சுதந்திரக் கிண்ண முத்தரப்பு T-20 தொடருக்காக பங்களாதேஷுக்கு அழைப்பு

656
Nidahas Trophy 2018

இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் முகமாக இலங்கை கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளசுதந்திரக் கிண்ணம்‘ (நிதஹஸ் குசலான) முத்தரப்பு T-20 தொடரில் பங்கேற்கவுள்ள பங்களாதேஷ் அணிக்கான உத்தியோகபூர்வ அழைப்பினை இலங்கை ஒரு நாள் மற்றும் T-20 அணியின் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் நேற்றுமுன்தினம்(14) விடுத்திருந்தார்.

இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் அணிகள் மோதும் முத்தரப்பு டி20 தொடர் கொழும்பில்

இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள்..

பங்களாதேஷ், ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முத்தரப்பு ஒரு நாள் போட்டித் தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது குறித்த தொடருக்கான அழைப்பினை விடுத்திருந்ததுடன், இரு அணிகளின் தலைவர்களாலும் விசேட வாழ்த்துச் செய்தியொன்றையும் இதன்போது வெளியிட்டிருந்தனர்.

இப்போட்டித் தொடருக்கான கூட்டு அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் மூன்று நாடுகளினதும் கிரிக்கெட் சபைகளின் தலைவர்களின் பங்கேற்புடன் கொழும்பில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் வைத்து அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இலங்கை கிரிக்கெட் சபை, இப்போட்டித் தொடருக்கான போட்டி அட்டவணையை கடந்த நவம்பர் மாதம் 18ஆம் திகதி வெளியிட்டது.

இந்நிலையில், முத்தரப்பு T-20 தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணிக்கான உத்தியோகபூர்வ அழைப்பினை இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற 3ஆவது ஒரு நாள் போட்டிக்கு முன்னர் இலங்கை T-20 அணியின் தலைவராகச் செயற்பட்ட திஸர பெரேரா விடுத்திருந்தார்.

இதன்போது குறித்த தொடருக்கான உத்தியோகபூர்வ காணொளி, இலட்சிணை என்பனவும் வெளியிடப்பட்டது. இரு அணிகளின் தலைவர்களும் விசேட வாழ்த்துச் செய்தியொன்றையும் இதன்போது ஊடகங்களுக்கு வெளியிட்டனர்.

பங்களாதேஷுக்கு எதிரான இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட் வாரியமானது (SLC) ஜனவரி…

இதன்படி இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் முத்தரப்பு T-20 தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 8ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

7 போட்டிகளைக் கொண்டதாக நடைபெறவுள்ள இப்போட்டித் தொடரில் விளையாடும் மூன்று அணிகளும் தங்களுக்குள் இரண்டு முறை மோதவுள்ளன. இதில் வெற்றி பெற்று முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதும்.

இந்நிலையில், இலங்கை மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளின் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் கருத்து வெளியிடுகையில், இந்தியா, பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இத்தொடரில் பங்கேற்பதன் மூலம் கிரிக்கெட்டிற்கான எமது கூட்டு உணர்வை வெளிப்படுத்துவதாக நான் உறுதியாக நம்புகிறேன். இந்த மூன்று நாடுகளும் கிரிக்கெட்டுக்கு ஒரேயளவான மதிப்புகளை வழங்கி வருகின்ற அதேநேரம், மரபுகளையும் தங்களுக்கிடையில் பகிர்ந்து கொள்கின்றன. நமது மனப்பாங்குகள், நம்பிக்கைகள் மற்றும் தன்மை ஆகியவை நமது கலாச்சாரத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை வரலாறுகள் சான்று பகர்கின்றன. எனவே இனம், மதம், மொழி மற்றும் அரசியலையும் கடந்து கிரிக்கெட் விளையாட்டால் எமது மக்கள் ஒன்றாக இணைந்துள்ளனர்” என அவர் தெரிவித்தார்.

சந்திமாலின் திறமையை நாம் இன்னும் பார்க்கவில்லை

கடந்த ஆண்டு சொந்த மண்ணில் நடந்த…

இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட பங்களாதேஷ் டெஸ்ட் மற்றும் T-20 அணியின் தலைவர் சகிப் அல் ஹசன் கூறுகையில், இலங்கை அணியின் அழைப்பை ஏற்றுக்கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைவதுடன், இத்தொடரில் விளையாடுவதற்கு ஆர்வமாக உள்ளேன். பங்களாதேஷ் அணிக்கு இத்தொடரில் பங்கேற்கபதற்கு அழைப்பு விடுத்தமை தொடர்பில் இலங்கை கிரிக்கெட்டுக்கு மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இத்தொடர் வெற்றிகரமான போட்டியாகவும் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.

முன்னதாக, இலங்கையின் 50ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 1998ஆம் ஆண்டு சுதந்திரக் கிண்ணம் என்ற பெயரில் முதற்தடவையாக கிரிக்கெட் தொடரொன்று தற்போதைய கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபாலவின் யோசனைக்கமைய ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அத்தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பங்கேற்றிருந்தன. அத்துடன் இறுதிப் போட்டியில் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை அணியை, 6 ஓட்டங்களால் இந்திய அணி வெற்றி கொண்டமை குறிப்பிடத்தக்கது.

எனினும், 1997ஆம் ஆண்டு இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சுதந்திர கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி சம்பியன் பட்டத்தை வென்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.