ஆசிய மகளிர் கழக கரப்பந்தாட்டத்தில் இலங்கைக்கு 9ஆவது இடம்

114
asianvolleyball.net

சீனாவின் டியாஞ்சின் உள்ளக அரங்கில் நடைபெற்ற 5ஆவது ஆசிய மகளிர் கழக கரப்பந்தாட்டத் தொடரில் 9ஆவது இடத்துக்காக நேற்றுமுன்தினம் (04) நடைபெற்ற போட்டியில் துர்க்மெனிஸ்தானின் பினாகர் கழகத்தை 3-0 என்ற செட்கள் கணக்கில் வீழ்த்திய இலங்கை விமானப்படை மகளிர் கழகம் போட்டித் தொடரில் 9ஆவது இடத்தை பெற்றுக் கொண்டது.

10 ஆசிய நாடுகளைச் சேர்ந்த முன்னணி கழகங்கள் பங்குகொண்ட இம்முறை  ஆசிய மகளிர் கழக கரப்பந்தாட்டத் தொடரில் இலங்கை விமானப்படை மகளிர் அணி பி குழுவில் களமிறங்கியது.

முதல் போட்டியில் ஐப்பானின் ஹிசாமிட்சு ஸ்ப்ரிங்ஸ் கழகத்திடம் 3-0 என்ற செட்கள் அடிப்படையில் தோல்வியைத் தழுவிய இலங்கை விமனாப்படை கழகம், இரண்டாவது போட்டியில் துர்க்மெனிஸ்தானின் பினாகர் கழகத்தை 3-0 என்ற செட்கள் கணக்கில் வெற்றி கொண்டது.

அதனைத்தொடர்ந்து தாய்லாந்தின் ஜெனரல் சுப்ரீம் சொன்பூரி டெக் கழகம், வட கொரியாவின் ஏப்ரில் 25 விளையாட்டுக் கழகம் மற்றும் வியட்நாமின் வீ ரீ வி பின்ஹ் டியென் லோங் ஆன் கழகம் ஆகியவற்றிடம் தலா 3-0 என்ற செட்கள் கணக்கில் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவிய இலங்கை விமானப்படைக் கழகம், பி குழுவில் கடைசி இடத்தைப் பெற்றுக்கொண்ட துர்க்மேனிஸ்தானின் பினாகர் கழகத்துடன் 9ஆவது மற்றும் 10ஆவது இடத்தைத் தீர்மானிக்கும் போட்டியில் விளையாடத் தகுதிபெற்றது.

துர்க்மெனிஸ்தானின் கரப்பந்து அணியை வீழ்த்திய இலங்கை விமானப்படை

சீனாவின் டியான்ஜின் நகரில் நடைபெற்று வரும் ……..

இதன்படி, டியாஞ்சின் உள்ளக அரங்கில் நேற்றுமுன்தினம் (04) நடைபெற்ற குறித்த போட்டியில் ஆரம்பம் முதல் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை விமானப்படைக் கழகம், முதல் செட்டை 25-13 என இலகுவாக வெற்றி கொண்டது.

தொடர்ந்து நடைபெற்ற 2ஆவது மற்றும் 3ஆவது செட்களில் துர்க்மெனிஸ்தான் வீராங்கனைகள் இலங்கைக்கு பலத்த போட்டியைக் கொடுத்திருந்தனர். எனினும், எதிரணியின் வியூகங்களை முறிடித்து அபாரமாக விளையாடிய இலங்கை விமானப்படைக் கழகம், 25-22, 26-24 என குறித்த இரண்டு செட்களையும் கைப்பற்றி 9ஆவது இடத்தைக் கைப்பற்றியது.

ஆசிய கழக கரப்பந்தாட்டத் தொடரில் இலங்கைக்கு ஐந்தாவது இடம்

சீனா – தாய்ப்பேயில் நடைபெற்று வருகின்ற …..

முன்னதாக சீனா தாய்ப்பேயில் கடந்த வாரம் நிறைவுக்கு வந்த ஆடவருக்கான ஆசிய கழக கரப்பந்தாட்டத் தொடரில் இலங்கையைப் பிரநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட இலங்கை துறைமுக அதிகார சபை கழகம் ஐந்தாவது இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.  

இதேநேரம், நேற்று (05) நடைபெற்ற இறுதிப் போட்டியில் தாய்லாந்தின் ஜெனரல் சுப்ரீம் சொன்பூரி டெக் கழகமும், சீனாவின் டியான்ஞின் பொஹாய் பேங்க் கழகமும் பலப்பரீட்சை நடத்தின.

விறுவிப்பாக நடைபெற்ற இப்போட்டியை 25-18, 35-33, 16-25 மற்றும் 25-19 என்ற செட்கள் கணக்கில் கைப்பற்றிய சீனாவின் டியான்ஞின் பொஹாய் பேங்க் கழகம் சுமார் 6 வருடங்களுக்குப் பிறகு சம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

>> மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க <<