ஐ.சி.சி. இன் ஒரு நாள் தரவரிசையில் மேலும் வீழ்ச்சி கண்டுள்ள இலங்கை

2260

மே மாதம் முதலாம் திகதி வெளியிடப்பட்டிருக்கும் ஐ.சி.சி இன் ஒரு நாள் அணிகள் தரப்படுத்தலில் இலங்கை அணி மேலும் 5 புள்ளிகளை இழந்துள்ளது. இதனால், இதற்கு முன்னர் வெளியிடப்பட்டிருந்த தரப்படுத்தல் பட்டியலில் 98 புள்ளிகளுடன் இருந்த இலங்கை அணி, தற்போது 93 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

தேசிய மட்டத்திலும் இரண்டு விக்கெட்டுக்களைப் பதம் பார்த்தார் கபில்ராஜ்

19 வயதிற்குட்பட்ட மாகாண அணிகளுக்கிடையிலான மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர்கள்..

அண்மைக் காலமாக சிறந்த திறமையை வெளிப்படுத்தி வரும் பங்களாதேஷ் அணி, இலங்கை அணியை விட இரண்டு புள்ளிகள் மாத்திரமே பின்தங்கியிருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது வெளியிடப்பட்டிருக்கும் தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களையும் முறையே தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அணிகள் பெற்றுள்ளன. அதேவேளையில்  அட்டவணையில் எட்டாம் இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணி, ஒன்பதாம் இடத்தில் இருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணியை விட 9 புள்ளிகள் முன்னிலையில் உள்ளது.

இதனால் தற்போதைய தரவரிசையின்படி, இங்கிலாந்து அணியுடன் சேர்த்து 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் திகதியன்று தரவரிசைப் பட்டியலில் முதல் 8 இடங்களைப் பெற்றிருக்கும் அணிகள், 2019இல் இடம்பெறும் உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு நேரடித் தகுதி பெறும்.  

தற்போது வெளியிடப்பட்டிருக்கும் தரவரிசைப் பட்டியல், அணிகளின் பழைய போட்டி முடிவுகளை புறந்தள்ளிய நிலையிலேயே வெளியிடப்பட்டுள்ளன. அதாவது 2014ஆம் ஆண்டு மே முதலாம் திகதியில் இருந்து விளையாடப்பட்ட போட்டிகளும் 2016ஆம் ஆண்டு மே முதலாம் திகதியில் இருந்து விளையாடப்பட்ட போட்டிகளின் முடிவுகளுமே அட்டவணையில் 100% பிரதிபலிக்கப்படுகின்றன.  

தொடரில் முறையே 8ஆம் மற்றும் 9ஆம் இடங்களினைப் பெற்றிருக்கும் அணிகளான பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் ஆகியவை அண்மைய அட்டவணையில் புள்ளிகளை இழந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதில், பாகிஸ்தான் 90 இலிருந்து 88 இற்கும், மேற்கிந்திய தீவுகள் அணி 83 இல் இருந்து 79 இற்கும் மாறியிருக்கின்றன.

இதன் மூலம் முன்னர் இரு அணிகளுக்கும் இடையிலான புள்ளிகள் வேறுபாடு 7 புள்ளிகளில் இருந்து தற்போது 9 புள்ளிகளாக மாறியுள்ளது. பங்களாதேஷ் அணியும் ஒரு புள்ளியை இழந்திருப்பினும் எட்டாம் இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணியை விட மூன்று புள்ளிகள் முன்னிலை பெற்றுள்ளது.

உலகக் கிண்ணத்திற்கு நேரடி தகுதி வாய்ந்த அணிகளை தீர்மானிக்க இருக்கும் திகதியான 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர், பங்களாதேஷ் அணியானது அயர்லாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுடனான  முக்கோணத் தொடர் ஒன்றில் விளையாடவுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து ஆலோசகராக அலன் டொனால்ட்

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்..

அதேபோன்று, மேற்கிந்திய தீவுகள் அணியும் ஜூன் மாதத்தில் ஆப்கானிஸ்தான் அணியுடன் மூன்று ஒரு நாள் போட்டிகளைக் கொண்ட தொடர் மற்றும் அதனை தொடர்ந்து செப்டம்பர் மாதத்தில் இங்கிலாந்தில் 5 ஒரு நாள் போட்டிகளைக் கொண்ட தொடர் என்பவற்றில் விளையாடவுள்ளது. ஆனால், பாகிஸ்தான் அணிக்கு நேரடி தகுதி திகதிக்கு முன்பாக விளையாட சம்பியன்ஸ் கிண்ணம் மாத்திரமே எஞ்சியிருக்கின்றது.ICC ODI Ranking

அதேவேளை, அட்டவணையில் முதலிடத்தில் இருக்கும் தென்னாபிரிக்க அணியானது அண்மைய அட்டவணை மூலம் நான்கு புள்ளிகளை மேலதிகமாக பெற்று 123 புள்ளிகளுடன் உள்ளது. உலகக் கிண்ண சம்பியன்களான அவுஸ்திரேலிய அணி 118 புள்ளிகளுடன் தொடர்ந்து அதே இடத்தில் (2) நீடிக்கின்றது.

சம்பியன்ஸ் கிண்ணத்தின் நடப்புச் சம்பியனான இந்தியா, உலகக் கிண்ணத்தில் இரண்டாம் இடத்தினைப் பெற்றுக்கொண்ட நியூசிலாந்து அணியுடன் தனது இடத்தினை மாற்றிக்கொண்டுள்ளது. இரு அணிகளும் இம்முறை புள்ளிகள் பெற்று முன்னேற்றம் அடைந்திருக்கின்றன. ஐந்து புள்ளிகளை பெற்றிருக்கும் இந்திய அணி 117 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும், மூன்று புள்ளிகளை பெற்றிருக்கும் நியூசிலாந்து அணி 115 புள்ளிகளுடன் நான்காம் இடத்திலும் இருக்கின்றன.

2017ஆம் ஆண்டிற்கான சம்பியன்ஸ்  கிண்ணத்தினையும் 2019 இல் இடம்பெறும் உலகக் கிண்ணத்தையும் நடாத்தும் நாடான இங்கிலாந்து 109 புள்ளிகளுடன் அட்டவணையில் எந்தவித மாற்றமுமின்றி அதே ஐந்தாம் இடத்தில் நீடிக்கின்றது.

  மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க