இலங்கை கிரிக்கெட் விருதுகளில் மாலிங்க, திசர, சமரிக்கு அதிக விருதுகள்!

91

இலங்கை கிரிக்கெட்டில் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்களை கௌரவிக்கும் வகையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் நடாத்தப்படுகின்ற “இலங்கை கிரிக்கெட் விருதுகள்” விழாவில் 2018-19ம் ஆண்டுக்கான சிறந்த வீரருக்கான விருது வழங்கப்படவில்லை.

இலங்கை கிரிக்கெட் விருதுகள் வழங்கும் நிகழ்வின் கடந்த 5 வருடங்களில் ஆண்டின் சிறந்த வீரர் விருதுகளை ரங்கன ஹேரத் இரண்டு தடவைகளும், அஞ்செலோ மெதிவ்ஸ் மூன்று தடவைகளும் வெற்றிக்கொண்டிருந்த நிலையில், ஆறாவது முறையாக நடைபெற்ற இந்த ஆண்டுக்கான சிறந்த வீரருக்கான விருது வழங்கப்படவில்லை.  

கிரிக்கெட் விருது வழங்கும் விழாவில் ஹேரத், அசேலவுக்கு அதிக கௌரவம்

இலங்கை கிரிக்கெட் அணிக்கு இவ்வருட இறுதியில் ………

உள்ளூர் மற்றும் சர்வதேச அரங்கில் திறமைகளை வெளிப்படுத்திய வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விருது வழங்கும் விழா நேற்று (03) பத்தரமுல்லையில் உள்ள வோர்டஸ் ஏட்ஜ் ஹோட்டலில் மிகவும் விமர்சையாக இடம்பெற்றது. இதன்போது 48 விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.

இதில், சர்வதேச வீரர்களுக்கான விருதுகளில் இலங்கை அணியின் முன்னணி அனுபவ வீரர்களான லசித் மாலிங்க மற்றும் திசர பெரேரா ஆகியோர் அதிகபட்சமாக தலா இவ்விரண்டு விருதுகளை தட்டிச்சென்றனர். அத்துடன், மகளிருக்கான சர்வதேச விருதுகளில் சமரி அதபத்து 3 விருதுகளை வென்றதுடன், சஷிகலா சிறிவர்தன 2 விருதுகளை பெற்றுக்கொண்டார்.

லசித் மாலிங்க சிறந்த ஒருநாள் மற்றும் T20I  பந்துவீச்சாளர் விருதுகளை வெற்றிக்கொண்டதுடன், திசர பெரேரா சிறந்த ஒருநாள் சகலதுறை வீரர் மற்றும் சிறந்த T20I துடுப்பாட்ட வீரருக்குமான விருதினை வெற்றிக்கொண்டார். 

சமரி அதபத்து சிறந்த ஒருநாள், T20I துடுப்பாட்ட வீராங்கனை மற்றும் ஒருநாள் சகலதுறை வீராங்கனை என்ற மூன்று விருதுகளை வென்றதுடன், சஷிகலா சிறிவர்தன சிறந்த T20I பந்துவீச்சு மற்றும் சகலதுறை வீராங்கனைக்கான விருதை பெற்றுக்கொண்டார். 

இதேவேளை, சிறந்த டெஸ்ட் துடுப்பாட்ட வீரருக்கான விருதினை இலங்கை அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன வென்றதுடன், டெஸ்ட் பந்துவீச்சாளராக டில்ருவான் பெரேராவும், டெஸ்ட் சகலதுறை வீரராக தனன்ஜய டி சில்வாவும் தெரிவுசெய்யப்பட்டனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் உடற்பயிற்சி நிபுணராக டில்சான் பொன்சேக்கா

பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் ………

ஒருநாள் போட்டிகளின் சிறந்த துடுப்பாட்ட வீரராக குசல் பெரேரா தெரிவுசெய்யப்பட்டதுடன், T20I போட்டிகளுக்கான சகலதுறை வீரருக்கான விருது இசுரு உதானவுக்கு வழங்கப்பட்டது.

இவற்றுக்கு அடுத்தப்படியாக வழங்கப்பட்ட முக்கிய விருதுகளில் வளர்ந்து வரும் வீரருக்கான விருதினை என்.சி.சி. கழகத்தின் பெதும் நிஸ்ஸன்க பெற்றுக்கொண்டதுடன், சிறந்த சர்வதேச நடுவருக்கான விருது குமார் தர்மசேனவுக்கு வழங்கப்பட்டது. அத்துடன், வாழ்நாள் சாதனையாளர்களுக்கான விருது கே.எம். நெல்சன், நுஷ்கி மொஹமட், லூசியன் மெரின்னகே மற்றும் பேர்சி அபேசிங்க ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Photos: Sri Lanka Cricket Awards 2018/19

விருதுகள் 

மகளிர் கிரிக்கெட் டிவிஷன் 1 (50 ஓவர்கள்) விருதுகள்

  • சிறந்த துடுப்பாட்ட வீராங்கனை – யசோதா மெண்டிஸ் (விமானப்படை விளையாட்டு கழகம்)
  • சிறந்த பந்துவீச்சாளர் – இனோகா ரணவீர (கடற்படை விளையாட்டு கழகம்)
  • சிறந்த சகலதுறை வீராங்கனை – சமரி பொல்கம்பல (விமானப்படை விளையாட்டு கழகம்)
  • இணை சம்பியன்கள் – சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம், கடற்படை விளையாட்டு கழகம்

மேஜர் லீக் டியர் பி – 2018-19 விருதுகள்

    • சிறந்த துடுப்பாட்ட வீரர் – தமித் பெரேரா (குருணாகல்  YCC)
    • சிறந்த பந்துவீச்சாளர் – திமுத் ஹெட்டியாராச்சி (பொலிஸ் விளையாட்டு கழகம்)
    • சிறந்த சகலதுறை வீரர் – கீத் குமார (லங்கன் கிரிக்கெட் கழகம்)
    • இரண்டாவது இடம் – கடற்படை விளையாட்டு கழகம்
    • சம்பியன்ஸ் – லங்கன் கிரிக்கெட் கழகம்
  • வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர் – 2018-19 – பெதும் நிசாங்க

SAG கிரிக்கெட்: சம்மு அஷானின் அதிரடியோடு இலங்கை வெற்றி

நேபாளத்தின் கத்மண்டுவில் இடம்பெறும் ……..

மேஜர் லீக் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் விருதுகள் 2018-19

  • சிறந்த துடுப்பாட்ட வீரர் – சச்சித்ர சேனாநாயக்க (எஸ்.எஸ்.சி. கழகம்)
  • சிறந்த பந்துவீச்சாளர் – நிசான் பீரிஸ் (றாகம கிரிக்கெட் கழகம்)
  • சிறந்த சகலதுறை வீரர் – சச்சித்ர சேனாநாயக்க (எஸ்.எஸ்.சி. கழகம்)
  • இரண்டாவது இடம் – கொழும்பு கிரிக்கெட் கழகம்
  • சம்பியன்ஸ் – எஸ்.எஸ்.சி. கழகம்

மேஜர் T20 – 2018-19 விருதுகள்

  • சிறந்த துடுப்பாட்ட வீரர் – தினேஷ் சந்திமால் (என்.சி.சி. கழகம்)
  • சிறந்த பந்துவீச்சாளர் – மலிந்த புஷ்பகுமார (கொழும்பு கிரிக்கெட் கழகம்)
  • சிறந்த சகலதுறை வீரர் – சீகுகே பிரசன்ன (இராணுவப்படை கிரிக்கெட் கழகம்)
  • இரண்டாவது இடம் – என்.சி.சி. கழகம்
  • சம்பியன்ஸ் – சோனகர் கிரிக்கெட் கழகம்

மேஜர் லீக் டியர் ஏ 2018-19 விருதுகள்

  • சிறந்த துடுப்பாட்ட வீரர் – ஓசத பெர்னாண்டோ (சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம்)
  • சிறந்த பந்துவீச்சாளர் – மலிந்த புஷ்பகுமார (கொழும்பு கிரிக்கெட் கழகம்)
  • சிறந்த சகலதுறை வீரர் – சச்சித்ர சேரசிங்க (தமிழ் யூனியன் கழகம்)
  • இரண்டாவது இடம் – செரசன்ஸ் கிரிக்கெட் கழகம்
  • சம்பியன்ஸ் – கொழும்பு கிரிக்கெட் கழகம்

நடுவர்களுக்கான விருதுகள்

  • சிறந்த சர்வதேச நடுவர் – குமார் தர்மசேன 
  • சிறந்த உள்ளூர் நடுவர் 2018-19 – லிண்டன் ஹெனிபல்
  • சிறந்த உள்ளூர் போட்டி மத்தியஸ்தர் – மனோஜ் மெண்டிஸ்

ஊடகவியலாளருக்கான விருதுகள்

  • சிறந்த ஊடகவியலாளருக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது (அச்சு ஊடகம்) – சம்மி அமித்
  • சிறந்த ஊடகவியலாளருக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது (இலத்திரனியல்) – கமல் தேசப்பிரிய

மகளிருக்கான சர்வதேச விருதுகள்

  • சிறந்த துடுப்பாட்ட வீராங்கனை (ஒருநாள்) – சமரி அதபத்து
  • சிறந்த பந்துவீச்சாளர் (ஒருநாள்) – ஓசதி ரணசிங்க
  • சிறந்த சகலதுறை வீராங்கனை (ஒருநாள்) – சமரி அதபத்து
  • சிறந்த துடுப்பாட்ட வீராங்கனை (T20I) – சமரி அதபத்து
  • சிறந்த பந்துவீச்சாளர் (T20I) – சஷிகலா சிறிவர்தன
  • சிறந்த சகலதுறை வீராங்கனை (T20I) – சஷிகலா சிறிவர்தன

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகும் ஹசன் அலி

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவரான ………

ஆண்களுக்கான சர்வதேச விருதுகள்

    • சிறந்த துடுப்பாட்ட வீரர் (டெஸ்ட்) – திமுத் கருணாரத்ன
  • சிறந்த பந்துவீச்சாளர் (டெஸ்ட்) – டில்ருவான் பெரேரா
  • சிறந்த சகலதுறை வீரர் (டெஸ்ட்) – தனன்ஜய டி சில்வா
  • சிறந்த துடுப்பாட்ட வீரர் (ஒருநாள்) – குசல் ஜனித் பெரேரா
  • சிறந்த பந்துவீச்சாளர் (ஒருநாள்) – லசித் மாலிங்க
  • சிறந்த சகலதுறை வீரர் (ஒருநாள்) – திசர பெரேரா
  • சிறந்த துடுப்பாட்ட வீரர் (T20I) – திசர பெரேரா
  • சிறந்த பந்துவீச்சாளர் (T20I) – லசித் மாலிங்க
  • சிறந்த சகலதுறை வீரர் (T20I) – இசுரு உதான

வாழ்நாள் சாதனையாளர் விருதுகள்

  • வாழ்நாள் சாதனையாளர் விருது – கே.எம்.நெல்சன்
  • வாழ்நாள் சாதனையாளர் விருது – நுஷ்கி மொஹமட்
  • வாழ்நாள் சாதனையாளர் விருது – லூசியன் மெரின்னகே
  • வாழ்நாள் சாதனையளர் விருது – பேர்சி அபேசிங்க

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<