அஞ்சலோ பெரேரா தலைமையில் ஆசியக் கிண்ணத்திற்கு களமிறங்கும் இலங்கை இளையோர் அணி

352

அடுத்த வாரம் பங்களாதேஷில் ஆரம்பமாகவிருக்கும் 2017ஆம் ஆண்டிற்கான இளையோர் ஆசியக் கிண்ண சம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில், இலங்கை இளையோர் (Emerging) அணியினை தலைமையேற்று வழிநடாத்த மத்தியவரிசை துடுப்பாட்ட வீரரான அஞ்சலோ பெரேரா பெயரிடப்பட்டுள்ளார்.  

எட்டு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அணிகள் பங்குபெறும் இந்த ஒரு நாள் சுற்றுத் தொடரானது மார்ச் 27ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 3ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

அவுஸ்திரேலிய தொடரில் இலங்கை 19 வயதிற்கு உட்பட்ட அணிக்கு தலைவராக கமிந்து மெண்டிஸ்

அவுஸ்திரேலியா பயணிக்கவுள்ள 19 வயதிற்கு உட்பட்ட இலங்கை கனிஷ்ட அணியின் 15 பேர் கொண்ட குழாம் இன்று….

பெரும்பாலும் 23 வயதுக்குட்பட்ட வீரர்கள் பங்குபெறும் இத்தொடரில் டெஸ்ட் அந்தஸ்து கொண்ட நாடுகள் அந்தந்த நாடுகளின் தேசிய அணியிலிருந்து அதிகபட்சமாக வயது முதிர்ந்த நான்கு வீரர்களை இளையோர் குழாத்தில் இணைக்க ஆசிய கிரிக்கெட் வாரியம் (ACC) அனுமதி வழங்கியுள்ளது.  

அத்துடன், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு இராச்சியம் (UAE), ஹொங்ஹொங் மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் தங்கள் பலமிக்க தேசிய குழாத்தினை முழுமையாக இத்தொடரில் பங்கேற்க வைக்க முடியும் எனவும் ஆசிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இத்தொடரில் பங்கேற்கும் இலங்கை இளையோர் அணி, சனிக்கிழமை (25) பங்களாதேஷூக்கு புறப்படவுள்ளது.

அங்கு செல்லும் இலங்கை அணி முதலாவதாக, இந்தியாவுடன் நடைபெறும் போட்டியில் எதிர்வரும் 27ஆம் திகதி விளையாடவுள்ளது. அதனையடுத்து 28ஆம் மற்றும் 30ஆம் திகதிகளில் பங்களாதேஷ் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுடன் முறையே நடைபெறும் போட்டிகளில் மோதவுள்ளது. இலங்கை இளையோர் அணி மோதும் அனைத்து போட்டிகளும், சிட்டகொங் நகரில் நடைபெறவுள்ளன.

இத்தொடரினை நடாத்தும் அணியான பங்களாதேசுடன் பாகிஸ்தான், ஹொங்ஹொங் மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் B குழுவில் பலப்பரீட்சை நடாத்தவுள்ளன.  

இலங்கை தேசிய அணி வீரர்களில் அஞ்சலோ பெரேராவிற்கு மேலதிகமாக, தமிழ் யூனியன் கழகத்தின் தலைவர் கித்ருவான் விதானகே, சிலாபம் மேரியன்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஷெஹான் ஜயசூரிய மற்றும் றாகம  கழகத்தின் அமில அபொன்சோ ஆகியோர் இத்தொடரின் விதிமுறைகளுக்கு ஏற்ப 15 பேர் கொண்ட இலங்கை இளையோர் அணியில் சேர்க்கப்பட்ட மேலதிக வீரர்களாவர்.

திறமைமிக்க இளம் துடுப்பாட்ட வீரர்களான சதீர சமரவிக்ரம, லியோ பிரான்சிஸ்கோ, ரொன் சந்திரகுப்தா, அவிஷ்க பெர்னாந்து மற்றும் சரித் அசலன்க ஆகியோர் அணியின் துடுப்பாட்டத்தினை வலுப்படுத்த குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளதோடு, சகல துறை ஆட்டக்காரர்களான வனிது ஹஷரங்க மற்றும் சமிக்க கருணாரத்ன ஆகியோரும் அணிக்கு மேலும் துடுப்பாட்ட வலிமையை அதிகரிக்க உதவவுள்ளனர்.

இலங்கை அணியின் முன்னாள் தலைவரான ஹஷான் திலகரத்னவின் புதல்வர் துவிந்து திலகரத்ன அணியில் இளம் சுழல் பந்து வீச்சாளராக சேர்க்கப்பட்டுள்ளார். இலங்கை கனிஷ்ட அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான அனுக் பெர்னாந்து, அசித பெர்னாந்து மற்றும் லஹிரு சமரக்கோன் ஆகியோர் செயற்படவுள்ளனர்.

இறுதிப் போட்டியில் தர்ஸ்டன் கல்லூரியுடன் மோதவுள்ள ரிச்மண்ட் கல்லூரி

நாலந்த கல்லூரியை வெற்றியீட்டி இறுதிப் போட்டிக்கு தெரிவாகியது தர்ஸ்டன் கல்லூரி அதேநேரம்…

இலங்கை இளையோர் அணியின் பிரதான பயிற்சியளராக சுமித்ர வர்ணகுலசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். எனினும், தொடரிற்கான வீரர்கள் குழாத்தினை இலங்கை கிரிக்கெட் வாரியம் உத்தியோகபூர்வமாக இன்னும் அறிவித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை இளையோர் அணி

அஞ்சலோ பெரேரா (தலைவர்), கித்ருவான் விதானகே, ஷெஹான் ஜயசூரிய, அமில அபொன்சோ, அவிஷ்க பெர்னாந்து, சதீர சமரவிக்ரம, லியோ பிரான்சிஸ்கோ, ரொன் சந்திரகுப்தா, சரித் அசலன்க, வனிது ஹஸரங்க, அனுக் பெர்னாந்து, சமிக்க கருணாரத்ன, அசித பெர்னாந்து, லஹிரு சமரக்கோன், துவிந்து திலகரத்ன