12 வருடங்களின் பின்னர் பொதுக் கூட்டம் நடாத்திய இலங்கை கிரிக்கெட் சபை

1028
Office-Bearers-and-ExCO

இலங்கை கிரிக்கெட் சபையானது 12 வருடங்களுக்குப் பின்னர் முதல் தடவையாக, தமது வருடாந்த பொதுக் கூட்டத்தை நேற்று நடாத்தியுள்ளது. இதில் மொத்தமாக உள்ள 84 பங்குதாரர்களில் 76 பேர் பங்குகொண்டனர்.

சொந்த செலவில் இங்கிலாந்து செல்லும் இலங்கை கிரிக்கெட் சபை நிர்வாகக் குழு உறுப்பினர்கள்

இலங்கை கிரிக்கெட் சபையின் துணைத் தலைவர் ஜயந்த தர்மதாச..

இலங்கை கிரிக்கெட் சபையின் தலைமையகத்தில் அவரசமாக நடைபெற்ற இந்த பொதுக் கூட்டத்தில், உறுப்புரிமையுடைய அனைவரதும் இணக்கத்துடன் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1) விஷேட தீர்மானம் I – பாடசாலை கிரிக்கெட் சங்கம் உருவாக்கம் (வரைபு 22 L)

பாடசாலை கிரிக்கெட் சங்கம் பின்வரும் உறுப்பினர்களை உள்ளடக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

  • பாடசாலை கிரிக்கெட் சங்க தலைவர்
  • பாடசாலை கிரிக்கெட் சங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட இரண்டு நபர்கள்
  • பாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் உதவிச் செயலாளர்.
  • பாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் உதவிப் பொருளாளர்
  • இலங்கை கிரிக்கெட் சபையின் பொதுக் கூட்டத்தின் பின்னர் மேலும் மூன்று உறுப்பினர்களை தெரிவு செய்தல்

2) விஷேட தீர்மானம் II – இலங்கை கிரிக்கெட் சபையின் நிறைவேற்றுக் குழுவிற்கு பெண்கள் கிரிக்கெட் பிரதிநிதித்துவம் ஒன்றை இணைத்தல் (வரைபு 12 (a) X). மகளிர் கிரிக்கெட் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர் ஒருவரையே இலங்கை கிரிக்கெட் சபையின் நிறைவேற்றுக் குழுவின் உறுப்பினராக சேர்க்கப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

குல்னா டைட்டன்ஸ் தலைமை பயிற்றுவிப்பாளராக மஹேல

இலங்கை அணியின் முன்னாள் அணித் தலைவர் மஹேல ஜயவர்தன பங்களாதேஷ்..

3) விஷேட தீர்மானம் III – இலங்கை கிரிக்கெட் சபையின் சொத்து மேலாண்மை நிறுவனம் உருவாக்கம்

M/s KPMG Ltd நிறுவனம் மற்றும் திருமதி நித்தி முருகேசுவின் பரிந்துரைக்கமைய, இலங்கை கிரிக்கெட் சொத்து மேலாண்மை என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை அமைத்து, அதனூடாக இலங்கை கிரிக்கெட் சபையின் மூலோபாய அபிவிருத்தித் திட்டங்களை கொண்டுசெல்வதற்கு நிறைவேற்றுக் குழுவில் தீர்மானிக்கப்பட்டது.