SAG போட்டிகளுக்கான இலங்கை கால்பந்து குழாம் அறிவிப்பு

114

நேபாளத் தலைநகர் கத்மண்டுவில் வரும் டிசம்பர் முதலாம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 2019ஆம் ஆண்டுக்கான தெற்காசிய விளையாட்டுப் போட்டிக்கான (SAG) இலங்கை கால்பந்து குழாமை இலங்கை கால்பந்து சம்மேளளம் வெளியிட்டுள்ளது.  

இலங்கை கால்பந்து அணியுடன் இணைகிறார் வசீம்

ஜேர்மனியில் தொழில்முறை கால்பந்து ஆடும் வசீம் ராசிக், இலங்கை தேசிய கால்பந்து…

தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை ஆடவர் மற்றும் மகளிர் கால்பந்து அணிகளை பதக்கம் வெல்ல முடியாத அணிகளாக விளையாட்டு அமைச்சு கருதுவதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையிலேயே இந்த விளையாட்டுப் போட்டிக்காக குழாமை இலங்கை கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது

கால்பந்து போட்டிகள் 23 வயதுக்கு உட்பட்ட அணிக்காக மட்டுப்படுத்தப்பட்டிருப்பதோடு அதற்கு மேற்பட்ட வயதுடைய மூன்று வீரர்களை குழாத்தில் சேர்க்க அனுமதி உள்ளது. தற்போதைய தேசிய அணித்தலைவர் மொஹமட் பசால், சிரேஷ்ட கோல்காப்பாளர் சுஜான் பெரேரா மற்றும் பின்கள வீரர் டக்சன் பியுஸ்லஸ் ஆகிய மூவரும் அதிக வயதுடைய வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்இவர்கள் மூவரும் தேசிய அணி வீரர்கள். இந்த அணியின் தலைவராகவும் பசால் பெயரிடப்பட்டுள்ளார்.   

இந்த சுற்றுப்பயணத்தில் ஆடவர் அணி வீரர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டு 20 வீரர்கள் மற்றும் 4 அதிகாரிகள் என பங்கேற்கின்றனர். இந்தக் குழாத்தில், தலைமை பயிற்சியாளர் நிசாம் பக்கீர் அலியுடன் முகாமையாளராக சுனில் சேனவீர செயற்படவுள்ளார்

2022 பிஃபா உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில் அங்கம் வகித்த கடந்த 20 மாதங்களாக பயிற்சி பெற்றுவந்த அணியில் இடம்பெற்றிருந்த வீரர்களே இந்தக் குழாத்திலும் அதிகமாக இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

இவர்களுக்கு மேலதிகமாக, கோல்காப்பாளர் நுவன் கிம்ஹான மற்றும் வட மாகாண வீரர்களான ஜோய் நிதுசன், அல்ப்ரட் தனேஷ் ஆகியோர் SAG தொடருக்கான குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.  

கட்டாரில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்ட AFC சம்பியன்ஷிப் தகுதிகாண் போட்டியில் சிறப்பாக ஆடிய 19 வயதுக்கு உட்பட்ட அணியின் தலைவர் ஷபீர் ரசூனியா மற்றும் இரண்டு கோல்களைப் பெற்ற மொஹமட் சாஜித் ஆகிய இருவரும் இந்த குழாத்தில் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.   

SAG போட்டிகளுக்கான குழாம்

மொஹமட் பசால் (தலைவர்), சுஜான் பெரேரா, டக்சன் பியுஸ்லஸ், நுவன் கிம்ஹான, பத்தும் விமுக்தி, திலிப் பீரிஸ், சமோத் டில்ஷான், மொஹமட் ஆகிப், ஜோய் நிதூசன், மொஹமட் இஷான், மொஹமட் முஷ்தாக், மொஹமட் ஷஹீல், அமான் பைசர், தனஞ்சய பெர்னாண்டோ, அல்ப்ரட் தனேஷ், சுந்தரராஜ் நிரேஷ், சசன்க டில்ஹார, நவீன் ஜூட், ஜூட் சுமன் 

>>மேலும் பல கால்பந்து  செய்திகளைப் படிக்க<<