தொடர்ச்சியாக மூன்று தேசிய சாதனைகளை முறியடித்த அகலங்க பீரிஸ்

88

நேபாளத்தில் நடைபெற்று வரும் தெற்காசிய விளையாட்டு விழாவில் (SAG) இன்று (8) நடைபெற்ற நீச்சல் போட்டிகளின் முடிவுகளின்படி, இலங்கை நீச்சல் அணி 4 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.

இதில், ஆண்களுக்கான 50 மீற்றர் பின்னோக்கிய நீச்சல் போட்டியில் பங்கேற்ற அகலங்க பீரிஸ் இன்றைய தினமும், புதிய தேசிய சாதனையை படைத்திருந்தார். நேற்று முன்தினம் 200 மீற்றர் பின்னோக்கிய நீச்சலில் புதிய தேசிய சாதனை படைத்திருந்த அகலங்க பீரிஸ், நேற்றைய தினம் 100 மீற்றர் பின்னோக்கிய நீச்சலில் தேசிய சாதனையை படைத்திருந்தார்.

நீச்சல் போட்டிகளில் தேசிய சாதனையை முறியடித்த அகலங்க, கிரன்

தெற்காசிய விளையாட்டு விழாவில் கடந்த இரண்டு நாட்களிலும் 4 தங்கங்களை…

இந்த நிலையில், இன்றைய தினமும் இவர் 50 மீற்றர் பின்னோக்கிய நீச்சல் போட்டியில் தேசிய சாதனை படைத்திருந்தார். கடந்த ஏப்ரல் மாதத்தில் இவர் நிகழ்த்திய 25.60 என்ற சாதனையை முறியடித்து, 24.95 செக்கன்களில் போட்டித் தூரத்தை அடைந்திருந்தார்.

அகலங்க பீரிஸிற்கு அடுத்தபடியாக 200 மீற்றர் வண்ணத்துப்பூச்சி நீச்சலில் சந்தேவ் சேனாரத்ன வெள்ளிப் பதக்கத்தை வெற்றிக்கொண்டார். இவர் போட்டித் தூரத்தை 2.06.29 நிமிடங்களில் கடந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

அதனையடுத்து, ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு என நடத்தப்பட்ட 800 மீற்றர் சாதாரண நீச்சல் அஞ்சலோட்டத்தில் இலங்கை ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தனர். ஆண்கள் அணி போட்டித் தூரத்தை 7.42.48 செக்கன்களில் கடந்திருந்ததுடன், பெண்கள் அணி 8.54.91 செக்கன்களில் போட்டித் தூரத்தை கடந்திருந்தது.

>>Photos: Day 07 | South Asian Games 2019<<

இதேவேளை, இலங்கை இரண்டு வெண்கலப் பதக்கத்தை இன்றைய தினம் வென்றிருந்தது. ஆண்களுக்கான 50 மீற்றர் பின்னோக்கிய நீச்சலில் செவிந்த டி சில்வா (25.79) மற்றும் பெண்களுக்கான 400 மீற்றர் சாதாரண நீச்சலில் ரமுதி சமரகோன் (4.41.91) ஆகியோர் வெண்கலப் பதக்கத்தை வென்றிருந்தனர்.

>>தெற்காசிய விளையாட்டு விழா கொடர்பான மேலதிக தகவல்களை படிக்க<<