ஒரு நாள் தரவரிசையில் இலங்கையை பின்தள்ளி 7ஆவது இடத்தை பிடித்த பங்களாதேஷ்

1380
ICC

அயர்லாந்தின் டப்ளின் நகரில் இடம்பெற்ற போட்டியொன்றில் சர்வதேச ஒரு நாள் தரவரிசைப் பட்டியலில் நான்காம் இடத்தில் இருக்கும் பலமிக்க நியூசிலாந்து அணியினை 5 விக்கெட்டுக்களால் வீழ்த்திய பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, ஐ.சி.சி இன் ஒரு நாள் தரவரிசைப் பட்டியலில் முதல்தடவையாக ஆறாவது இடத்திற்கு முன்னேறி புதிய சாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளது.

சந்தகனின் அபாரப் பந்துவீச்சால், ஸ்கொட்லாந்தை வீழ்த்திய இலங்கை

சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளுக்காக இங்கிலாந்து பயணித்திருக்கும்..

பங்களாதேஷ் அணி, இந்த வெற்றி மூலம் ஒரு நாள் தரவரிசையில் ஆறாம் இடத்தில் இருந்த இலங்கை அணி பெற்றிருக்கும் 93 புள்ளிகளை பெற்று சமநிலை அடைந்துள்ளது. இருப்பினும், புள்ளிகளை சரியான தசம அடிப்படையில் நோக்குமிடத்து பங்களாதேஷ் பெற்ற புள்ளிகள் 93.3 ஆகவும் இலங்கை அணி பெற்ற புள்ளிகள் 92.8 ஆகவும் இருப்பதால், இலங்கை அணியை பங்களாதேஷ் ஏழாம் இடத்திற்கு பின்தள்ளியுள்ளது.

உலகின் முன்னாள் சம்பியன் அணிகளான இலங்கை, பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகியவற்றை ஒரு நாள் தரவரிசைப் பட்டியலில் பங்களாதேஷ் அணி பின்தள்ளுவது இதுவே வரலாற்றில் முதற்தடவையாகும்.

இந்த விரைவான தரவரிசைப் பட்டியல் மாற்றம் மூலம் உலகின் ஆறாம் நிலைக்குரிய அணியாக மாறியிருக்கும் பங்களாதேஷ், வரும் ஜுன் முதலாம் திகதி முதல் நடைபெறவிருக்கும் .சி.சி சம்பியன்ஸ் கிண்ணத்தில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் போன்ற அணிகளை விட முனைப்பாகவும் உற்சாகத்தோடும் சிறப்பாக செயற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பங்களாதேஷ் அணியானது தற்போது, ஒரு நாள் தரவரிசையில் 8ஆம் இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணியினை விட 5 புள்ளிகள் முன்னிலையில் இருக்கின்றது. அதேபோன்று, 9ஆம் இடத்தில் இருக்கும் மேற்கிந்திய தீவுகளை விட 14 புள்ளிகள் முன்னிலை பெற்றிருக்கின்றது.

எதிர்வரும் 2019ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்திற்கு நேரடித் தகுதி பெறும் அணிகள் யார் என்பதை தெரிவு செய்யும் இறுதி திகதியாக 2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் 30ஆம் திகதி இருக்கின்றது.

இவ்வாறான ஒரு நிலையில், உலகக் கிண்ணத் தொடரை நடாத்தும் இங்கிலாந்துடன் சேர்த்து அடுத்த உலக கிண்ணத்திற்கு தெரிவாகக் கூடிய முதல் 7 அணிகளுள் உறுதியான ஒரு அணியாக பங்களாதேஷ் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.rankings