6 போட்டிகளுக்காக பங்களாதேஷ் செல்லும் இலங்கை “A” அணி

856

இலங்கை “A” கிரிக்கெட் அணியானது இம்மாத இறுதியில் பங்களாதேஷுக்கு ஒரு மாதகாலத்தை அண்மித்த சுற்றுப் பயணத்தினை மேற்கொள்கின்றது. இதன் மூலம் அங்கு நான்கு நாட்கள் கொண்ட முதல்தரப் போட்டிகள் மூன்று கொண்ட தொடர் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் என்பவற்றில் இலங்கை வீரர்கள் விளையாடவுள்ளனர்.  

இப்போட்டிகளுக்கான இலங்கை “A” அணி இம்மாதம் 23 ஆம் திகதி இலங்கையிலிருந்து பங்களாதேஷுக்கு புறப்படவுள்ளது. இந்த இலங்கை அணியின் குழாத்தில் அனுபவமிக்க வீரர்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றனர்.

இலங்கைக்கு எதிரான தொடரில் சச்சின் மகன் அர்ஜூனுக்கு வாய்ப்பு

இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் …

இறுதியாக மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை “A” கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற்றிருந்த உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரினை 2-1 எனக் கைப்பற்றி இருந்ததுடன், ஒரு நாள் தொடரினை 1-1 என சமநிலைப்படுத்தியிருந்தது.

பங்களாதேஷ் சுற்றுப் பயணத்திற்கான இலங்கையின் “A” குழாம் முன்னாள் துடுப்பாட்ட வீரர் அவிஷ்க குணவர்தனவினால் பயிற்றுவிக்கப்படவுள்ளதோடு, சரித் சேனநாயக்கவினால் முகாமைத்துவம் செய்யப்படவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர் அட்டவணை

நான்கு நாட்கள் கொண்ட முதல்தரப் போட்டித் தொடர்

முதலாவது போட்டி – ஜூன் 26 தொடக்கம் 29  வரை – ஷேக். கமால் சர்வதேச மைதானம், கோக்ஸ் பஷார்

இரண்டாவது போட்டி – ஜூலை 03 தொடக்கம் 06 வரை – ஷேக். கமால் சர்வதேச மைதானம், கோக்ஸ் பஷார்

மூன்றாவது போட்டி – ஜூலை 10 தொடக்கம் 13 வரை – சில்லேட் சர்வதேச மைதானம், சில்லேட்

ஒரு நாள் தொடர்

ஜூலை 17 – முதலாவது ஒரு நாள் போட்டி – சில்லேட் சர்வதேச மைதானம், சில்லேட்

ஜூலை 19 – இரண்டாவது ஒரு நாள் போட்டி – சில்லேட் சர்வதேச மைதானம், சில்லேட்

ஜூலை 22 – மூன்றாவது ஒரு நாள் போட்டி – சில்லேட் சர்வதேச மைதானம், சில்லேட்

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…