ரம 85*, மலிந்த புஷ்பகுமார 2/31, வனிந்து ஹஸரங்க 2/54

முடிவு – கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் 4 விக்கெட்டுக்களால் வெற்றி

பிரையன் லாராவின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் கிறிஸ் கெய்ல்

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் எதிர் கடற்படை விளையாட்டு கழகம்

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் இப்போட்டியில் சச்சித்ர சேரசிங்க (130*) ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்ட அபார சதத்துடன் 161 ஓட்டங்களால் அதிரடி வெற்றியினை சுவைத்தது.

போட்டியின் சுருக்கம்

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் – 342/6 (50) – சச்சித்ர சேரசிங்க 130*, மனோஜ் சரச்சந்திர 51, ரமித் ரம்புக்வெல 48, புத்தி மதுஷன் 2/48, துஷான் ஹேமன்த 2/58

கடற்படை விளையாட்டுக் கழகம் – 181 (42.3) – ஆசிரி டி சில்வா 34, தமித்த சில்வா 4/33, ஜீவன் மெண்டிஸ் 3/55

முடிவு – தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் 161 ஓட்டங்களால் வெற்றி


இராணுவப்படை விளையாட்டு கழகம் எதிர் றாகம கிரிக்கெட் கழகம்

இராணுவப்படை அணியின் சொந்த மைதானத்தில் முடிந்த இப்போட்டியில் இராணுவப்படை அணி 46 ஓட்டங்களால் றாகம கிரிக்கெட் கழகத்தினை தோற்கடித்தது.

போட்டியின் சுருக்கம்

இராணுவப்படை விளையாட்டு கழகம் – 247 (48) – லக்ஷான் எதிரிசிங்க 67, அசேல குணரத்ன 55, நிஷான் பீரிஸ் 5/40, இஷான் ஜயரத்ன 2/37

றாகம கிரிக்கெட் கழகம் – 201 (46) – சமீர டி சொய்ஸா 62, ஷெஹான் பெர்னாந்து 54, நுவன் லியனபத்திரன 3/29

முடிவு – இராணுவப்படை அணி 46 ஓட்டங்களால் வெற்றி


பொலிஸ் விளையாட்டு கழகம் எதிர் காலி கிரிக்கெட் கழகம்

பொலிஸ் அணியின் சொந்த மைதானத்தில் முடிந்த இப்போட்டியில் காலி கிரிக்கெட் கழகம் பொலிஸ் அணியினை 4 விக்கெட்டுக்களால் தோற்கடித்தது.

Photos: Police SC vs Galle CC | Major Limited Overs Tournament 2018/19

போட்டியின் சுருக்கம்

பொலிஸ் விளையாட்டு கழகம் – 180 (48.4) – கிடான்ஸ் கேரா 91*, ரஜித் பிரியன் 4/40, அகலன்க கனேகம 3/40

காலி கிரிக்கெட் கழகம் – 186/6 (38.5) – நிசால் ரன்திக்க 62, தமித்த ஹூனுகும்புர 45, சுபுன் மதுசங்க 4/40

முடிவு – காலி கிரிக்கெட் கழகம் 4 விக்கெட்டுக்களால் வெற்றி

BCCI புதிய ஒப்பந்தத்தில் பும்ராஹ், ரிஷப் பான்ட் ஆகியோருக்கு அதிக சம்பளம்

NCC எதிர் பாணதுறை கிரிக்கெட் கழகம்

NCC அணியின் சொந்த மைதானத்தில் முடிந்த இப்போட்டியில், NCC அணி 107 ஓட்டங்களால் பாணதுறை வீரர்களை வீழ்த்தியது.

Photos: NCC vs Panadura CC | Major Limited Overs Tournament 2018/19

போட்டியின் சுருக்கம்

NCC – 271 (50) – பெதும் நிஸங்க 76, சத்துரங்க டி சில்வா 56, நிமேஷ குணசிங்க 50, வினோத் பெரேரா 3/30, நவீன் கவிகார 2/28

பாணதுறை விளையாட்டு கழகம் – 164 (39.5) – விஷ்வ சத்துரங்க 63, சசிந்து கொலம்பகே 5/31, டிலேஷ் குணரத்ன 3/23

முடிவு – NCC அணி 107 ஓட்டங்களால் வெற்றி


BRC எதிர் புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம்

தமது சொந்த மைதானத்தில் முடிந்த இப்போட்டியில் போட்டியில் புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் BRC அணியினை 161 ஓட்டங்களால் தோற்கடித்தது.

Photos: BRC vs Bloomfield C & AC | Major Limited Overs Tournament 2018/19

போட்டியின் சுருக்கம்

BRC – 298/8 (50) – டேஷான் டயஸ் 72, பானுக்க ராஜபக்ஷ 66, மதுசன் ரவிச்சந்திரகுமார் 4/77, அசேல் சிகெர 2/19, சாலுக்க சில்வா 2/48

புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் – 137 (38) – சச்சின் ஜயவர்தன 66, சமோத் பியமால் 36, ருமேஷ் புத்திக்க 3/36

முடிவு – BRC அணி 161 ஓட்டங்களால் வெற்றி


களுத்துறை நகர கழகம் எதிர் சரசென்ஸ் விளையாட்டுக் கழகம்

மக்கொனவில் இடம்பெற்ற இப்போட்டியில் செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் 6 விக்கெட்டுக்களால் வெற்றியினை சுவைத்தது.

போட்டியின் சுருக்கம்

களுத்துறை நகர கழகம் – 172 (49.1) – நிப்புன கமகே 35, சாலிய சமன் 2/20, சாமிகர எதிரிசிங்க 2/21

சரசென்ஸ் விளையாட்டு கழகம் – 175/4 (35) – அன்டி சோலமன்ஸ் 43, மிலிந்த சிறிவர்த்தன 40*, பசிந்து மதுஷான் 3/57

முடிவு – சரசென்ஸ் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி

சதத்தின் மூலம் பல சாதனைகள் பட்டியலில் இடம்பிடித்தார் விராட் கோஹ்லி

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் கண்டி சுங்க விளையாட்டு கழகம்

கட்டுநாயக்க விமானப்படை மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் 111 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

போட்டியின் சுருக்கம்

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் – 193 (41) – சஹான் ஆராச்சிகே 62,  அஞ்சலோ ஜயசிங்க 55, சுமேத திஸநாயக்க 6/30

கண்டி சுங்க விளையாட்டு கழகம் – 82 (23.2) – புத்திக்க மெண்டிஸ் 25, உபுல் சந்திரசிரி 4/25

முடிவு – நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் 111 ஓட்டங்களால் வெற்றி


இலங்கை விமானப்படை விளையாட்டு கழகம் எதிர் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம்

கட்டுநாயக்கவில் சுதந்திரவலய மைதானத்தில் முடிந்த இப்போட்டியில் விமானப்படை அணி சிலாபம் மேரியன்ஸ் அணியை 5 விக்கெட்டுக்களால் தோற்கடித்தது.

போட்டியின் சுருக்கம்

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 176 (44) – திக்ஷில டி சில்வா 51, ஹர்ஷ குரே 50, சுமிந்த லக்ஷான் 20/4, உமேக சத்துரங்க 23/3

விமானப்படை விளையாட்டு கழகம் – 179/5 (38.2) – சானக விஜேசிங்க 45*, புலின தரங்க 26/2

முடிவு – விமானப்படை அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க