ஜயசூரியவின் சகதுறை ஆட்டத்தால் முதல் நாள் இலங்கை ஏ அணி வசம்

703

பங்களாதேஷுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை ஏ அணிக்கும் பங்களாதேஷ் ஏ அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட நான்கு நாட்கள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி இன்று (10) ஆரம்பமானது.  

முதல் இரண்டு போட்டிகளும் வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிவடைந்த நிலையில், சில்ஹெட்டில் இன்று ஆரம்பமான மோதல் தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் போட்டியாக அமைந்தது.

தொடர்ச்சியான சதங்களுடன் இலங்கை A அணிக்காக பிரகாசித்து வரும் திரிமான்ன

பங்களாதேஷ் அணியை முதல் இரண்டு போட்டிகளிலும் வழிநடாத்திய மொஸத்திக் ஹுஸைக்குப் பதிலாக இன்றைய போட்டியில் மொஹமட் மிதுன் தலைவராக செயற்பட்டார். போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. முதல் இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணிக்கு தலைமை தாங்கிய திமுத் கருணாரத்ன இப்போட்டியில் விளையாடாத நிலையில் லஹிரு திரிமாண்ணவின் தலைமையில் இலங்கை அணி இன்று களமிறங்கியது.

அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி இலங்கைப் பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வதில் பெரிதும் சிரமப்பட்டனர். எனவே, அவர்கள் முதல் நாளிலேயே சகல விக்கெட்டுகளையும் இழந்து 167 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டனர்.

பங்களாதேஷ் அணி சார்பாக அதிக பட்சமாக சாகிர் ஹஸன் 42 ஓட்டங்களையும் சன்ஸமுல் இஸ்லாம் 41 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர். பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக பிரபாத் ஜயசூரிய, மலிந்த புஷ்பகுமார மற்றும் செஹான் ஜயசூரிய ஆகியோரும் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தினர்.

அம்லா, டு ப்ளேசிஸ் ஆகியோரின் சிறந்த துடுப்பாட்டத்தோடு பயிற்சி போட்டி நிறைவு

பின்னர், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 5 ஓட்டங்களை பெற்றிருந்த போது தனது முதலாவது விக்கெட்டை இழந்தது. தொடர்ந்து களமிறங்கிய அணித் தலைவரும் முதல் இரண்டு போட்டிகளிலும் இரண்டு சதங்களை பெற்ற வீரருமான லஹிரு திரிமாண்ண 12 ஓட்டங்களுடன் அரங்குக்கு திரும்பினார்.  

தொடர்ந்து அஷான் பிரியஞ்சன் ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழக்க இலங்கை அணி 47 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.  பின்னர் சரித் அசலன்க மற்றும் செஹான் ஜயசூரிய ஆகியோர் பிரிக்கப்படாத இணைப்பாட்டமாக 31 ஓட்டங்களை பெற்றனர். செஹான் ஜயசூரிய ஆட்டமிழக்காமல் 53 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

எனவே, தனது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி போதிய வெளிச்சம் இன்மையின் காரணமாக இன்றைய முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு  வரும்போது மூன்று விக்கெட்டுக்களை இழந்து 78 ஓட்டங்களை பெற்றுள்ளது.

முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி ஏழு விக்கெட்டுக்கள் எஞ்சியிருக்க 89 ஓட்டங்களால் பங்களாதேஷ் அணியை விட பின்தங்கிய நிலையில் உள்ளது.  

போட்டியின் சுருக்கம்  

பங்களாதேஷ் ஏ அணி – 167 (62.3) – சாகிர் ஹசன் 42, சன்சமுல் இஸ்லாம் 41, பிரபாத் ஜயசூரிய 3/12, ஷெஹான் ஜயசூரிய 3/47, மலிந்த புஷ்பகுமார 3/48

இலங்கை ஏ அணி – 78/3 (21.4) – ஷெஹான் ஜயசூரிய 53*, சௌம்ய சர்க்கர் 1/04  

போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை நடைபெறவுள்ளது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க