அபோன்சோவின் பந்துவீச்சில் சுருண்ட தென்னாபிரிக்க வளர்ந்துவரும் அணியினர்

169
sl v sa

தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அபிவிருத்தி அணியினர்  முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க வளர்ந்துவரும் அணியுடன்  சென்வஸ் பார்க்  மைதானத்தில் மோதி வருகின்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க வளர்ந்துவரும்  அணியினர் தனது முதலாவது இன்னிங்ஸ் முடிவில் சகல விக்கட்டுகளையும் இழந்து 394 ஓட்டங்களைப் பெற்றனர்.

ஸ்மித் முதல் இனிங்ஸ் முடிவில் 13 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் அடங்கலாக 124 ஓட்டங்களைப் பெற்றார். தொடர்ந்து 2ஆவது இனிங்ஸில் களமிறங்கிய இலங்கை அபிவிருத்தி அணியினர்  315 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளயும் இழந்தனர் சதுரங்க ஆட்டமிழக்காமல் 86 ஓட்டங்களைக் குவித்தார்.

சந்துன் வீரக்கொடி 56 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் போர்டுன் பந்துவீச்சில் போல்ட் செய்யப்பட்டு ஆட்டமிழக்கப்பட்டார். போர்டுன் 103 ஓட்டங்களைக் கொடுத்து 7 விக்கட்டுகளைக் கைப்பற்றினார். சிக்கவிலி 90 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கட்டுகளைக் கைப்பற்றினார்.

3ஆவது நாளில் 2ஆவது இனிங்ஸைத் தொடர்ந்த தென்னாபிரிக்க வளர்ந்துவரும் அணியினர் அபோன்சோவின் பலத்த பந்துவீச்சில் 266 ஓட்டங்களுக்குள் சுருண்டனர்.

இதில் மீண்டும் ஸ்மித் 87, டு ப்ளூய் 53 ஓட்டங்களைப் பெற்றனர். பந்து வீச்சில் அமிலோ அபோன்சோ 112 ஓட்டங்களைக் கொடுத்து 8 விக்கட்டுகளைக் கைப்பற்றினார். 346 ஓட்ட இலக்கைக் கொண்டு மீண்டும் தனது 2ஆவது இனிங்ஸைத் தொடர்ந்தெ இலங்கை அபிவிருத்தி அணியினர் 2 விக்கட்டுகளை இழந்து 87 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் 3ஆவது நாள் நிறைவடைந்தது.

களத்தில் மிலந்த 35, புத்திகே 26 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இன்று போட்டியின் இறுதி நாள் எவ்வாறு அமையும் என்பதைப் பார்ப்போம்.

போட்டியின் சுருக்கம் :

தென்னாபிரிக்க வளர்ந்துவரும் அணி – 394

ஸ்மித் 124*, டு ப்ளூய் 46, கோமாரி 43, மகன்யா 30, குருக்கர் 59*

அமிலோ அபோன்சோ 5/95, விஜேரத்தன 2/76, சதுரங்க 1/92, புத்திக்க 1/29

இலங்கை அபிவிருத்தி அணியினர் – 315

சஞ்சய சதுரங்க 86*, சந்துன் வீரக்கொடி  56, அணுக் பெர்னாண்டோ 39

போர்டுன் 7/103, சிக்கவிலி 2/90, சிமித் 1/21

தென்னாபிரிக்க வளர்ந்துவரும் அணி – 266

ஸ்மித் 87 ,டு ப்ளூய் 53, கோமாரி 29, அக்கர்மன் 31

அமிலோ அபோன்சோ 8/112, பெர்னாண்டோ  1/19, புத்திக்க 1/66

இலங்கை அபிவிருத்தி அணியினர் –  87/2

மிலந்த 35*, புத்திகே 26*

போர்டுன் 1/42, சிக்கவிலி 2/14