இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சிப் போட்டிகளில் மெதிவ்ஸ் உட்பட முன்னணி வீரர்கள்

2413

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை முன்னிட்டு நடைபெறவுள்ள இரண்டு பயிற்சிப் போட்டிகளுக்கான அணிக் குழாத்தில் இலங்கை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் உட்பட முன்னணி வீரர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.

இளம் வீரர் கமிந்து மெண்டிஸிற்கு அறிவுறை வழங்கிய திசர பெரேரா

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் …

இலங்கைஇங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டு பயிற்சிப் போட்டிகள் எதிர்வரும் 30-31ம் மற்றும் நவம்பர் 1-2ம் திகதிகளில் கொழும்பு என்.சி.சி மற்றும்  கொழும்பு கிரிக்கெட் கழக (சி.சி.சி) மைதானங்களில் நடைபெறவுள்ளன.

குறித்த இரண்டு போட்டிகளுக்குமான குழாம்களை இலங்கை கிரிக்கெட் சபை நேற்று அறிவித்தது. இதன்படி, பயிற்சிப் போட்டிகளின் அணித் தலைவராக லஹிரு திரிமான்னே நியமிக்கப்பட்டுள்ளதுடன், முதல் போட்டிக்கான குழாத்தில் முன்னாள் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் இணைக்கப்பட்டுள்ளார். அணித் தலைவர் பதவியை இராஜினாமா செய்த பின்னர், மெதிவ்ஸிற்கு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் T20 தொடர்களில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனினும் டெஸ்ட் குழாத்தில் பெயரிடப்பட்டுள்ள இவர், பயிற்சிப் போட்டிக்கான குழாத்தில் இணைப்ப்பட்டுள்ளார்.

இவருடன், இலங்கை டெஸ்ட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக செயற்பட்டு வந்த கௌஷால் சில்வா மற்றும் லஹிரு திரிமான்னே ஆகியோரும் இரண்டு குழாம்களிலும் பெயரிடப்பட்டுள்ளனர். அதேநேரம், கணுக்கால் உபாதை காரணமாக ஆசியக் கிண்ணம் மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரிலிருந்து நீக்கப்பட்டிருந்த லஹிரு குமாரவும் பயிற்சிப் போட்டியில் விளையாடவுள்ளார்.

அத்துடன், டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகி, நட்சத்திர துடுப்பாட்ட வீரராக வலம் வந்த ரொஷேன் சில்வா பயிற்சிப் போட்டிக்கான குழாத்தில் இடம்பெற்றுள்ளார். இவர் ஆரம்பத்தில் சிறப்பான துடுப்பாட்டங்களை வெளிப்படுத்திய போதும், கடந்த 10 இன்னிங்ஸ்களில் ஒரு அரைச்சதமேனும் கடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

அணித் தலைவர் திசர பெரேரா போராடியும் இலங்கைக்கு தோல்வி

இலங்கை அணிக்கு எதிராக ஆர்.பிரேமதாஸ …

இதேவேளை, மேற்குறிப்பிட்ட வீரர்களுடன் இலங்கை தேசிய அணியில் விளையாடி வரும் துஷ்மந்த சமீர, கசுன் ராஜித, சதீர சமரவிக்ரம மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோரும் பயிற்சிப் போட்டிக்கான குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.

முதல் பயிற்சிப் போட்டிக்கான குழாம்

லஹிரு திரிமான்னே (தலைவர்), கௌஷால் சில்வா, சதீர சமரவிக்ரம, அஞ்செலோ மெதிவ்ஸ், சரித் அசலங்க, கமிந்து மெண்டிஸ், மனோஜ் சரத்சந்திர, அஷான் பிரியன்ஜன், ஜெப்ரி வெண்டர்சே, கசுன் ராஜித, லஹிரு குமார, நிசான் பீரிஸ், செஹான் மதுசங்க, ரொஷேன் சில்வா, பதும் நிசங்க

இரண்டாவது பயிற்சிப் போட்டிக்கான குழாம்

லஹிரு திரிமான்னே (தலைவர்), கௌஷால் சில்வா, அவிஷ்க பெர்னாண்டோ, சரித் அசலங்க, கமிந்து மெண்டிஸ், ரொஷேன் சில்வா, மனோஜ் சரத்சந்திர, அஷான் பிரியன்ஜன், ஜெப்ரி வெண்டர்சே, செஹான் மதுசங்க, நிஷான் பீரிஸ், லஹிரு குமார, பதும் நிசாங்க, துஷ்மந்த சமீர

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க