ஆசிய கனிஷ்ட கரப்பந்தாட்ட தொடருக்கு மியன்மார் சென்றுள்ள இலங்கை அணி

201

மியன்மாரில் ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 16 நாடுகள் பங்கேற்கும் ஆசிய கனிஷ்ட கரப்பந்தாட்டத் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி நேற்று (31) மியன்மார் நோக்கி பயணமாகியது. 

தேசிய விளையாட்டு விழா கடற்கரை கபடியில் கிழக்கு மாகாணத்திற்கு தங்கப் பதக்கம்

விளையாட்டுத்துறை அமைச்சும்…

மூன்றாவது தடவையாக நடைபெறவுள்ள இம்முறை ஆசிய கனிஷ் கரப்பந்தாட்டத் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை கனிஷ் கரப்பந்தாட்ட அணியை ஷெஹான் லக்ஷித்த வழிநடத்தவுள்ளதுடன், ரெஹான் மதுஷங்க பெர்னாண்டோ உதவித் தலைவராக செயற்படவுள்ளார்

அத்துடன், இம்முறை போட்டித் தொடரில் குழுவில் இடம்பெற்றுள்ள இலங்கை அணி, முதல் போட்டியில் அவுஸ்திரேலியாவை எதிர்வரும் 3ஆம் திகதி எதிர்த்தாடவுள்ளது

இந்த நிலையில், வரவேற்பு நாடான மியன்மாரை எதிர்வரும் 4ஆம் திகதி சந்திக்கவுள்ள இலங்கை அணி, 5ஆம் திகதி ஹொங்கொங் அணியை எதிர்கொள்ளும்.  

அதனைத்தொடர்ந்து இரண்டாம் சுற்று, நிரல்படுத்தும் சுற்றுப் போட்டிகள் மற்றும் சம்பியன் அணியைத் தீர்மானிக்கின்ற போட்டிகள் எதிர்வரும் 11ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன

கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற அங்குரார்ப்பண ஆசிய கனிஷ் கரப்பந்தாட்டத் தொடரில் இலங்கை அணி பங்கேற்கவில்லை. இதனையடுத்து 2017ஆம் ஆண்டு முதல்தடவையாகப் பங்கேற்ற இலங்கை அணி, 11 அணிகளில் 10ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டது.  

ஆசிய உடற்கட்டழகர் போட்டியில் ராஜகுமாரனுக்கு வெண்கலப் பதக்கம்

சீனாவின் ஹேர்பின் நகரில் நடைபெற்ற…

இந்த நிலையில், இலங்கை கனிஷ் வலைப்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளராக சன்ன ஜயசேகரவும், உதவிப் பயிற்றுவிப்பாளராக சமிந்த குமார ஜயரத்னவும், உடற்கூற்று மருத்துவராக நிஷான் இந்திக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்

இதேநேரம், இம்முறை ஆசிய கனிஷ் கரப்பந்தாட்டத் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணிக்கு இலங்கையின் முதல்தர தொலைத் தொடர்பு நிறுவனமான டயலொக் ஆசியாட்டா அனுசரணை வழங்கவுள்ளது.

இந்த நிலையில், இலங்கை கனிஷ் கரப்பந்தாட்ட அணியினர் மியன்மாருக்கு புறப்பட்டுச் செல்வதற்கு முன்னர் இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, செயலாளர் .எஸ் நாலக்க ஆகியோர் வீரர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்

Photos: Sri Lanka Men’s U23 Volleyball Squad | 3rd Asian Men’s U23 Volleyball Championship 2019

ThePapare.com | Hiran Weerakkody | 01/08/2019 | Editing and re-using images without permission….

இதேவேளை, கடந்த சில வாரங்களுக்கு முன் வியட்நாமில் நடைபெற்ற பெண்களுக்கான ஆசிய கனிஷ் கரப்பந்தாட்டத் தொடரில் பங்கேற்ற இலங்கை அணி, அனைத்து போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி 13ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது

இலங்கை கரப்பந்தாட்ட அணி விபரம்:-

ஷெஹான் லக்ஷித்த பண்டார (தலைவர்), ரெஹான் மதுஷங்க பெர்னாண்டோ (உதவித் தலைவர்), ஷெஹான் மதுஷங்க பெர்னாண்டோ, சேனக டில்ஷான் ஜயரத்ன, அச்சிர சேனாநாயக்க, அவிஷ் கௌஷல்ய, வினோத் மதுரங்க பீரிஸ், சமத் டில்ஷான், மதுஷங்க திஸாநாயக்க, நுவன் தாரக்க, கவிந்து பபசர சந்ரசிறி, அஷேன் தனுஷ் பெர்னாண்டோ

>>மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க<<