பங்களாதேஷ் செல்லும் இலங்கை வளர்ந்து வரும் அணி

765

தென்னாபிரிக்க மண்ணில் முக்கோண ஒருநாள் தொடரை கைப்பற்றி, டெஸ்ட் தொடரை இழந்த இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணியானது தங்களுடைய அடுத்த கிரிக்கெட் பயணத்தில் பங்களாதேஷ் வளர்ந்துவரும் அணியை இம்மாத நடுப்பகுதியில் எதிர்கொள்ளவுள்ளது. 

பங்களாதேஷ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை வளர்ந்துவரும் அணி அங்கு பங்களாதேஷ் வளர்ந்துவரும் அணியுடன் மூன்று போட்டிகளை உள்ளடக்கிய ஒருநாள் தொடரிலும், நான்கு நாட்கள் கொண்ட இரு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடவுள்ளது. இதற்கான தொடர் அட்டவணை பங்களாதேஷ் கிரிக்கெட் சபையினால் வெளியிடப்பட்டுள்ளது

அசந்த டி மெல்லின் பதவிக்காலம் நீடிப்பு

இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுவில் ………

2019ஆம் ஆண்டுக்கான வளர்ந்துவரும் அணிகளுக்கிடையிலான ஆசிய கிண்ண தொடரானது டிசம்பரில் பங்களாதேஷில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தற்போது பங்களாதேஷ் செல்லவுள்ள இலங்கை வளர்ந்துவரும் அணிக்கு மூன்று ஒருநாள் போட்டிகளும் பயிற்சிக்காக சிறந்த களமாக அமையவுள்ளது. குறித்த சுற்றுப்பயணத்தில் நடைபெறவுள்ள டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் மூன்று மைதானங்களில் நடைபெறவுள்ளது.    

இலங்கை வளர்ந்துவரும் அணி இறுதியாக பங்களாதேஷ் வளர்ந்துவரும் அணியை கடந்த ஆண்டு (2018) நடைபெற்ற வளர்ந்துவரும் அணிகளுக்கிடையிலான ஆசிய கிண்ண தொடரின் அரையிறுதி போட்டியில் சந்தித்தது. இப்போட்டியில் இலங்கை வளர்ந்துவரும் அணி 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்து சம்பியன் பட்டத்தை வென்றது

இம்மாதம் 19ஆம் திகதி ஆரம்பமாகின்ற குறித்த சுற்றுப்பயணத்திற்காக இலங்கை வளர்ந்துவரும் அணி எதிர்வரும் 16ஆம் திகதி பங்களாதேஷ் நோக்கி பயணிக்கவுள்ளது. கிட்டத்தட்ட ஒரு மாதத்தின் பின்னர் அடுத்த மாதம் 7ஆம் திகதி இலங்கை வளர்ந்துவரும் அணி மீண்டும் தாயகம் திரும்பவுள்ளது.

இலங்கை வளர்ந்துவரும் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான சமிந்த வாஸ் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ப்ரெண்டன் மெக்கலம்

கிரிக்கெட் விளையாட்டில் டி20 போட்டி மற்றும் …….

சுற்றுப்பயணத்தின் போட்டி அட்டவணை 

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்

  • ஆகஸ்ட் 19 – முதலாவது ஒருநாள் போட்டிக்ரிரா ஷிக்கா ப்ரோடிஸ்தான்ஷவார்
  • ஆகஸ்ட் 21 – இரண்டாவது ஒருநாள் போட்டிக்ரிரா ஷிக்கா ப்ரோடிஸ்தான்ஷவார்
  • ஆகஸ்ட் 24 – மூன்றாவது ஒருநாள் போட்டிஷேக் அபு நஸீர் அரங்கம்குல்னா

2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 

  • ஆகஸ்ட் 27 முதல் 30 – முதலாவது டெஸ்ட் போட்டிஷேக் அபு நஸீர் அரங்கம்குல்னா
  • செப்டம்பர் 3 முதல் 6 – இரண்டாவது டெஸ்ட் போட்டிஷேக் கமால் சர்வதேச கிரிக்கெட் மைதானம்காஸ்க் பஸார் 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<