ஹொங் கொங் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தெரிவாகிய இலங்கை

151
Sri Lanka v Hong Kong - 10th Asian Youth Netball Championship

பத்தாவது ஆசிய இளையோர் வலைப்பந்து (NETBALL)  சம்பியன்ஷிப் போட்டிகளில், ஹொங் கொங் அணியுடனான போட்டியில் 60-45 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்ற இலங்கை அணி தொடரின் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது.

கொரியா, ஜியோனுவில் மே 6ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை நடைபெற்று வரும் ஆசிய சம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கு கொள்ளும் அணிகள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதில் இலங்கை அணி A குழுவில் இடம்பெற்றுள்ளது.  

Sri Lanka rout Maldives in Asian Youth Netball Championship

Sri Lanka registered another massive 86-14 win against Maldives in their group A match in the 10th Asian Youth Netball Championship in Jeonju, South Korea. Sri Lanka shrugged off their shock opening day defeat against Thailand to secure a dominant 93-6 win against Pakistan in the 10th Asian Youth Netball Championship…

அந்த வகையில் A குழுவில் இலங்கை அணி உள்ளடங்கலாக தாய்லாந்து, பாகிஸ்தான் மாலைதீவுகள் மற்றும் ஹொங் கொங் ஆகிய அணிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதேவேளை, B குழுவில் மலேசியா, சிங்கப்பூர், சைனிஸ் தாய்பேய், இந்தியா மற்றும் கொரிய அணிகள் உள்வாங்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில் தாய்லாந்து அணியை வெற்றி கொண்டு சம்பியன் பட்டத்தை சுவீகரிதிருத்திருந்த இலங்கை அணி, இம்முறை தாய்லாந்து  அணியுடனான முதல் போட்டியில் 48-53 என்ற புள்ளிகள் அடிப்படையில் அதிர்ச்சித் தோல்வியுற்றது. அதன் காரணமாக, குழு மட்டப் போட்டிகளில் நடப்புச் சம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொள்ளவது இலங்கைக்கு சவாலாக இருந்தது.

எனினும், ஹொங் கொங் அணி தாய்லாந்து அணியை வெற்றியீட்டியது. அந்த வகையில், பாகிஸ்தான் மற்றும் மாலைதீவுகள் அணிகளுடனான வெற்றிக்கு பின்னர், அரையிறுதிப் போட்டிக்கு தகுதியீட்ட ஹொங் கொங் அணியுடான போட்டியில் கட்டயாம் வெற்றி பெற்றாக வேண்டிய நிலையில் இலங்கை அணி இருந்தது.

இந்நிலையில் அவ்வணியுடனான போட்டியின் ஆரம்பம் முதல் சிறப்பாக விளையாடிய இலங்கை அணி, முதல் காலிறுதி நேரத்தில் 18-10 என்ற புள்ளிகள் அடிப்படையில் முன்னிலை பெற்றிருந்தது. அதையடுத்து இரண்டாவது காலிறுதி நேரத்தில் ஒரு கட்டத்தில்  24-14 என முன்னிலை பெற்றிருந்த போதிலும் கடும் போட்டிக்கு மத்தியில் முதல் பாதி நேரம் 29-21 என்ற புள்ளிகள் அடிப்படையில் நிறைவுற்றது.

மூன்றாவது காலிறுதி நேரத்தில் சிறப்பாக விளையாடிய இலங்கை, கிடைக்கப்பெற்ற அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொண்டதுடன் 14 புள்ளிகளுடன் முன்னிலை பெற்றது. அதனையடுத்து, இறுதியாக நடைபெற்ற நான்காவது காலிறுதி நேரத்திலும் 14-13 என்ற புள்ளிகள் அடிப்படையில் முன்னிலை பெற்று மொத்தமாக 60-45 என்ற புள்ளிகள் அடிப்படையில் இலங்கை அணி வெற்றியை பதிவு செய்துகொண்டது.  

இலங்கை வலைப்பந்து அணி சார்பாக மீண்டுமொருமுறை திறமைகளை வெளிப்படுத்தியிருந்த கவீனா ராஜபக்ஷ 47 சூட்களையும் 100% சரியாகப் பயன்படுத்திக்கொண்டார் . அதேவேளை, ரஷ்மி திவஞ்சாலியும் 19 சூட்களில் 13 புள்ளிகளை பெற்றிருந்தார்.

அந்த வகையில், எதிர்வரும் 12ஆம் திகதி, பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டியில் சிங்கப்பூர் அணியை இலங்கை அணி எதிர்கொள்ளவுள்ளது. அதேநேரம், மலேசியா மற்றும் ஹொங் கொங் அணிகளுக்கிடையிலான அரையிறுதிப் போட்டியும் நடைபெறவுள்ளது.

குழு A P W L GF GA Goals % Points
இலங்கை 4 3 1 287 118 243% 6
ஹொங் கொங் 4 3 1 232 111 209% 6
தாய்லாந்து 4 3 1 218 136 160% 6
மாலைதீவுகள் 4 1 3 105 214 49% 2
பாகிஸ்தான் 4 0 4 24 287 8% 0
குழு B P W L GF GA Goals % Points
மலேசியா 3 3 0 215 99 217% 6
சிங்கப்பூர் 4 3 1 237 74 320% 6
இந்தியா 4 2 2 142 146 97% 2
சைனீஸ் தாய்ப்பேய் 4 1 3 143 227 63% 2
தென் கொரியா 3 0 3 48 239 20% 0