தனுஷ்க குணதிலக்க மீதான போட்டித் தடையில் மாற்றம்

2582
Sri Lanka Cricket revise ban on Danushka Gunathilaka

ஒழுக்க விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக இலங்கை அணியின் நட்சத்திர இடதுகை ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்கவிற்கு விதிக்கப்பட்ட ஆறு போட்டிகளுக்கான தடை மற்றும் அபராதம் என்பவற்றைத் தளர்த்துவதற்கு இலங்கை கிரிக்கெட் சபையின் நிறைவேற்றுக் குழு தீர்மானித்துள்ளது.

இந்தியாவுக்கு எதிரான தொடரின்போது காலைப் பயிற்சிக்கு சமூகமளிக்காத தனுஷ்க குணதிலக்க, பிறிதொரு சந்தர்ப்பத்திலும் ஒழுக்க விதிகளை மீறியுள்ளர். இது இலங்கை கிரிக்கெட் நிறுவன ஒழுக்க விதிமுறைகளில் 30ஆவது சரத்தை மீறிய குற்றமாகும். இதன் காரணமாக உடன் அமுலுக்கு வரும் வகையில் அவருக்கு 6 சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு தடையும், ஆண்டு ஒப்பந்த தொகையில் இருந்து 20 சதவீத அபராதமும் விதிக்க இலங்கை கிரிக்கெட் சபையின் நிறைவேற்றுக்குழு கடந்த 5ஆம் திகதி நடவடிக்கை எடுத்தது.

லாஹூரில் இலங்கையின் T20 உறுதி

பாகிஸ்தானின், லாஹூர் கடாபி மைதானத்தில் ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி நடைபெற …

இதனையடுத்து குறித்த தடைக்கு எதிராக மேன்முறையீடு செய்வதற்கு தனுஷ்க பிரிதிநிதித்துவப்படுத்துகின்ற சிங்களீஸ் கிரிக்கெட் கழகம் (SSC) நடவடிக்கை எடுத்தது.

இந்நிலையில், குறித்த மேன்முறையீட்டை நேற்று (16) இடம்பெற்ற இலங்கை கிரிக்கெட் நிறைவேற்றுக்குழு கூட்டத்தின்போது பரீசிலிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்போது தனுஷ்கவின் போட்டித் தடையை 3 போட்டிகளாக குறைப்பதற்கும், 20 சதவீத அபராதத்தை அறவிடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும், எதிர்வரும் ஒரு வருட காலப்பகுதியில் மீண்டும் ஒருமுறை இவ்வாறு ஒழுக்க விதிமுறைகளை மீறினால் தனுஷ்கவுக்கு மீண்டும் போட்டித்தடை விதிக்க முடியும் எனவும் இலங்கை கிரிக்கெட் சபை நிறைவேற்றுக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் தற்போது நடைபெற்றுவருகின்ற 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி இரு போட்டிகளிலும் தனுஷ்க குணதிலக்கவிற்கு விளையாடுவதற்கான வாய்ப்பு கிட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.