இலங்கை உள்ளூர் பருவகால கிரிக்கெட் போட்டிகள் டிசம்பர் முதல்

206

ஆறு மைதானங்களில் நடைபெறவிருக்கும் பிரீமியர் லீக் பிரிவு A தொடருடன் டிசம்பர் முதலாம் திகதி 2017/18 பருவகாலத்துக்கான உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை ஆரம்பிக்க இலங்கை கிரிக்கெட் சபை (SLC) அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

2016/17 பிரீமியர் லீக் பிரிவு A தொடரில் SSC விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றதோடு அந்த தொடரில் கடைசி இடத்தைப் பிடித்த காலி விளையாட்டு கழகம் B பிரிவுக்கு தரமிறக்கப்பட்டுள்ளது. அதேபோன்று பாணந்துறை – களுத்துறை கழகங்களுக்கிடையிலான போட்டி ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு மீதான தீர்ப்புக்கு பின் B பிரிவு புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம் A பிரிவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.   

இதன்படி பிரிவு A போட்டித் தொடரில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்பதோடு அவை இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அணியும் தலா ஆறு போட்டிகளில் விளையாடவுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சுப்பர் எட்டு (Super 8) தொடருக்கு தெரிவாகும். அது நான்கு நாள் போட்டிகளாக நடைபெற வாய்ப்புள்ளது. குழு நிலையில் கடைசி இடங்களைப் பிடிக்கும் ஆறு அணிகளும் பிளேட் சம்பியன்சிப் போட்டிகளில் மோதவுள்ளன. இதில் கடைசி இடத்தைப் பிடிக்கம் அணி தரமிறக்கப்படும்.  

B பிரிவில் பங்கேற்கும் மொத்தம் 10 அணிகளும் டிசம்பர் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் ஆரம்பமாகும் போட்டிகளில் ஒவ்வொரு அணிகளுடனும் தலா ஒரு தடவை மோதவுள்ளன. ஒன்பது வாரப் போட்டிகளுக்கு பின் அதிக புள்ளிகளை பெறும் அணி சம்பியனாக முடிசூடப்படும். அந்த அணி அடுத்த பருவத்தில் முதல் நிலைக்கு தரமுயர்த்தப்படும்.

நிரோஷன் திக்வெல்லவை பாராட்டிய இந்திய அணித் தலைவர் கோஹ்லி

முதல்தர கிரிக்கெட் போட்டிகளுக்கான அந்தஸ்த்தை பெற்றிருக்கும் மொத்தம் 24 அணிகளிலும் சராசரியாக உள்ள 450–500 வீரர்களும் தமது கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடவுள்ளனர்.

50 ஓவர்கள் தொடர் மற்றும் T20 தொடர் ஆகியன முதலில் கழக போட்டித் தொடர், இரண்டாவது மாகாணத் தொடராக இடம்பெறவுள்ளது. எனினும் 24 கழக அணிகளும் ஆறு அணிகள் கொண்ட நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவதே ஒரே மாற்றமாகும்.

உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளுக்கு பொறுப்பான இலங்கை கிரிக்கெட் சபையின் துணைத் தலைவர் கே. மதிவானன் கூறியதாவது, “கடந்த ஆண்டுகளைப் போலல்லாது இம்முறை நாம் ஆரம்பத்தில் சிவப்பு பந்தில் (முதல்தர போட்டி) விளையாடுவோம். அதனைத் தொடர்ந்து வெள்ளை பந்தில் (List A) போட்டி இடம்பெறும். ஒரு ஒழுங்கற்ற முறையில் ஒருகைப் போட்டியில் இருந்து மற்ற வகைக்கு மாற்ற நாம் விரும்பவில்லை. இது வீரர்கள் சிறப்பான முறையில் கவனம் செலுத்த வாய்ப்பை ஏற்படுத்தும்” என்றார்.

நான்கு அணிகள் கொண்ட சுப்பர் மாகாண தொடர் 2017/18 பருவத்தில் அதிக அவதானத்தை பெறும் தொடராக அமையவுள்ளது. இதில் 60–65 முன்னனி வீரர்கள் மாத்திரமே பங்கேற்பார்கள். கழக போட்டிகளில் வெளிக்காட்டும் திறமையின் அடிப்படையில் தேசிய தேர்வாளர்களால் இந்த வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பிறந்த இடம், பாடசாலை மற்றும் தற்போது தொழில்புரியும் இடம் ஆகியவற்றின் அடிப்படையில் வீரர்கள் – கொழும்பு (கொழும்பு, கம்பஹா, களுத்துறை), காலி (காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, மொனராகலை, இரத்தினபுரி, பதுள்ளை), கண்டி (திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, கண்டி, நுவரெலியா, கேகாலை) மற்றும் தம்புள்ளை (யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், அநுராதபுரம், பொலன்னருவை, புத்தளம், குருணாகலை, மாத்தளை) ஆகிய நான்கு அணிகளாக பிரிக்கப்படுகின்றனர்.   

இம்முறை போட்டித் தொடரின் முக்கிய ஒரு அம்சமாக மாகாண நான்கு நாள் தொடரின்போது இளஞ்சிவப்பு பந்து (Pink Ball) அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதில் ஒர் அணிக்கு மின்னொளியில் தலா ஒரு போட்டி வீதம் வழங்கப்பட்டுள்ளது.    

உள்ளூர் வீரர்களின் திறமைகளில் அவதானம் செலுத்தியே இலங்கை கிரிக்கெட் சபை மாகாண போட்டித் தொடர்களை முன்னர் நடத்தியது. அவ்வாறான போட்டிகளை தொடர்வதில் பிரச்சினை நீடித்து வருகிறது. கடந்த பருவத்தில் மாகாண மட்ட நான்கு நாள் தொடர் சம்பியன்ஸ் கிண்ணத்திற்கு வீரர்களை தயார்படுத்தும் வகையில் 50 ஓவர்கள் தொடராக மாற்றப்பட்டது.

இலங்கை உள்ளூர் கிரிக்கெட்டின் தரத்தை உயர்த்துவதற்கு இந்த பருவத்தில் கீழ்வரும் அம்சங்கள் தொடர்பில் முக்கிய அவதானம் செலுத்தப்படவுள்ளது.

ஆடுகளங்கள்

தரமான ஆடுகளங்களை தயாரிக்க உதவியாக அனைத்து மைதானங்கள் மற்றும் கழகங்களுக்கு ஆடுகளத்தை சீர் செய்யும், உலகத் தரம் வாய்ந்த ரோலர்கள் மற்றும் ஏனைய உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. எனினும் கழகங்கள் விளையாட்டுக்கு உகந்த ஆடுகளங்களை தயாரிக்குமா அல்லது தனது பந்துவீச்சாளர்களுக்கு பலம் சேர்க்கும் வகையில் வெற்றி பெறுவதற்கான ஆடுகளத்தை தயாரிக்குமா? என்பது பிரதான கேள்வியாகும்.

டெஸ்ட் தரவரிசையில் திக்வெல்ல, தில்ருவன், கோஹ்லி முன்னேற்றம்

கடந்த பருவகால பிரீமியர் லீக் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் 15 வீரர்களில் 14 பேர் சுழல்பந்து வீச்சாளர்களாவர். சுழல் வீரர்களுக்கு கழக போட்டிகளில் அதிக முக்கியத்துவம் வழங்கப்படும் நிலையில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை இலங்கை எப்படி உருவாக்க முடியும்? இலங்கை ஒரு சலதுறை அணியை உருவாக்க வேண்டுமாயின் இந்த ஆடுகளங்கள் பற்றி இலங்கை கிரிக்கெட் சபை அதிக கவனம் செலுத்த வேண்டும்.     

பார்வையாளர் வருகை

இலங்கையின் உள்ளூர் போட்டிகள் பெரும்பாலும் அதிக அவதானத்தை பெறாமலேயே நடைபெறுகிறது. ஏனெனில் இந்த போட்டிகள் உலகெங்கும் நடைபெறும் உள்ளூர் ஆட்டங்களை விடவும் குறைந்த அளவே கவர்ச்சியை பெற்றுள்ளது. செயல்திறனற்ற சந்தைப்படுத்தல் உத்திகள் மற்றும் சிலேவேளை போதிய போட்டிப் பண்புகள் இன்மை காரணமான மைதான ஊழியர்களை விடவும் குறைவான பார்வையாளர்களே உள்ளூர் போட்டிகளை பார்வையிடுகின்றனர்.  

இலங்கை கிரிக்கெட் சபை ஒவ்வொரு கழகங்களுடனும் இணைந்து பரந்த அளவில் பிரசாரங்களை நடத்தி ரசிகர்களின் எண்ணிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதோடு அவ்வாறான உறுதியான ரசிகர் கலாச்சாரம் ஒன்றையும் உருவாக்க வேண்டும். பாடசாலைகளின் பிக் மெட்ச் போட்டிகளை அயிரக்கணக்கானோர் ஏன் சென்று பார்க்கிறார்கள்? காரணம் எளிதானது, ஏனென்றால் தமது பாடசாலை மீதான விசுவாசம் மற்றும் களியாட்ட சூழல் அங்கு நிலவுகிறது. இது மிக விரைவாக சாதிக்க முடியுமான விடயம் ஒன்றல்ல. என்றாலும் குறைந்தது நூறு பார்வையாளர்களையேனும் வரவைப்பது உள்ளூர் கிரிக்கெட் சூழலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும்.     

தொழில்சார் தரம்

அனைத்து டெஸ்ட் விளையாடும் அணிகளையும் ஒப்பிடும்போது இலங்கையில் உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் பெரும்பாலும் குறைந்த ஊதியம் பெறும் தொழில்சார் வீரர்களாவர். இந்த ஆண்டிலும் 100 வரையான வீரர்கள் A மற்றும் B நிலை போட்டிகளுக்கு பதிலாக அதிக இலாபம் தரும் ஒப்பந்தம் ஒன்றுக்காக அவுஸ்திரேலியாவை நோக்கி பயணித்துள்ளனர்.

கொழும்பில் உள்ள வசதி படைத்த கழகங்கள் பருவங்களுக்கு வெவ்வேறான ஒப்பந்தங்கள் செய்து முக்கிய வீரர்களை தக்கவைத்துக்கொண்டுள்ளன. எனவே போதிய பொருளாதார வசதி இல்லாத கழகங்களுக்கு என்ன நடக்கும்? தமது கிரிக்கெட்டை தொடர 24 கழகங்களும் போதிய பணம் ஈட்டுவதை இலங்கை கிரிக்கெட் சபை உறுதி செய்ய வேண்டும்.